எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஃபோ ஃபாங் சியாகட்டுரைகள்

அற்புத மழை

சீனாவில் யூனான் மாகாணத்தில் மலைப்பாங்கான பகுதியில் வாழ்ந்து வரும் கிராம மக்களின் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அவர்களது முக்கிய உணவு சோளமும், அரிசியுமாகும். 2012ம் ஆண்டு பயங்கரமான வறட்சி அப்பகுதியை தாக்கினதினால் பயிர்கள் அனைத்தும் வாடிவிட்டன. அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவரும் மிகவும் கவலைப்பட்டார்கள். மூட நம்பிக்கையுள்ள அநேக செயல்களின் மூலம் வறட்சியை நிறுத்த மக்கள் முயன்றார்கள். எதுவுமே பயனளிக்காமல் போன பொழுது அங்கு வாழ்ந்து வந்த 5 கிறிஸ்தவர்கள் அந்த மக்கள் மூதாதயருடைய ஆவிகளை வருத்தப்படுத்தினதினால்தான் வறட்சி நிலவுகிறதென்று…

தேவனுக்குக் கரிசனை இல்லையா?

குடிபோதையில் வாகனத்தை ஓட்டினவன் காயமின்றித் தப்பித்துக்கொள்கிறான், ஆனால் அதே சமயம் அவனால் விபத்துக்குள்ளான, குடிபோதையில்லாத மனிதன் பயங்கரமாக காயப்படுகிறான். ஏன்? தீமை செய்கிறவர்கள் செழித்தோங்குகிறார்கள். நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள் ஏன்? உங்களது வாழ்க்கையில் ஏற்படுகிற நிகழ்ச்சிகளைக் குறித்து அநேகமுறை நீங்கள் மனக்குழப்பமடைந்து “தேவன் என்னைக் குறித்து கரிசனைப்படுகிறாரா?” என்று கதறியுள்ளீர்கள்.

அநீதியும், கொடுமையும் கட்டுக்கு மிஞ்சி செல்லும் சூழ்நிலைகளை யூதாவில் கண்டபொழுது ஆபகூக் என்ற தீர்க்கன் இதே கேள்வியைக் கேட்டு மனதில் போராடினான். (ஆபகூக் 1:1-4) அவனது குழப்பமான நிலையில் தேவன் எப்பொழுதும் இந்த நிலையை…

மக்களின் சக்தி

ஆஸ்திரேலியாவிலுள்ள பெர்த் புகை வண்டி நிலையத்தில் ஒரு மனிதன் புகை வண்டியில் ஏறும்பொழுது கால் நழுவினதினால், அவனது கால் புகை வண்டியின் பெட்டிக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் மாட்டிக்கொண்டது. அவனுக்கு உடனே உதவிசெய்ய அநேக பயணிகள் முன்வந்தார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து அவர்களது முழுபலத்தையும் பயன்படுத்தி, புகை வண்டியை பிளாட்பாரத்தைவிட்டு சாய்த்தார்கள். கால்மாட்டிக் கொண்ட மனிதன் விடுவிக்கப்பட்டான். புகை வண்டி பயணச் சேவைக்கான செய்தி தொடர்பாளரான டேவிட் ஹைனஸ் “ஒவ்வொரு மனிதனும் அவர்களது முழு சக்தியையும் கொடுத்தார்கள் மிகவும் படுகாயம் அடையவிருந்த ஒருவரை மக்களின் சக்திதான்…