very indian christmas tamil home page
கிறிஸ்துமஸ் மற்றும் டிசம்பர் 25வது நாள் பற்றிய குழப்பம் தான் என்ன? வரலாற்று ரீதியாக, கி.பி. 336 ஆண்டில்தான் கிறிஸ்துமஸ் (கிறைஸ்ட்ஸ் மாஸ்) முதன்முறையாக கொண்டாடப்பட்டது என்பதற்கு முதல் பதிவு உள்ளது, அது கான்ஸ்டன்டைனின் காலம். ஆரம்பத்தில், கிழக்கத்திய சபைகள் அதை ஜனவரி 6-ல் கொண்டாடின. இப்போதைய தேதியான (டிசம்பர் 25) ரோமானிய சாட்டனாலயாவின் (saturnalia) திருவிழாவிற்கு (டிசம்பர் 17-23) மாற்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்று பெரும்பாலான அறிஞர்கள் நம்புகிறார்கள், இது குளிர்கால சங்கராந்தி தேதி என்பதால்.
அதன் பின்னர், கிறிஸ்தவம் மேற்கு நோக்கி பரவியதால், அது பல உள்ளூர் கலாச்சார நடைமுறைகளை தனக்குள் சேர்த்துக்கொண்டது, அவைகள் கிறிஸ்துமஸ் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாறி இருப்பதை இப்போது நாம் ஏற்று கொண்டுள்ளோம். கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்திய நாள் மாலை எரிக்கப்படும் கட்டை, பரிசுகளை வழங்குதல் மற்றும் பல காரியங்கள், ஆண்டுகள் செல்லச் செல்ல சேர்க்கப்பட்டன. பின்னர், ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, அவர்கள் இந்த மரபுகளை அவர்களுடன் கொண்டு வந்தனர். அதனால் தான் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம், பனி இல்லாத போதும் –நாம் இன்னமும், குளிர்காலம் மற்றும் கலைமான் பனிபொழிவில் இருப்பதுபோல கற்பனை செய்து வாழ்த்து அட்டைகளை அனுப்புகிறோம்!
இப்போது, இந்தியாவில் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகையில், நம்மிடம் உள்ள இந்த பழக்கவழக்கங்களில் பலவற்றைத் தழுவி “பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியம்” என்று தேவதூதர்கள் பாடிய “சமாதான பிரபுவின்” பிறப்பை நினைவூட்டுவதற்கு, அவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆயினும்கூட, “சமாதான பிரபுவை,” கொண்டாடும் நாம் சண்டையால், போரால் மற்றும் ஒற்றுமை இன்மையால் துண்டாடபடுகிறோம் என்பது முரண்பாடாகத் தெரிகிறது; இது வெறுமனே நாம் வாழும் உலகில் மட்டுமல்ல ஆனால் நம் வீடுகளிலும், குடும்பங்களிலும் மற்றும் நம் உள்ளேயும் கூட உள்ளது.
எனவே, சக இந்தியர்களால் எழுதப்பட்ட இந்த பிரதிபலிப்புகளைப் படிக்கும்போது நான் பிரார்த்திக்கிறேன், நாம் “வெறுமையான கிறிஸ்துமஸாக” உணர மாட்டோம். அதற்கு பதிலாக, கிழக்கிலிருந்து வந்த வயதான ஞானிகளைப் போல நாம் இயேசுவை நாடுவோம்; நம்முடைய இருதயங்களில் அவருடைய சமாதானத்தை அனுபவிப்போம்.
நீங்கள் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட கிறிஸ்துமஸை பெற்றிடுங்கள்!
நம்மில் பெரும்பாலானோருக்கு, டிசம்பர் மாத…
tamil reading plan - letting go of anger - day 5
கோபத்துடன் கூடிய ஜெபங்கள்
மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோஅதைப்பின்னுக்கு அடக்கி வைக்கிறான் - நீதிமொழிகள் 29:11
குளிர் காலத்தில் ஒரு நாள், எனது தோட்டத்தில் பனிவாரிக்கருவியை எனது கைகளில் இறுகப் பிடித்துக் கொண்டு, மிகவும் கோபத்துடனும், வேகத்துடனும் மூலையிலிருந்த மழை நீர் வெளியேற்றுக் குழாயை அடைத்துக் கொண்டிருந்த உறை பனியை நீக்கி கொண்டிருந்தேன். என்னை அவர்களது ஜன்னல்களின் வழியாகப் பார்த்த என் அயலகத்தார் என்னைக் குறித்து என்ன எண்ணுவது என்று ஒருவேளை அவர்களுக்கே தெரியாதிருக்கும். நுண் பனியை நீக்கும் பொழுது ஒவ்வொரு காலடி…
Tamil reading plan - letting go of anger day 4
கோபத்தைக் கையாளுதல்
நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது - எபேசியர் 4:26
நான் என் சிநேகிதியோடு உணவருந்தும் போது தன் குடும்ப நபர் ஒருவரினால் தான் எத்தனை வெறுப்படைந்திருக்கிறேன் என வெளிப்படுத்தினாள். அந்த நபர் தன்னை எரிச்சலூட்டும் வகையில் புறக்கணிப்பதையும் அல்லது கேலி செய்வதையும், அவனிடம் நேரடியாக இப்பிரச்சனையை குறித்து சந்திக்க முயலும்போது அவன் ஏளனமான வார்த்தைகளால் பதிலளித்ததையும் அவன் மீதுள்ள கோபத்தால் வெடித்தாள். இருவரும் ஒருவரையொருவர் குற்றப்படுத்த, அக்குடும்பத்தின் பிளவு அதிகமானது.
நானும் முன்பு…
Tamil reading plan - letting go of anger - day 3
இரக்கமுள்ள ஒரு இருதயம்
உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு - கொலேசெயர் 3:12
ஒரு கூட்டமான கேளிக்கைப் பூங்காவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நாங்கள் ஏழு பேர் சென்றிருந்தோம். நாங்கள் அனைவரும் ஒரே வரிசையில் ஒன்றாக அமர ஆசைப்பட்டு ஒரு வரிசையில் நுழைந்த பொழுது, ஒரு பெண் எங்களுக்கிடையே புகுந்து அவ்வரிசையில் அமரச் சென்றாள். அப்பொழுது என் மனைவி நாங்கள் ஒரே வரிசையில் அமர விரும்புவதை தெரிவித்த பொழுது “அதெல்லாம் சரிப்படாது,” என பட்டென்று கூறிவிட்டு தன்னுடன்…
Tamil reading plan - letting go of anger - day 2
கோபத்திற்கு ஓர் மாற்று
வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை - நீதிமொழிகள் 20:3
ஓரு நாள் காலை ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் (Perth) வசித்து வரும் பியோன் முல்ஹோலாந்த் (Fionn Mulholland) என்பவருடைய கார் காணமல் போனது. தடை செய்யப் பட்ட இடத்தில் அவரது காரை நிறுத்தி இருந்தது நினைவுக்கு வந்தவுடன், அவரது காரை அதிகாரிகள் எடுத்து சென்றிருப்பார்கள் என்பதை புரிந்துகொண்டார். காரை எடுத்து சென்றதற்கான $600 தொகையையும், அபராதத் தொகையையும் எண்ணியவுடன் முல்ஹோலாந்த் விரக்தியடைந்தார். ஆனால் காரை மீட்கும்பொழுது தான் சந்திக்க போகும் நபர் மேல்…
Tamil Reading plan - Letting go of anger - day 1
பேசும்முன் யோசி
கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். சங்கீதம் 141:3
தன் மனைவி பிரபலமான ஹோட்டலுக்குப் போகும் வழியை சரிவரக் கண்காணிக்காததால் அங்கு போக இயலாததால் செங் மன அமைதியை இழந்தான். அவர்கள் குடும்பமாக ஜப்பானைச் சுற்றிப் பார்த்து விடுமுறையைக் கழித்து, வீடுதிரும்புமுன் கடைசியாக அந்தப் பிரபல ஹோட்டலில் திருப்தியாக உணவு உண்ண திட்டமிட்டிருந்தனர். இப்பொழுது கால தாமதத்தால் உணவருந்தாமல் விமான நிலையத்திற்குச் செல்லவேண்டியதாயிற்று. ஏமாற்றமடைந்த செங் , கவனமாகத் திட்டமிடாததற்காகத் தன் மனைவியைக் குறைகூறினான்.
பின்பு…