நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச்சாட்சி கொடுக்கிறார். ரோமர் 8:16

ஜான்சோவர்ஸ் தனது ஃபாதர்லெஸ் ஜெனரேஷன் என்ற புத்தகத்தில் “ஒற்றை பெற்றோர் உள்ள வீடுகளில் வளரும் 25 மில்லியன் குழந்தைகளைக் கொண்ட இவரைப்போல் எந்த தலைமுறையும் தன்னார்வ தந்தை இல்லாததைக் கண்டதில்லை”என்று எழுதுகிறார். எனது சொந்த அனுபவத்தில், என் தந்தையுடன் தெருவில் போராடியிருந்தால், நான் அவரை அறிந்திருக்கமாட்டேன். நான் மிகவும் சிறியவனாக இருந்தபோது என் பெற்றோர் விவாகரத்து பெற்றனர், என் அப்பாவின் அனைத்து புகைப்படங்களும் எரிக்கப்பட்டன. அதனால் பல வருடங்களாக நான் தந்தையில்லாத வெறுமையை உணர்ந்தேன். பிறகு பதின்மூன்றாவது வயதில், நான் கர்த்தருடைய ஜெபத்தைக் கேட்டு (மத்தேயு 6:9-13) எனக்குள் இவ்வாறு சொல்லிக்கொண்டேன், உங்களுக்கு பூமிக்குரிய தந்தை இல்லாமல் இருக்கலாம், ஆனால் இப்போது உங்கள் பரமத்தந்தையாக தேவன் இருக்கிறார்.

மத்தேயு6:9ல், “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று ஜெபிக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறோம். முன்னதாக வசனம் 7ல் ஜெபம்பண்ணும்போது “வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது, மேலும் இந்த வசனங்கள் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்று நாம் ஆச்சரியப்படலாம். தேவன் அனைத்தையும் அறிந்திருப்பதால் நாம் மீண்டும் சொல்ல வேண்டியதில்லை. அவர் உண்மையிலேயே எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறார், எனவே நாம் விளக்கவேண்டிய அவசியமில்லை. அவருடைய இருதயம் மிகவும் இரக்கமுள்ளளது, எனவே அவருடைய நற்குணத்தைப் பற்றி நாம் நிச்சயமற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை. தொடக்கம் முதல் முடிவு வரை அவர் அறிந்திருப்பதால் அவருடைய நேரத்ததில் அனைத்தும் சரியாய் நடக்கும் என்பதை நாம் அறிவோம்.

தேவனே நமது தந்தையாய் இருப்பதால் அவரைச் செயல்பட வைப்பதற்கு நாம் “பல வார்த்தைகளை” (வ. 7) பயன்படுத்த வேண்டியதில்லை. ஜெபத்தின் மூலம், நம்மை மிகவும் நேசிக்கும் கரிசனையுள்ள ஒர் தந்தையுடன் பேசுகிறோம் மற்றும் இயேசுவின் மூலம் நம்மை அவருடைய பிள்ளைகளாக்குகிறோம்.

-ஆல்பர்ட்லீ

சிந்தனை

ஜெபத்தில் பற்பல வார்த்தைகளைப் பயன்படுத்தி “தேவனை செயல்படவைப்பதற்கு” நீங்கள் எப்போது முயற்சித்தீர்கள்? அவருடனான உங்களது உறவு ஓர் தந்தையைப் போன்று அவரை நம்புவதற்கு எப்படி உதவுகின்றது?
அன்புள்ள பரலோகத்தகப்பனே, என்னை உமது பிள்ளையாக்கியதற்கும் ஜெபத்தின் மூலம் உமது பிரசன்னத்திற்குள் என்னை ஏற்றுக்கொள்ளும் பரமதந்தையாக இருப்பதற்கும் உமக்கு நன்றி.

 

 

 

banner image