“இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார்”. யோவான் 20:16

“ஜெர்மி” (அவரது உண்மையான பெயரல்ல) அறிவிக்கப்போகிற அறிவிப்பு நிமித்தம் உற்சாகமடைந்தார்.பாலைவனத்தின் வறண்ட புல்வெளிகளில் தனது பிறக்காத குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்த அவர் ஒரு விருந்து நடத்தினார். அவர் ஒரு இலக்கை வெடிபொருட்கள் மற்றும் நீலப் பொடியுடன் அடைத்துச் சுட்டார். அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க ஒரு வாரம் முழுவதும் 800 தீயணைப்பு வீரர்கள் தேவைப்பட்டனர். பெரியது எப்போதும் சிறப்பாக இருக்காது என்பதை ஜெர்மி கற்றுக்கொண்டார். சில சமயங்களில் குறைத்து மதிப்பிடப்பட்ட அறிவிப்பு சிறப்பாகச் செயல்படும்.

இயேசுவின் உயிர்த்தெழுதலைக் கவனியுங்கள். இந்த மிகப்பெரியச் செய்தியை இயேசு எப்படி அறிவித்தார்? இயேசு அரண்மனைக்கு ஓடி வந்து தன்னை அரசனாக அறிவிக்கவில்லை. மின்னல் மூலமாக அறிவிக்கவில்லை. பன்னிரண்டு சீடர்களிடம் கூட முதலில் சொல்லவில்லை. அவர் கல்லறைக்கு அருகில் நின்று, தனக்குத் தெரிந்த ஸ்திரீகள் தம் சரீரத்திற்கு அபிஷேகம் செய்ய வரக் காத்திருந்தார். அவர்களில் ஒருஸ்திரீஅவரைத் தோட்டக்காரர் என்று தவறாக நினைத்து, இயேசுவின் உடலை எங்கே வைத்தீர் என்று கேட்டாள். “இயேசுஅவளை நோக்கி: மரியாளே என்றார்”. (யோவான் 20:16)

அது சரி. அவர் தமது உயிர்த்தெழுதலை ஒரே வார்த்தையில் தெரிவித்தார். “மரியாளே”.இந்த மரியாள்பிசாசின் பிடியிலிருந்து விடுபட்டவள்(லூக்கா 8:2). இந்த ஸ்திரீயினுடைய சாட்சி பண்டைய காலத்தில் தள்ளுபடியாக்கப்பட்டது. அப்படிப்பட்ட இந்த ஸ்திரீயை நம்பி அவர் உயிர்த்தெழுதலைஅறிவுக்கும் படியான பொறுப்பை அவளிடம் கொடுத்தார்.அதே தேவன்இன்றும் மாறாதவராயிருக்கிறார். நாம் பகட்டாக அல்ல,நாம் கண்டவைகளையும் கேட்டவைகளையும் மற்றவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கலாம்.

யாருக்கு இயேசு தேவையென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நீங்கள் எவ்வாறு அவர்களுடன் அன்பாகவும் தைரியத்தோடும்இயேசுவைப் பற்றிச் சொல்லலாம்.

பிதாவே, என் வாயைஉமது குமாரனைப் பற்றிச் சொல்ல உபயோகித்தருளும்.

யோவான் 20:11-18

மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள். அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். மகதலேனாமரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.