இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். மத்தேயு 28:20
1922 ஆம் ஆண்டில், அமெரிக்கக் கவிஞர் டி. எஸ். எலியட்எம்மாவுக்குச் சென்ற இரு சீஷர்களைப் பற்றி “இடி என்ன சொன்னது?”என்றக் கவிதையை எழுதினார்.
யார் மூன்றாவதாக உன்னுடன் நடக்கிறார்?
நான் பார்க்கும் போது நீயும் நானும் தான் நடந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நான் முன்னோக்கி மேலே உள்ள வெள்ளை ரோட்டைப் பார்க்கும் போது,
உன்னுடன் இன்னொருவரும் இருப்பதாகக்காண்கிறேன்.
எலியட் குறிப்பிடுகிறார், “இந்த வரிகள் அண்டார்டிக் பயணங்களில் ஒன்றின் கணக்கால் தூண்டப்பட்டன…ஆய்வாளர்களின் கட்சி, அவர்களின் வலிமையின் உச்சக்கட்டத்தில்,சாதாரணமாககணக்கிடுவதை விட ஒரு நபர்அதிகமாக இருப்பதாக தொடர்ந்து கணக்கிட்டுக்கொண்டிருந்தனர்.”
எங்களுக்குப் பக்கத்தில் இன்னொருவர் நடந்து வருகிறார். “இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்றார். (மத்தேயு 28:20). என்ன அற்புதமான ஒரு வாக்குறுதி? அவர் இந்தப் பூமியில் இருந்தநாட்களில் , சீஷர்களுடன் சென்றது போல, அவருடைய பிரசன்னம் நம்முடனும் வருகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் நம்முடன் இருக்கிறார். வேறு எந்த ஊக்கமும் நமக்கு இல்லாதபோது, அவருடைய அன்பு நமக்கு தைரியத்தை அளிக்கிறது.
“உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று இயேசு தம் சீஷர்களிடம் கூறினார். அவருடைய முன்னோக்கான வாக்குத்தத்தம்இந்த உலகத்தில் நம் வாழ்க்கைப் பயணம் முற்றுப்பெறும்வரைக்குமுள்ளது . அதற்குப் பின்னர் புது வாழ்வு நமக்காகக்காத்திருக்கிறது.அங்கேயும் தேவன் நம்மருகில் நடப்பார்.
எவ்வாறாக இப்பொழுது தேவன் உன் பக்கத்தில் நடப்பதாகக் கற்பனை செய்வாய்?வாழ்க்கையில் நீ எதிர்கொள்கிற சவால்களை, இந்த அனுபவத்தைக் கொண்டு எப்படி நீ மேற்கொள்வாய்?
இயேசுவே, நீர் எப்பொழுதும் என் பக்கத்தில் இருக்கிறமைக்காக உமக்கு நன்றி.
மத்தேயு 28:16-20
பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.