Joe Stowell | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread - Part 3

எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜோ ஸ்டோவெல்கட்டுரைகள்

பாராசூட் நாய்கள்

இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த பாராசூட் நாய்களைப்பற்றி அறிந்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். 1944 ஜூன் 6ம் தேதியான D-Day அன்று நேசப்படைகள் யுத்தத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த பொழுது, கண்ணி வெடிகள் நிறைந்த அப்பகுதியில், அந்த வெடிகள் புதைந்து இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து, அதனால் வர இருக்கும் ஆபத்தை முன்னதாகவே படை வீரர்களுக்கு அறிவிக்க, சக்திவாய்ந்த மோப்ப சக்தியுடைய நாய்களின் உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது. எதிராளிகள் இருக்கக் கூடிய இடத்திற்கு அப்பால் இருந்த நேசப் படை வீரர்களிடம் இந்த மோப்ப நாய்களை பாராசூட்டு மூலம்…

பட்டாணி வேண்டாம்

எனது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த பொழுது, ஒருநாள் இரவு உணவின் போது, பட்டாணி இருந்த தட்டை ஒருவருக்கொருவர் கடத்தினோம். அப்பொழுது எனது பிள்ளைகளில் ஒருவன் பிடிவாதமாக “வேண்டாம்” என்று கூறினான். “என்ன வேண்டாம்” என்று நாங்கள் பதிலுக்குக் கேட்டோம். “வேண்டாம் நன்றி” என்று கூறுவான் என்று எதிர்பார்த்தோம் அதற்குப் பதிலாக “பட்டாணி வேண்டாம்” என்று அவன் பதில் கூறினான். அவன் கூறின அந்தக்காரியம், நாம் கைக்கொள்ள வேண்டிய நன்நடத்தையுள்ள செயல்களின் முக்கியத்துவம் பற்றி எங்களுக்குள்ளாக பேசிக் கொள்வதற்கு வழிநடத்தியது. உண்மையில் இதுபோல பலமுறை எங்களுக்குள்ளாக…

தோட்டத்தில்

எனது முன்னோர்கள் மிக்சிகனில் முன்னோடிகளாகக் குடியேறினவர்களாவார்கள். அவர்களது குடும்பங்களைப் போஷிக்க நிலத்தை சுத்தப்படுத்தி, பண்படுத்தி தானியங்களைப் பயிரிட்டு தோட்டங்களை ஏற்படுத்தினார்கள். வேளாண்மை செய்யும் தொழில் அவர்களிடமிருந்து பல தலைமுறைக்கு கடத்தப்பட்டது. எனது தகப்பனார் மிக்சிகனிலுள்ள ஒரு பண்ணையில் வளர்ந்தார். அவர் தோட்டத் தொழிலை அதிகம் நேசித்தார். அதனால் எனக்குத் தோட்டத் தொழிலும், தோட்டத்திலிருந்த சத்துள்ள மண்ணின் வாசனையும் மிகவும் பிடித்தமாக இருந்தது. அழகிய பூக்களையும் வாசனை மிகுந்த ரோஜாச் செடிகளையும் வளர்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஓய்வு நேரப் பணியாகும். களைகள் மட்டும் இல்லாமல்…