பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். ரோமர் 6:13-22

என்னைநானே காப்பாற்றி சுத்திகரிக்க முடியாது; என்னால் பாவத்திற்கு பரிகாரம் செய்ய முடியாது; நான் உலகத்தை மீட்க முடியாது; தவறை சரி செய்ய முடியாது; தூய்மையற்றதை தூய்மையாக்க முடியாது; பரிசுத்தமில்லாததை பரிசுத்தமாக்க முடியாது. இவை அனைத்தும் தேவனின் இறையாண்மையான செயல். இயேசு கிறிஸ்து செய்ததில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதா? அவர் ஓர் பரிபூரண பிராயச்சித்தம் செய்திருக்கிறார், அதை நான் எப்போதும் உணர்ந்து கொள்ளும் பழக்கம் உள்ளவனா? மிகவும் தேவையான காரியங்களைச் செய்வது அல்ல, காரியங்களை நம்புவதுதான். கிறிஸ்துவின் மீட்பு என்பது ஓர் அனுபவம் அல்ல, அது கிறிஸ்து மூலம் தேவன் செய்த மாபெரும் செயல், அதன் மீது நான் எனது நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். எனது அனுபவத்தின்மீது என் நம்பிக்கையை நான் கட்டமைத்தால், நான் வேதத்திற்கு எதிரான, தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை உருவாக்குகிறேன், என் கண்கள் என் சுய இச்சையின் மீது நிலைத்திருக்கும். தேவனின் பிராயச்சித்தத்தில் முன்கணிப்புகளில்லாத பக்தியைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். தனிமைப் படுத்தப்பட்ட வாழ்க்கையைத் தவிர வேறு எதற்கும் பயனில்லை; அவைகடவுளுக்குப் பயனற்றது; மனிதனுக்குத் தொல்லைதரக்கூடியது. ஒவ்வொரு விதமான அனுபவத்தையும் நாம் தேவனுடைய பார்வையிலேயே அளவிடவும். நாம் பாவநிவிர்த்தியின் முன்முடிவைக் கட்டியெழுப்பாதவரை தேவனுக்குப் பிரியமான எதையும் செய்ய முடியாது.

இயேசுவின் பிராயச்சித்தம் என் வாழ்க்கையில் நடைமுறையோடு தடையற்ற வழிகளில் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் கீழ்ப்படியும்போது, முழுமுதற் கடவுள் என் பக்கத்தில் இருக்கிறார், அதனால் தேவன் அருளும் கிருபையும் கீழ்ப்படிதலும் ஒத்துப்போகின்றன. கீழ்ப்படிதல் என்றால் நான் எல்லாவற்றையும் பரிகாரியாகிய அவர் மீது செலுத்திவிட்டேன், அதனால் கடவுளின் எல்லையற்ற கிருபையின் மூலம் என் கீழ்ப்படிதல் உடனடியாக சந்திக்கப்படுகிறது.

இயற்கை வாழ்வை மறுக்கும் இறையச்சத்தைப் பற்றி ஜாக்கிரதையாயிருங்கள், அது ஒரு மோசடி. பாவநிவிர்த்தியின் அரணுக்குள் உங்களைத் தொடர்ந்து கொண்டு வாருங்கள் – இதில் பாவநிவாரணத்தைப் பற்றிய பகுத்தறிவு எங்கே இருக்கிறது?

-ஆஸ்வால்ட்சேம்பர்ஸ்

சிந்தனை

வாழ்க்கையின் மத்தியில்தான் மனித தேர்வுகள் செய்யப்படுகின்றன; தொடக்கமும் முடிவும் கடவுளிடம் இருக்கும். கடவுளின் கட்டளைகள் பிறப்பு மற்றும் இறப்பு; அந்த வரம்புகளுக்கு இடையில் மனிதன் தனது சொந்த மகிழ்ச்சியை அல்லது துன்பத்தை உருவாக்குகிறான்.

 

 

 

banner image