ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டையம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. ஏசாயா 2:4

அவரது சொந்த ஊரான நியூ ஆர்லியன்ஸில் ஒரு ஒன்பது வயது சிறுவனின் மரணம், குழந்தைகளின் கைகளிலிருந்துத் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான வழியை உருவாக்க ஷமரைத் தூண்டியது. தன்னுடைய சிறுவயதில் இசை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவி செய்ததென்பதை நினைவுகூர்ந்தவராய் போலீஸின் உதவியுடன் எவர்களுடைய கைகளிலெல்லாம் துப்பாக்கி இருந்ததோ அவர்களிடமெல்லாம் எக்காளம் என்னும் இசைக்கருவியை கொடுப்பது, இசைப்பாடங்களை வழங்குவது போன்ற சமூக முயற்சியைஆரம்பித்தார். இவ்வாறு ஆயுதங்களுக்கு பதிலாக இசைக்கருவியை கொடுப்பதால் அங்குள்ள வாலிபர்கள் ஆக்கப்பூர்வமான காரியங்களை மேற்கொள்வர் என நம்பினார்.

தேவனும் நம் சமுதாயத்தில்இருக்கிற பல விதமான வன்முறைகள், எதிர்காலத்தில்சமாதானங்களாகமாறநோக்கமுடையவராயிருக்கிறார். அந்த நாளில்,“ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டையம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை”.(ஏசாயா 2:4). அந்த நாளில்நமக்கு ஆயுதங்கள் தேவை யில்லை.அழிவுக்கேதுவான காரியங்கள் ஆக்கப்பூர்வமான காரியங்களாகமாற்றப்படும்.போர் செய்வதற்குப் பதிலாக நாம் அனைவரும் சேர்ந்து தேவனை ஆராதிக்கலாம். அந்த நாள் மட்டுமாக நாம் ஜெபித்து,நம்முடைய சமுதாயத்துக்கு உதவி, கலங்கியிருக்கிற உள்ளங்களைதேற்றக் கூடிய மருந்தாய் அமைவோம். உலகத்தை நம்மால் மாற்ற முடியாது. அது தேவனாலே மாத்திரம் ஆகும். ஆனால்,நாம் இருக்கும் இடங்கள் சமாதானமான இடங்களாக இருக்கவும், நம்மைப் பார்த்து மற்றவர்களும் “அவருடைய வழியில்” நம்மோடு நடக்கவும், நாம் அழைப்போம்.

ஏசாயாவில் கூறப்பட்டுள்ள எதிர்காலத்தைப் பற்றிநீ எவ்வாறாய் நோக்குகிறாய்?தேவ சமாதானம் உன்னுடைய சமுதாயத்தில்உருவாக நீ எவ்வாறுஉதவுவாய்?

பிதாவே, நீர் சமாதானத்தின் ஆசிரியராக இருப்பதற்காக உமக்கு நன்றி. என்னை சுற்றியுள்ளவர்களுக்கு உம்முடைய சமாதானத்தைக் கொடுக்கதயவாய் என்னை உபயோகித்தருளும்.

ஏசாயா 2:1-4

ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம். கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்; நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.