



ஆவியின் உள்ளான வேலை
வாசிக்க: அப்போஸ்தலர் 4:13-37
நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.(வச. 20).
ஒரு நாள், எனது பறவை தீவனம் தூரத்தில் தொங்குவதை நான் கவனித்தேன். அதை மீண்டும் நிரப்பி சிறிது நேரம் ஆனதை உணர்ந்தேன். நடந்து சென்று நிரப்பும் மூடியின் உட்புறம் ஒரு குளவி கூடு ஆக்கிரமித்துள்ளதை கவனித்து நிறுத்தினேன். குளவி கூடு மற்றும் பறவை விதைகள் ஒரே இடத்தை ஆக்கிரமிக்க முடியாததைப் போலவே, பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவதற்கான நமது விருப்பம் முற்றும் முழுமையாக இருக்க வேண்டும் என்பதை இது எனக்கு நினைவூட்டியது.
அப்போஸ்தலர் 4 இல்,…
தோல்விச் சுவர்
வாசிக்க: மாற்கு 9:14-29
"வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்." (வவ. 28-29).
உங்கள் தோல்விகளை அனைவரும் பார்க்கும்படி சுவரில் எழுதச் சொன்னால் என்ன செய்வீர்கள்? கேட்கும் நபர் உங்கள் முதலாளியாக இருந்தால் என்ன செய்வீர்கள்? டன் மற்றும் பிராட்ஸ்ட்ரீட் க்ரெடிபிலிட்டி கார்ப்பரேஷனில் தினமும் இவ்வாறு தான் நடந்து கொண்டிருந்தது. தலைமைச் செயலாளர் ஜெஃப் ஸ்டிபல் என்பவர் தோல்விச் சுவரைக் கொண்டு…
எல்லாக் காலங்களிலும் இருக்கும் பிரசன்னம்
வாசிக்க: 1 இராஜாக்கள் 19:1-21
பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று. (வ.12).
ஏழு ஆண்டுகளாக, நான் என் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தேன். ஓரளவு வருமானம் ஈட்டுவதற்காக நான் ஃப்ரீலான்ஸ் வேலைகளைச் செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பருவத்தின் நெகிழ்ச்சியையும், வழக்கத்தையும் அனுபவித்தேன். உணவு சரியான நேரத்தில் வழங்கப்பட்டது, என் வீட்டை நன்றாக, தவறாமல் சுத்தம் செய்ய முடிந்தது. வளைகாப்பு மற்றும் பிறரை ஆசீர்வதிக்கும் வழிகளை நான் ரசித்தேன். நான் முழுநேர வேலைக்குத் திரும்பியபோது, எனது இயல்பு நிலை மாறியது. எனது…
குறைவாக பயணிக்கப்பட்ட பாதை
வாசிக்க: ரோமர் 14:1-23
ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம். (வ.19 ).
பிரையன் ஜாக்சன் சாகசம் செய்யவே வாழ்ந்தார். பல ஆண்டுகளாக அவர் கிரகத்தின் சில தீவிர சூழல்களுக்கு பயணங்களை வழிநடத்தினார். பல கண்டங்களில் ஆயிரக்கணக்கான மைல்கள் நடைபயணம் செய்த அவர், இதுவரை அறியப்பட்ட மனிதர்கள் யாரும் இல்லாத இடத்தில் கால் வைப்பதைத் தவிர வேறு எதையும் விரும்புவில்லை. 2014 ஆம் ஆண்டில், அவரும் அவரது குழுவினரும் இமயமலையில் இதுவரை ஏறாத சிகரத்தின் மீது ஏறி, இதற்கு முன் எந்த மனிதனும் காலடி எடுத்து…
ஆவியின் புயல்
வாசிக்க: அப்போஸ்தலர் 2:1-12
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. (வச. 2).
எங்கள் பகுதியில் அக்டோபர் மாதத்தில், வெப்பநிலை குறைய ஆரம்பித்து, பல மரங்களின் இலைகள் பளபளப்பாக மாறியது. மரங்கள் இலையுதிர்கால மகிமையால் என்னைக் கவர்ந்தது. இலைகள் ஆழமான சிவப்பு, பிரகாசமான மஞ்சள், மென்மையான ஆரஞ்சு நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களுக்கிடையே கலந்து அழகாக இருந்தது. அதையெல்லாம் மனத்திரையில் கொண்டு வர, மரங்களின் தோப்புக்கு நடுவே விழுந்தேன். பிறகு இலைகளின் படுக்கையில்…