திரும்பப் பெற முடியாது
நான் செய்த செயல்களைத் திரும்ப பெற முடியாது. என்னுடைய காருக்கு பெட்ரோல் நிரப்ப செல்லும் வழியில் ஒர் பெண் தன் காரை வழிமறித்து நிறுத்தி இருந்தாள். மறு சுழற்சி செய்வதற்கான சில பொருட்களை போட இறங்கி சென்றுவிட்டாள். நான் காத்திருக்ககூடிய நிலையில் இல்லை. எனவே என் கார் ஒலிப்பானை மிகவும் சத்தமாக அழுத்தி ஒலி எழுப்பினேன். பின் என் காரை பின்னால் எடுத்து, வேறு பாதையில் சுற்றி சென்றேன். அவள் காரை எடுக்கும் வரைக்கும் பொறுமையாய் இருக்க, அதாவது கூடினால் முப்பது வினாடிகள் கூட,…
முக்கிய நிகழ்ச்சி
எனது ஊரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த வானவேடிக்கையை நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, என் கவனம் சிதறடிக்கப்பட்டது. மிக முக்கியமான வானவேடிக்கையின் மத்தியில் அதன் வலப் பக்கத்தில், இடப் பக்கத்தில் சிறிய வானவேடிக்கைகளும் வானில் காணப்பட்டன. பார்ப்பதற்கு அவை நன்றாகத்தான் இருந்தன. ஆனால் அவற்றைப் பார்ப்பதினால் என் தலைக்குமேலே கண்கவர் காட்சிகளுடன் நடந்த முக்கியமான வானவேடிக்கைகளில் சிலவற்றைப் பார்க்க முடியாமல் போனது.
சில சமயங்களில் நல்ல காரியங்கள் மிகச் சிறந்த காரியங்களைவிட்டு நமது கவனத்தை சிதறடிக்கும். அதைப் போலவே லூக்கா 10: 38-42ல்…
தெளிவற்ற பார்வை
எனது சிநேகிதி மெக்கான் குதிரைப்பயிற்சியில் திறமை மிக்கவள். அவளிடமிருந்து குதிரைகளைப்பற்றிய சில உண்மைகளை அறிந்து கொண்டிருக்கிறேன். உதாரணமாக பாலூட்டிகளிலேயே மிகப்பெரிய கண்களை உடையதாக குதிரைகள் இருந்தாலும், குதிரைகளுக்கு குறைவான பார்வையே உள்ளது என்றும், மனிதர்களைவிட மிகக்குறைவான நிறங்களையே காண இயலும் என்பதையும் அறிந்து கொண்டேன். இதனால் தரையிலே கிடக்கும் பொருட்களை என்னவென்று அவைகளால் தெரிந்து கொள்ள இயலாது தரையிலே ஒரு கட்டையைக் கண்டால் அது அவைகளால் தாண்டிச் செல்லக் கூடிய ஒரு பொருளா அல்லது அவைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு பாம்பா என்று…
காதல் பூட்டுக்கள்
“காதல் பூட்டுக்கள்” என்பது சமுதாயத்தில் வளர்ந்து வரும் நிகழ்வாகும். காதல் வசப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இந்தக் காதல் பூட்டுக்களை பிரான்ஸ், சீனா, அஸ்டிரியா, செக் குடியரசு, செர்பியா, ஸ்பெயின், மெக்ஸிகோ, வட அயர்லாந்து போன்ற உலகின் பல பகுதிகளிலுள்ள பாலங்கள், கதவுகள், வேலிகள் ஆகிய இடங்களில் மாட்டி வைத்துள்ளனர். தம்பதிகள் அவர்களது பெயர்களை பூட்டுக்களில் பதித்து பொதுவான இடங்களில் அவர்களின் மாறாத அன்பின் சின்னங்களாக வைக்கின்றனர். அதிகமான அளவில் பூட்டுக்கள் மாட்டப்பட்டால், அவற்றின் அதிக எடையினால் பாலங்கள் போன்ற பொது இடங்கள் பாதிக்கப்படும் என்று…