எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கிம்யா லோடெர்கட்டுரைகள்

தேவனை அடையாளம் காணுதல்

கால் பெருவிரலை ஊன்றி சுற்றாட்டம் ஆடும் முறை (பிரு எட்) என்பது கூட்டு நடனக்குழுவில் நடனமாடும் முக்கிய பெண் நடன கலைஞர்களும் அதைப்போல மற்ற நடன கலைஞர்களும் பயன்படுத்தும் ஒரு நடன முறையாகும். சிறுமியாக எனது நவீன நடன வகுப்பில் அவ்வாறு ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். சுழன்று, சுழன்று, மயக்கமுண்டாகி தரையில் விழுமட்டும் அவ்வாறு ஆடுவேன். ஆனால் நான் பெரியவளானபோதோ, என் சமநிலையை, கட்டுப்பாட்டை பேணுவதற்கு நான் ஒரு யுத்தியை கற்றுக்கொண்டேன், அதுதான் " அடையாளம் காணுதல்" ஒரு புள்ளியை அடையாளம் வைத்துக்கொண்டு ஒவ்வொரு சுற்றிலும் என்  கண்கள் அதையே பார்க்கும்படி இருக்கையில் நான் முழு சுற்று வட்டமடித்தேன். என் "பிரு எட்" கலையில் கைதேர்ந்தவளாகவும், அதை அற்புதமாக ஆடவும் எனக்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரே ஒரு மையப்புள்ளி.

நாம் அனைவருமே வாழ்வில் பல திருப்பங்களையும், வளைவுகளையும் சந்திக்கிறோம். நாம் பிரச்சனைகளையே கணித்துக்கொண்டிருந்தால், நாம் எதிர்கொள்ளும் காரியங்கள் கையாள முடியாதவைகளாய் தோன்றும், நம்மை மயக்கமடைய செய்து கிழே விழத்தள்ளும். வேதம் நம்மை நினைவூட்டுகிறது, நாம் நமது மனதை உறுதியாய் வைத்துக்கொண்டால் அதாவது தேவனை கவனிப்போமானால், அவர் நம்மை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார். (ஏசாயா 26:3). பூரண சமாதானமென்றால் நம் வாழ்வில் எவ்வளவு திருப்பங்கள் வந்தாலும், நாம் அமைதியாக இருக்கலாம், நம்முடைய பிரச்சனைகள், சோதனைகள் அனைத்திலும் தேவன் நம்மோடிருப்பார் என்ற நிச்சயத்தோடு இருக்கலாம். அவரே "நித்திய கன்மலையாயிருக்கிறார்" (வ.4) நம்முடைய கண்கள் பதியவேண்டிய முக்கியபுள்ளி அவரே ஏனெனில் அவருடைய வாக்குத்தத்தங்கள் மாறாதவைகள்.

அவரிடம் ஜெபத்தின் மூலமாக சேர்ந்து அவருடைய வாக்குத்தத்தங்களை வேத வசனங்களில் வாசித்து, நம் கண்களை அவர் மேலேயே பதித்து ஒவ்வொரு நாளையும் கடந்துசெல்வோமாக. வாழ்நாள் முழுதும் நாம் அற்புதமாய் கடந்துச் செல்ல நம் தேவனை, நம் நித்திய கன்மலையை உதவிக்காக சார்ந்துகொள்வோமாக.

கருத்து வேறுபாடுகளைக் கையாளுவது

சமூக ஊடகமான ட்விட்டர் மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட ஒரு தளத்தை உருவாக்கியது. சமீபத்தில் இது சிக்கலாகிவிட்டது. அது ஒத்துவராத அணுகுமுறைகள், வாழ்க்கை முறைகளைப் பற்றிய கண்டனங்களை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகிவிட்டது. நாம் அதில் லாக்ஆன் செய்தால், ஒரு நபராவது “டிரெண்டிங்”ல் உலவுவார். அவர் பெயரை சொடுக்கினால்; அதனால் ஏற்பட்ட சர்ச்சையைப் பற்றி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

நாம் மக்கள் உடுத்தும் ஆடைகளைக் குறித்த நம்முடைய கருத்துக்களை வெளிப்படையாய் விமர்சிக்க கற்றுக்கொண்டோம். ஆனால் கிறிஸ்தவ விசுவாசிகளாய் அழைக்கப்பட்டவர்களுக்கு விமர்சன சிந்தனையும், அக்கறையற்ற அணுகுமுறையும் ஏற்புடையதல்ல. கருத்து வேறுபாடுகளைக் கையாள நாம் விசுவாசிகளாய் “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” வாழவேண்டும் (கொலோசெயர் 3:12). “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" (வ.13) என்றும் வலியுறுத்துகிறார். 

நம்மோடு ஒத்துப்போகும் சுபாவம் கொண்டவர்களிடம் மட்டும் இணங்கிப்போவது போதுமானது அல்ல. நாமும் கிறிஸ்துவின் அன்பினால் மீட்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, கிறிஸ்து வழிகாட்டியது போல, நாமும் கிருபையையும் அன்பையும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டும்.