வாசிக்கவும்: எரேமியா 3:12-22
“சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன்” என்று கர்த்தர் கூறுகிறார் (வச. 22).
அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, குளிர்காலத்தில் ஜெனரல் ஸ்டோன்வால் ஜாக்சன் தங்கியிருந்த ஓர் வீட்டிலிருந்த சிறுமியுடன் நட்பு கொண்டார். ஐந்து வயதான ஜானி கார்பின் ஜாக்சனை மிகவும் நேசித்தார், அவள் ஜெனரலின் தொப்பியிலிருந்து எடுக்கப்பட்ட ஓர் தங்கப் அணிகலனைத் தனது தலைமுடியில் தரித்திருந்தார்.
மார்ச் 1863 இல், சிறுமி ஜானி கொடிய காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரித்தார். யதார்த்தமாக ஸ்டோக் ஜாக்சன் அவள் காலமான செய்தியைக் கேட்டு கதறி அழுதார். இந்தத் தருணத்தில் அவரது வேலையாட்களில் ஒருவர், “அவர் நம் அனைவருக்காகவும் அழுகிறார் என்று நான் நம்புகிறேன்.” ஏனென்றால் ஜாக்சன் போதுமான அளவு மரணத்தை பார்த்திருக்கிறார்.
எரேமியா தீர்க்கதரிசியும் மரணத்தை போதுமான அளவு கண்டிருந்தார். எருசலேம் நகரம் கடவுளுக்கு எதிராக முழு கிளர்ச்சியில் இருந்தபோது எரேமியா கர்த்தரைச் சேவித்தார், எனவே யூதா எதிர்கொள்ளும் தீர்ப்பைப் பற்றி அவர் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டியிருந்தது. பின்னர் அவரும் அச்சூழலின் வழியாய் கடந்தார்.
தம் மக்களுக்கான எரேமியாவின் கண்ணீர் கடவுளின் துக்க இதயத்தை பிரதிபலிக்கிறது. “நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையிலே வைத்து, ஜனக்கூட்டங்களுக்குள்ளே நல்ல சுதந்தரமாகிய தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன்” என்று எரேமியா மூலம் கூறினார். “ஆனால் நீங்கள் எனக்குத் துரோகம்செய்தது மெய்” (எரேமியா 3:19-20). எனவே கடவுள் தம் இதயத்தின் ஆழத்திலிருந்து முறையிட்டார்: “சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்” (வச. 22).
அந்த புலம்பல் இயேசு சிலுவையில் மரணத்தை எதிர்கொள்வதற்கு சிறிது காலத்திற்கு முன்பே அவருடைய வார்த்தைகளில் எதிரொலித்தது. “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.” (மத்தேயு 23:37)
வாழ்க்கையில் துக்கத்தின்மீது துக்கத்தை குவிக்கும் வழி இருக்கலாம். அவை நிகழும்போது, ஒரு காலத்தில் ‘சிதறுண்டுப் போக’ நமக்கு வாய்ப்புள்ளது. சங்கீதக்காரனான தாவீது எழுதியதுபோல், “[கடவுள்] எல்லா [நம்] துக்கங்களையும் கண்காணிக்கிறார், மேலும் அவர் “[நம்] கண்ணீரையெல்லாம் [அவருடைய] துருத்தியில் சேகர்த்து வைக்கிறார்” (சங்கீதம் 56:8). நமது அன்பான பரம தகப்பன் அழுதார். நம் அனைவருக்காகவும், அவர் நம்முடன் கூட அழுகிறார்.
-டிம் குஸ்டாஃப்சன்
மேலும்
புலம்பல் 3:46-57ஐப் படியுங்கள், எருசலேம் இடிந்து கிடக்கும்போது எரேமியாவின் கண்ணீர், அவரது வலி மற்றும் ஆறுதலின் ஆதாரத்தைப் பார்க்கவும்.
அடுத்தது
சமீபத்தில் நீங்கள் வருத்தப்படுவதற்கு என்ன காரணம்? கடவுள் நம்முடன் துக்கப்படுகிறார் என்பதை அறிவது எப்படி உங்களை ஊக்குவிக்கிறது?
|
|
|