குமாரனைப் பிரதிபலித்தல்
வட அட்சரேகையில் மலைகளால் சூழப்பட்ட இடமான நார்வேயிலுள்ள ருஷ்ஷீகானில், ஓர் ஆண்டில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இயற்கையான சூரிய ஒளி கிடைக்காது. நகரத்திற்கு ஒளிதர அந்த நகர மக்கள், மலைகளின் மேல் பெரிய கண்ணாடிகளை நிறுத்தி, சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்து, அந்நகர மையத்தில் ஒளி விழச் செய்தார்கள். அந்த மிகப்பெரிய கண்ணாடிகள், சூரியன் உதிப்பதிலிருந்து அஸ்தமிக்கும் வரை சுழன்று கொண்டே இருப்பதால், அந் நகரத்திற்கு சூரிய ஒளி தொடர்ந்து கிடைத்தது.
அந்தக் காட்சியைப் போலவே கிறிஸ்தவ வாழ்க்கையும் இருக்க வேண்டுமென்று…
பெயரைச் சொல்லுங்கள்
ஒரு திருச்சபையிலிருந்த ஒரு குழுவினர் அவர்களது கூடுகையில் செய்தி அளிப்பதற்காக ஒரு செய்தியாளரை அழைத்தார்கள். “ தேவனைப்பற்றி பேசுங்கள் ஆனால் இயேசுவை விட்டு விடுங்கள்” என்று அந்தக் குழுவின் தலைவர் செய்தியாளரிடம் கூறினார்.
மிகவும் அதிர்ச்சி அடைந்த அந்த மனிதர் “ஏன்” என்று கேட்டார். “எங்களது குழுவிலுள்ள சில முக்கிய அங்கத்தினர்கள் இயேசு என்றால் சங்கடப்படுகிறார்கள். ஆகவே கடவுள் என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துங்கள், அப்பொழுது நாங்கள் நன்றாக உணருவோம்” என்று அந்தத்தலைவர் விளக்கினர்.
அவர்கள் கூறின கட்டளைகளை ஏற்றுக்கொள்வது செய்தியாளருக்கு பெரிய பிரச்சனையாக…
திரைக்குப் பின்னால்
எங்களது திருச்சபையின் வெளி ஊழியத்தின் நிறைவு நிகழ்ச்சி, நகரில் ஒரு ஆராதனையோடு முடிவடைந்தது. அந்த ஊழியத்திற்காக திட்டமிட்டு செயல்பட்ட குழுவிலிருந்த எங்கள் திருச்சபையின் வாலிப ஐக்கியத்தின் இசைக் குழுவினர், ஆலோசகர்கள், திருச்சபையின் தலைவர்கள் ஆகியோர் அந்த இறுதி நாளில் மேடைக்கு வந்தார்கள். உடனே நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியினால் கைகளைத் தட்டி அவர்களது கடினமான ஊழியத்திற்காக அவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்தினோம்.
அந்தக் குழுவில் ஒரு மனிதர், ஒருவராலும் காணப்படாமலே இருந்தார். ஆனால் அவர்தான் அக்குழுவின் தலைவர், ஒரு சில நாட்களுக்குப் பின் அவரை நான் பார்த்த…
பரலோகத்தில் பொக்கிஷம்
புதிதாகக் கட்டப்பட்ட எங்களது வீட்டில் கொடுக்கப்பட்ட மோசமான மின் இணைப்பினால், எங்களது புதிய வீடு தீப்பிடித்து எரிந்து போனது. ஒரு மணி நேரத்திற்குள்ளாக நெருப்பின் சுவாலை எங்கள் வீடு முழுவதையும் எரித்து சாம்பலாக்கி விட்டது மிஞ்சினது கட்டிடத்தின் இடிபாடுகள் தான். முன்னொரு முறை ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆராதனை முடிந்து வீடு திரும்பின பொழுது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிலுள்ள சில பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
குறைபாடுள்ள இவ்வுலகில் உலகப்பிரகாரமான ஆஸ்திகளை இழப்பது மிகவும் சாதாரணகாரியம். உதாரணமாக வாகனங்கள் திருடப்படுகின்றன, அல்லது மோதி விபத்திற்குள்ளாகின்றன, கப்பல்கள் மூழ்குகின்றன,…
நாம் அறிந்து கொள்ளலாம்
ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக ஒரு புகைவண்டியில் அமர்ந்திருந்தேன். திடீரென நான் சரியான வண்டியில் தான் உட்கார்ந்துள்ளேனா என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது. அந்த வழித்தடத்தில் நான் இதற்கு முன் பயணம் செய்தது கிடையாது அத்தோடு அந்த வழித்தடத்தைப் பற்றி யாரிடமும் கேட்கவுமில்லை. இறுதியாக சந்தேகம் அதிகரித்ததால் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி விசாரித்தேன்... நான் சரியான புகை வண்டியில்தான் இருந்தேன் என்பதைக் கேட்டு அறிந்துகொண்டேன்.
அந்த நிகழ்ச்சி நமது வாழ்க்கையில் சந்தேகம் எப்படி நமது நம்பிக்கையையும், மன உறுதியையும் குலைத்துப்போடுகிறதென்பதை நினைப்பூட்டியது.…
உபத்திரவங்கள் மூலம் கற்றுக் கொள்ளுதல்
அந்த மெகா திரையில் காணப்பட்ட தெளிவான படத்தில் அந்த மனிதனை உடலில் ஏற்பட்டிருந்த ஆழமான வெட்டுக் காயங்களை அருகிலும், தெளிவாகவும் காணமுடிந்தது. ஒரு இராணுவ வீரன் அந்த மனிதனின் அடிக்க, இரத்தத்தினால் கறைபட்டிருந்த முகத்தையுடைய அந்த மனிதனை சூழ்ந்து நின்ற ஒரு கூட்ட மக்கள் கோபத்துடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள். திறந்த வெளி திரையரங்கின் அமைதியான சூழ்நிலையில் அந்தக் காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்தது. ஆகவே அந்த மனிதனுக்கு ஏற்பட்ட வலியை நானே உணர்ந்ததால் அதிகம் மனஉளைச்சல் கொண்டு முகத்தைச் சுழித்துக் கொண்டேன். ஆனால் இது…
சுகந்தவாசனையும் ஒரு கடிதமும்
ஒவ்வொரு முறையும் ஒரு ரோஜாச் செடி அல்லது ஒரு பூங்கொத்தின் அருகில் செல்லும் பொழுதெல்லாம் ஒரு பூவை இழுத்து அதன் இனிய வாசனையை முகர்ந்துப் பார்ப்பதை என்னால் தவிர்க்க இயலாது. அப்பூக்களின் இனிய வாசனை என் இருதயத்தில் இனிய உணர்வுகளைத் தூண்டும்.
அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பு கொரிந்து பட்டணத்திலுள்ள கிறிஸ்தவர்களுக்கு, பவுல் அப்போஸ்தலன் கடிதம் எழுதினபொழுது, நாம் கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்களானதால் “எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”
(2 கொரி 2:14) என்று எழுதியுள்ளார். அவருடைய…