எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

அமைதியான உரையாடல்கள்

நீங்கள் எப்பொழுதாவது உங்களிடமே பேசிக்கொள்வதுண்டா? நான் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது சில சமயங்களில் அவ்வேலையிலுள்ள தவறுகளை சரி செய்வதற்கான வாய்ப்புகளை சத்தமாக நான் என்னிடமே சொல்லிக்கொள்வேன். பொதுவாக நான் என் கார் இஞ்சின் மூடிக்கடியில் (Bonnet / hood) இருக்கும் பொழுது இது நடக்கும். நம்மிடமே நாம் பேசிக்கொள்ளும் பழக்கம் அன்றாட வழக்கமாக நம் அனைவருக்கும் இருந்தாலும், என்னுடைய ‘உரையாடலை’ யாரவது கேட்க நேர்ந்தால் எனக்கு சங்கடமாக இருக்கும்.

சங்கீதப் புஸ்தகத்திலுள்ள சங்கீதக்காரர்கள் பொதுவாக அவர்களிடமே அவர்கள் பேசிக்கொள்வார்கள். 116வது சங்கீதத்தின் ஆசிரியரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஏழாம் வசனத்தில், “என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு” என்று எழுதுகிறார். கடந்த காலத்திலே தேவன் தமக்கு பாராட்டின கிருபையையும், நீதியையும் தனக்குத்தானே நினைவூட்டிக் கொள்வது நிகழ்காலத்திற்கு ஏற்ற ஆறுதலும், துணையுமாகும். இப்படிப்பட்ட “உரையாடல்களை” நாம் அதிகமாக சங்கீதப் புஸ்தகத்தில் காணலாம். 103வது சங்கீதத்தில், தாவீது, “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி
(வச. 1) என்று தன்னிடமே கூறிக்கொள்கிறான். மேலும், 62ம் சங்கீதம் 5ம் வசனத்திலே, “என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்” என்று தன்னைத்தானே திடப்படுத்துகிறார்.

தேவன் உண்மையுள்ளவர் என்பதையும், அவரின் மேல் உள்ள நம்முடைய நம்பிக்கையையும் நமக்கு நாமே நினைவுகூர்வது நல்லது. சங்கீதக்காரனைப் பின்பற்றி, கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளை சொல்லி நன்றி செலுத்தலாம். அப்படி செய்யும் பொழுது, நாம் பெலனடைவோம். கடந்த காலத்திலே நமக்கு உண்மையுள்ளவராய் இருந்த தேவன், நம்முடைய எதிர்காலத்திலும் அவருடைய அன்பை விளங்கச் செய்வார்.

வீட்டை எண்ணி ஏங்கி

பண்டையகால அலமாரி உயர கடிகார பெட்டிக்குள் (Grand Father’s Clock) என் தலையை நீட்டிக்கொண்டிருந்த பொழுது, அந்த அறைக்குள்ளே என் மனைவி நுழைந்தாள். “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். தயக்கத்துடன், “என் பெற்றோர் வீட்டிலுள்ள வாசனை, இந்த கடிகாரத்திலும் உள்ளது. அதனால், ஒரு கணம் என் வீட்டிற்கே நான் சென்றுவிட்டேன்,” என்று அதன் கதவை பூட்டியவாறு கூறினேன்.

வாசனைகளை நுகரும்பொழுது, அவை பல ஞாபகங்களைத் தூண்டி விடலாம். அந்த கடிகாரத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் தேசத்தின் மறுபக்கத்திலுள்ள என் பெற்றோர் வீட்டிலிருந்து கொண்டு வந்தோம். ஆனால், இப்பொழுதும் அந்த கடிகாரத்தின் மரக்கட்டையின் வாசம் என் சிறுவயதை எனக்கு ஞாபகமூட்டுகிறது.

எபிரெய புத்தகத்தின் ஆசிரியர், வேறு விதமாக தங்கள் வீட்டை குறித்து ஏங்கிக் கொண்டிருந்தவர்களைப் பற்றிக் கூறுகிறார். பின்னோக்கிப் பார்ப்பதற்குப் பதில், விசுவாசத்தோடு தங்கள் பரலோக வீட்டை எதிர்நோக்கி இருந்தார்கள். அவர்கள் விரும்பியதைப் பெற நெடுநாள் ஆனாலும், வாக்குத்தத்தம் பண்ணின தேவன் அவரோடு என்றென்றும் இருக்கும்படியாக நம்மை அழைத்துக்கொள்வார் என்பதில் உறுதியாய் இருந்தார்கள் (எபி. 11:13-16).

“நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது” என்று பிலிப்பியர் 3:20 நமக்கு ஞாபகப்படுத்துவதால், “அங்கேயிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” நாம் இயேசுவைக் கண்டு, அவரின்மூலம் தேவன் நமக்கு வாக்குப்பண்ணின எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளப் போகிறோம் என்கிற விசுவாசம், நம் நோக்கத்தில் உறுதியாய் இருக்க உதவுகிறது. நம்முடைய கடந்தகாலமோ நிகழ்காலமோ நமக்கு முன்னாக இருப்பதோடு ஒப்பிடவே முடியாது.

மாறாத அன்பு

சமீபகாலத்தில் நான் மேற்கொண்ட விமானப் பயணத்தில் விமானம் தரை இறங்குவது சற்று கடினமாக இருந்ததினால், விமானம் ஓடுதளத்தில் ஓடினபொழுது, விமானத்திற்குள்ளிருந்த நாங்கள் அங்கும் இங்குமாக அலைக்கப்பட்டோம். சில பயணிகள் மிகவும் பயத்துடன் இருந்தார்கள். ஆனால் எனக்குப்பின் அமர்ந்திருந்த சிறுமிகள் “ஆம், நாம் மறுபடியும் முன்புபோல வலது இடதுபுறமாக அசைவோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினபொழுது அந்த பயம் நிறைந்த சூழ்நிலை மாறிவிட்டது.

பொதுவாக குழந்தைகள் வாழ்க்கையில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான செயல்களை ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடனும், எளிய திறந்த மனதுடனும் ஏற்றுக்கொள்ளுகிறார்கள். “சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” (மாற். 10:15) என்று இயேசு கூறினபொழுது, குழந்தைகளின் இத்தன்மையை மனதில் வைத்துதான் ஒருவேளை அவர் அப்படி கூறியிருக்கலாம்.

வாழ்க்கையில் சவால்களும், இருதயத்தை நொறுக்கக்கூடிய நிகழ்ச்சிகளும் ஏற்படலாம். “அழும் தீர்க்கதரிசி” என்று அழைக்கப்படும் எரேமியா இதைக்குறித்து, நாம் அறிந்ததை விட அதிகமாக அறிந்திருந்தான். ஆனால் எரேமியாவின் கஷ்டங்கள் மத்தியில் “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது”(புலம். 3:22–23) என்ற ஓர் ஆச்சரியமான உண்மையை அவனிடம் கூறி தேவன் அவனை ஊக்குவித்தார்.

நம்முடைய வாழ்க்கையில், தேவனுடைய புதிய கிருபைகள் எந்த நேரத்திலும் அருளப்படலாம். அவருடைய கிருபை எப்பொழுதுமே உள்ளது. ஆனால், தேவன் ஒருவரால் மட்டுமே செய்யப்படக்கூடிய காரியங்களுக்காக, சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்புடன், விழிப்புடன் காத்திருக்கும்பொழுது மட்டுமே அவரது கிருபைகளை நம்மால் பார்க்க இயலும். நமது உடனடியான சூழ்நிலைகளை வைத்து தேவனுடைய நன்மைத் தன்மையை விளக்க இயலாது என்றும், வாழ்க்கையின் மிகக்கடினமான பகுதிகளை விட அவருடைய உண்மை பெரிதென்றும் எரேமியா அறிந்திருந்தான். இன்று, தேவனுடைய புதிய கிருபைகளைத் தேடி கண்டுபிடியுங்கள்.

“நீ விண்ணப்பம் பண்ணினதினாலே”

நீங்கள் உங்கள் கவலைகளைக் குறித்து என்ன செய்வீர்கள்? அவற்றை உங்களுடைய உள்ளத்திற்குள் ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது பரத்துக்கு நேராக திருப்புவீர்களா?

சனகெரிப் எனும் கொடிய அசீரியா தேசத்து ராஜா,   எருசலேம் பட்டணத்தை அழித்துப் போடும்படி ஆயத்தம் பண்ணுகையில் எசேக்கியா ராஜாவுக்கு,  செய்தி அனுப்பி,  பிற தேசங்களைக் கைப்பற்றினது போலவே யூதாவையும் கைப்பற்றுவேன் என்று அறிவித்தான். எசேக்கியா ராஜா,  அச்செய்தி அடங்கிய ஓலையை எடுத்துக்கொண்டு,  எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய்,  “கர்த்தருக்கு முன்பாக அதை விரித்து” (ஏசா. 37:14), கர்த்தரை நோக்கி தங்களை இரட்சிக்கும்படி விண்ணப்பம் பண்ணினான்.…

மேலும் சிறப்பானது இனிமேல் தான் வர உள்ளது

உங்களது வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்கள் கடந்த காலத்தில் இருந்ததா? அல்லது எதிர்காலத்தில் வரப்போகின்றதா? அந்தக் கேள்விக்குரிய பதிலும், வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டமும் காலத்திற்கு ஏற்றபடி மாறுபடும். நாம் இளவயதுடையவர்களாக இருக்கும்பொழுது, நாம், நமது வளர்ச்சியைக் குறித்து எதிர்நோக்குகிறோம். நாம் முதியவர்கள் ஆனபொழுது கடந்த காலத்தை வாஞ்சித்து மறுபடியும் இளமையானவர்களாக மாற விரும்புகிறோம். நாம் எந்த வயதுடையவர்களாக இருந்தாலும், தேவனோடு நடப்பவர்களாக இருந்தால், மேலும் சிறப்பான வாழ்க்கை இனிமேல் தான் வர இருக்கிறது.

மோசேயின் நீண்ட வாழ்நாள் காலத்தில் தேவன் செய்த அநேக அற்புதங்களை அவன்…

பரிசும் அதைக் கொடுத்தவரும்

அது வெறும் சாவிகோர்க்கும் சங்கிலிதான். அது ஐந்து சிறு மரத்துண்டுகளை ஒரு
ஷூ கட்டும் கயிற்றினால் இணைத்த ஓர் கொத்து. என் மகள் 7 வயதாக இருக்கும்பொழுது பல ஆண்டுகளுக்கு முன் அதை எனக்குக் கொடுத்தாள். இன்று அந்தக்கயிறு பழசாகி நைந்து போய், மரத்துண்டுகள் உடைந்துபோய் பழமையாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அவை “அப்பா நான் உங்களை நேசிக்கிறேன்” என்ற செய்தியைக் கொடுத்து என்னை வசீகரித்துள்ளதால் அந்த செய்தி பழமையாவதே இல்லை.

ஓர் பரிசு எப்பேர்ப்பட்ட பரிசு என்பதில் அல்ல, அது யாரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது…

நல்வரவு

எங்கள் மகன் ஊதாரித்தனமாய் இருந்த காலக்கட்டத்தில், சபையில் ஆராதனை முடிந்து வெளியே வந்த சமயம், என்னுடைய நண்பர் ஒருவர் என்னைத் தனியே அழைத்து, “நான் உனக்காகவும் உன் மகனுக்காகவும் தினந்தோறும் ஜெபிக்கிறேன். ஆனால் எனக்கு குற்ற உணர்வு உள்ளது” என்றார்.
நான் ஏன்? என்றதற்கு.

“ஏனென்றால் ஊதாரித்தனமான பிள்ளைகளை சமாளிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. என் பிள்ளைகள் ஒரளவு ஒழுங்கு முறைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டார்கள். ஆனால் அது நான் ஏதோ செய்ததாலோ செய்யாததாலோ அல்ல. ஏனென்றால் பிள்ளைகள் தாங்களாகவே தீர்மானிக்கிறார்கள்” என்றார்.…

மறுமொழிக்காகக் காத்திருத்தல்

எங்களது மகள் 15 வயதாக இருந்தபொழுது வீட்டை விட்டு ஓடிவிட்டாள். 3 வாரங்களுக்கு மேலாக அவள் வரவே இல்லை. எல்லா இடங்களிலும் அவளைத் தேடிப்பார்த்தோம். பின்பு, காவல்துறையினரின் உதவியை சிநேகிதர்கள் ஆகியவர்களின் உதவியை நாடினோம். நம்பிக்கை இழந்து நின்ற அந்த நாட்களில், நானும் எனது மனைவியும் ஜெபத்தில் தேவனுக்கு காத்திருப்பதின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கற்றுக் கொண்டோம். எங்களது பெலனும் முயற்சிகளும் பயனற்று ஓர் நிலைக்கு வந்து விட்டோம். நாங்கள் தேவனையே நம்பி இருக்க வேண்டியிருந்தது.
ஒரு தந்தையர் நாளன்று அவளைக் கண்டு பிடித்தோம். இரவு…