எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

benvijayகட்டுரைகள்

இயேசுவை போலொரு தேவன்

வாசிக்க: கொலோசெயர் 2:6-9

ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது. (வ. 9)

பல ஆண்டுகளாக எனக்கு ஸ்காட்லாந்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. ஒருவேளை நான் பார்த்த ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் பேரிலோ அல்லது அதில் காட்டப்பட்ட அந்நாட்டின் உயர்மலைகளின் பேரிலோ அந்த தாக்கம் உண்டாகியிருக்கலாம். அல்லது எங்கள் குடும்ப சரித்திரத்தை ஆராய்கையில் அதில் இருந்த ஸ்காட்டிஷ் குலத்தைப் பற்றி என் அப்பா ஒருமுறை பேசியதால் கூட இருக்கலாம். நான் அந்த இடத்தைப் பற்றி அடிக்கடி யோசித்து, மக்களைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும்…

பிரசித்திப்படுத்துவதும் பிரதிபலிப்பதும்

வாசிக்க: தீத்து 2:11-15

அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் (வ. 14).

ஆண்டி சியர்லஸ், ஒரு போதகர் மற்றும் பகுதிநேர விளையாட்டுப் பயிற்சியாளர். சமீபத்தில் ஒரு நண்பர்கள் குழுவிற்கும், எனக்கும் சிந்தனைக்கு ஏற்ற ஞானமான ஆலோசனையை கொடுத்தார். அவர் "நமது உரையாடல்களில் நாம் எப்போதும் எதையாவது ஊக்குவிக்கிறோம் அல்லது பிரதிபலிக்கிறோம். ஒருவேளை அவை நமது மதிப்பீடுகள், நமது கடந்த காலம், நமது நம்பிக்கைகள் அல்லது நம்மையே கூட இருக்கலாம்.…

குழந்தைப் போல விசுவாசித்தல்

வாசிக்க: லூக்கா 10:1-23

இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. (வ. 21)

ஒவ்வொரு ஞாயிறு காலையும் அந்த தாழ்வாரத்தில் நாங்கள் சந்தித்துக்கொள்வோம். அவள் கண்கள் மகிழ்ச்சியால் நிரம்பி, மிளிரும். உடனே அவள் என் பெயரை, "மார்லினா!" என்று ராகத்தோடு அழைப்பாள். அவள் என்னை மயக்குகிறாள், அவளை கட்டிப்பிடித்து, "உன்னை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றால், அவள் எப்பொழுதும்,…

இயேசுவைப்போல கோபம்கொள்ளுதல்

வாசிக்க: எபேசியர் 4:17–5:2

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள் (4:26).

உங்களுக்கு எதனால் கோபம்? போக்குவரத்து நெரிசல்; வீங்கின கால்; அற்பமாக புறக்கணிக்கப்படுதல்; உங்களை சந்திப்பதாக சொன்னவர் வரவில்லையா? அல்லது இரவு முழுவதும் நீளக்கூடிய திடீர் வேலையா? கோபம் என்பது உணர்ச்சிபூர்வமான விரக்தி. நாம் தடைபடும்போதும், ​​யாராகிலும் அல்லது ஏதாகிலும் நம் வழியில் குறுக்கிடும்போதும் இது அடிக்கடி எழுகிறது.

கோபம் என்பது எல்லா மனிதர்களும் அனுபவித்திட தேவன் தந்த உணர்வு. எனது உரிமைகள் மீறப்படும்போது நான் அதை விரைவாக அனுபவிக்க கூடும். போக்குவரத்தில் ஒரு வாகனம் தவறாக என்னை…

இயேசுவை போல் வாழுதல்

வாசிக்க: மத்தேயு 7:1-6, 15-23

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (வ. 21).

பல ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று ஒரு தேவாலயத்தில் சேர்ந்த சட்டமன்ற உதவியாளரை எனக்குத் தெரியும். அது அவருக்குப் பொருத்தமற்றதாகத் தோன்றியதால், அதைப் பற்றி அவரிடம் கேட்டேன். "நான் அலுவலகத்திற்கு ஓடிப்போவதை பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன்," என்று அவர் ஒப்புக்கொண்டார், "இது நன்றாக இருப்பதாக என் முதலாளி என்னிடம் கூறினார்" என்றும் சொன்னார்.

இந்த கதையை மற்றொருவருடன் ஒப்பிடவும்,…