அப்போழுது மரித்தவன் வெளியே வந்தான். யோவான் 11:44

ஹென்றி ஒசாவா டேனர் 1896 ஆம் ஆண்டில் தனது தலைசிறந்த படைப்பானலாசருவின் உயிர்த்தெழுதலைப் பற்றியஒரு ஓவியத்தை வெளியிட்டார். அந்த ஓவியம்அவருக்கு பேரிஸ் சாலனில் பதக்கத்தையும் புகழையும் வாங்கித்தந்தது.அந்தஓவியம்அத்தகைய புகழ் பெற்றதற்கான காரணம்அந்த ஓவியத்தில்இயேசுவையும் லாசருவையும் சுற்றி இருந்த மக்களின் முகபாவனைகள் ஆகும்.

. “உலகம் முழுவதையும் உறவினர்களாக்கும்” ஐக்கியத்தையும் ,இந்த வேதாகம சம்பவத்தையும்ஒப்பிட்டு இந்தப் படைப்பை ஓவியர்வெளியிட்டார். நம்மிடம் எவ்வளவு தான் வித்தியாசங்கள் இருந்தாலும் மரணம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை அவர்அறிந்திருந்தார். அதனால் நாம் அனைவரும்மரணத்தை வென்றஇயேசு கிறிஸ்துவை நம்பலாம் என்று விசுவாசத்தையும் கொண்டிருந்தார். யோவானில்“லாசருஎன்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான்”, ஆனால் உண்மை என்னவென்றால் நாம் யாவரும் வியாதிப் பட்டிருக்கிறோம்(11:1).
நாம் யாவரும் மரணத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தோம். மரியாளும் மார்த்தாளும் கிறிஸ்துவிடம்உதவி கேட்டிருந்தும் அவர் வருவதற்கு முன்னமே லாசரு இறந்து போனான்.மரணம் என்பது தான் கடைசி வார்த்தை என்பதை அனைவரும் அறிவர்.

இயேசு மறுத்தார்.

இயேசு, மரித்த மனிதனின் கல்லறைக்கு முன்பாகவும், சுற்றி அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்த ஜனங்களுக்கு முன்பாகவும் நின்று,“லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்”(வ. 43). அப்பொழுது லாசரு கல்லறையிலிருந்து வெளியே வந்தான். நாம் அனைவரும்மரணம் என்கிற பாரத்தையும்,பயத்தையும்அறிந்தவர்களாக இருக்கிறோம்:

உடலின் மரணம்,உறவுகளின் மரணம், நம்பிக்கையின் மரணம். ஆனால் இயேசுவிடம் கடைசி வார்த்தை உண்டு. அவருடைய மாற்றுப்பாதை இவ்வுலகிற்குபுது ஒலியையும், புது வாழ்க்கையையும் அளிக்கும்.

எவ்வாறு நீங்கள் மரணத்தின் கசப்பான விளைவுகளை அனுபவித்திருக்கிறீர்கள்? தேவன் எவ்வாறுஉங்கள் வாழ்க்கையோடும், உங்கள் அனுபவத்தோடும் இடைபடுகிறார்?

இயேசுவே, எங்கும் மரணத்தைக் காண்கிறோம். அந்தப் புது வாழ்க்கையை நீர் எனக்கும் தருவீரா? அந்தக் கடைசி வார்த்தையை என்னிடமும் பேசுவீரா?

யோவான் 11:1-14, 40-44

மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான். கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்தான். அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார். அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார். அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார். அதற்குச் சீஷர்கள்: ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார். இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.