எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லிண்டா வாஷிங்டன்கட்டுரைகள்

கோபத்தைக் கையாளுதல்

நான் என் சிநேகிதியோடு உணவருந்தும் போது தன் குடும்ப நபர் ஒருவரினால் தான் எத்தனை வெறுப்படைந்திருக்கிறேன் என வெளிப்படுத்தினாள். அந்த நபர் தன்னை எரிச்சலூட்டும் வகையில் புறக்கணிப்பதையும் அல்லது கேலி செய்வதையும், அவனிடம் நேரடியாக இப்பிரச்சனையை குறித்து சந்திக்க முயலும்போது அவன் ஏளனமான வார்த்தைகளால் பதிலளித்ததையும் அவன் மீதுள்ள கோபத்தால் வெடித்தாள். இருவரும் ஒருவரையொருவர் குற்றப்படுத்த, அக்குடும்பத்தின் பிளவு அதிகமானது.

நானும் முன்பு கோபத்தில் இதைப் போன்றுதான் இருந்தேன். நானும் எதிர்நோக்குகின்ற மக்களோடு கடினமான நேரங்களைச் சந்தித்தேன். ஒரு நண்பரோ, உறவினரோ ஏதாவது சொன்னால் அவர்கள் எதைச் சொல்ல விரும்புகிறார்கள் என்பதை உடனே அடக்கிவிட்டு வேறொரு அர்த்தத்தைக் கொண்டுவந்து சிறிது நேரத்தில் கோபத்தில் வெடிப்பேன்.

இதனால் தான் பவுல் அப்போஸ்தலன் எபேசியர் 4:26ல் “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” என்கிறார். கோபத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். தவறான, காரியங்கள் மீது உங்கள் சிந்தனையைச் செலுத்தாதீர்கள் அது கசப்பிற்கு வழிவிடுக்கும் தேவனின் உதவியை நாடுங்கள். “பொய்யைக் களைந்து அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக கடவன்” (எபே. 4:25).

யாரிடமாவது உனக்கு பிரச்சனையுண்டா? அதனைத் தீர்த்துக் கொள்வதை விட்டு முதலில் அதை தேவனிடம் விட்டு விடுங்கள். அவர் கோபத்தீயை தன்னுடைய வல்லமையுள்ள மன்னிப்பினாலும், அன்பினாலும் தணிப்பார்.

கவர்ச்சிக்கப்படுதல்!

கி.பி. 2016ன் கோடைகாலத்தில், போக்கிமேன் கோ எனப்படும் ஸ்மார்ட்போனில் விளையாடும் விளையாட்டை விளையாடுமாறு எனது அக்கா மகள் என்னைக் கட்டாயப்படுத்தினாள். இது போனின் கேமரா உதவியால் விளையாடுவது. போக்கிமேன் என்றழைக்கப்படும் சிறிய ஜீவன்களைப் பிடிப்பதே இவ்விளையாட்டின் நோக்கம். ஒரு போக்கிமேன் விளையாட வரும்போது, போனின் திரையில் ஒரு சிவப்பு, வெள்ளை பந்துகள் தோன்றும். ஒரு போக்கிமேனைப் பிடிக்க விளையாடுபவர் தனது விரலால் பந்தை கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அவற்றைப் வசப்படுத்த ஒரு கவர்ச்சிப் பொருளைப் பயன்படுத்தும் போது போக்கிமேன்கள் எளிதாக பிடிபட்டுவிடுகின்றன.

கவர்ச்சியினால் பிடிபடுபவை போக்கிமேன் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல விசுவாசிக்கு தான் எழுதும் புதிய ஏற்பாட்டு மடலில், இயேசுவானவரின் இளைய சகோதரரான யாக்கோபு, “அவனவன் தன்தன் இச்சையினால் இழுக்கப்படுகிறான்” (1:14) என்று நினைவு படுத்துகிறார். வேறு விதமாய்ச் சொல்ல வேண்டுமெனில், நம்மைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும்படி, சோதனையுடன் நமது இச்சைகள் இணைந்து செயல்படுகின்றன. நமது பிரச்சனைகளுக்காக தேவனையோ அல்லது சாத்தானையோ குறை கூற நாம் எத்தனித்தாலும், உண்மையாய் ஆபத்து நமக்குள்தான் இருக்கிறது.

ஆனால், நல்ல செய்தி இருக்கிறது. நம்மைச் சோதனைக்குட்படுத்துகின்ற காரியங்களைக் குறித்து தேவனிடம் பேசுவதன் மூலம் சோதனையின் கவர்ச்சியிலிருந்து நாம் தப்பலாம். மேலும் யாக்கோபு விளக்குகிறார்: “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல” (1:13). நமது மனித சுபாவம் தவறைச் செய்ய வாஞ்சையாயிருப்பது தேவனுக்குத் தெரியும் தேவன் நமக்கு வாக்களித்துள்ள ஞானத்தை நாம் அவரிடத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் (1:1-6).

அவரது செட்டைகளின் கீழ்!

பாதுகாப்பைக் குறித்து நான் யோசிக்கையில், உடனடியாக பறவையின் சிறகுகளை நினைப்பதில்லை. பறவை இறகுகள் பாதுகாப்பை அளிப்பதில் மிகக் கீழானவை போலத் தோன்றினாலும், அது சரியான மதிப்பீடல்ல.

பறவை இறகுகள் தேவனது வடிவமைப்பு திறனுக்கு அற்புதமான ஒரு உதாரணம். பறவை இறகுகளின் மென்மையான ஒரு பாகமும், குஞ்சம் போன்ற ஒரு பாகமும் உள்ளன. மென்மையான பகுதியில் கொக்கி போன்ற பல சிறிய கூர் முனைகள் உள்ளன. குஞ்சம் போன்ற பகுதி பறவை வெப்பமாயிருக்க உதவுகிறது. இவ்விரண்டு பகுதிகளும் காற்று மற்றும் மழையிலிருந்து பறவையைக் காக்கின்றது. ஆனால் பல பறவைக் குஞ்சுகளுக்கு குஞ்சமும், வளர்ச்சியடையாத சிறகுகளும் இருப்பதால், தாய்ப் பறவை கூட்டில் தனது சொந்த சிறகுகளால் அவற்றை மூடி காற்று மற்றும் மழையிலிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது.

சங்கீதம் 91:4லும் மற்ற வேதாகமப் பகுதிகளிலும் தேவன் தமது சிறகுகளால் நம்மை மூடுகிறார் என்பது சுகவாழ்வையும் பாதுகாப்பையும் குறிக்கிறது (சங்கீதம் 17:8). நமது மனதில் தோன்றும் படம், ஒரு தாய்ப் பறவை தன் குஞ்சுகளை சிறகினால் மூடிப் பாதுகாப்பதாகும். பயமுறுத்தும் புயல் மற்றும் கஷ்ட நேரத்தில் பெற்றோர் தங்கள் கரங்களால் பிள்ளைகளை அரவணைத்து ஆறுதல் அளிப்பதைப் போல நமது மனப் புயல்களில் தேவனது ஆறுதலளிக்கும் பிரசன்னம் நமக்கு பாதுகாப்பையும் அரணையும் அளிக்கிறது.

நமது முகங்கள் தேவனை நோக்கியிருக்கையில் என்ன உபத்திரவம் கஷ்டம் வந்தாலும் நாம் அவற்றைப் பயமின்றி எதிர்கொள்ளலாம். அவர் நமது அடைக்கலம் (சங். 91:2,4,9).