சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். 1 கொரிந்தியர் 12:25

இந்த நாட்களில் என் வராந்தாவில் ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது. இது சில்வெஸ்டருக்கும் கிறிஸுக்கும் இடையே நடக்கும் தினசரி சண்டை. இந்த இரண்டு உள்ளூர் அணில்களுக்கும் வேர்க்கடலை, வெண்ணெய் மற்றும் கொட்டை விருந்துகளை வைப்பேன்.நான் அந்த இரண்டு அணில்களுக்கும் தேவையான உணவுகளை வைக்கிறேன். ஆனால் அதில் ஒன்றுமற்றொன்றைசாப்பிடவிடாமல்சண்டைப் போடுகிறது.இரண்டும் சேர்ந்து சாப்பிட்டால் சந்தோஷமாக சாப்பிட்டு சமாதானமாக இருக்கலாம்.அவைகளிடம் காணப்பட்ட தற்காப்பு மனப்பான்மையின் காரணமாக சண்டை செய்து கொண்டேயிருக்கிறது.

உயிர்வாழ்வதற்கான போர்கள் விலங்குகளிடம்இருக்கக்கூடிய ஒன்று தான். ஆனால் அது விசுவாசிகளின் குடும்பத்தில் நிகழும்போது அது சுய அழிவு மற்றும் ஆபத்தானது என்பதை புதிய விசுவாசிகள் அறிந்து கொள்ள வேண்டுமென்று அப்போஸ்தலனாகிய பவுல் விரும்பினார். விசுவாசிகள் கிறிஸ்துவை விசுவாசிப் பதினால் அவருடைய சரீரத்தின் மூலமாகஒருவரோடொருவர் இணைந்தவர்களாயிருக்கிறார்கள்(1 கொரிந்தியர் 12:12-13). மேலும் நமது சொந்த வாழ்விற்காக ஒருவருக்கொருவர் சண்டையிடுவது வேடிக்கையானது,” நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்” (வ. 21) கண்கள் கைகளுக்குச் சொல்வதைப் பவுல் வலியுறுத்துகிறார்.

சரீரஅவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது(வ. 22). நாம் ஒருவர் மற்றொருவரிடம் போட்டியிடத்தேவையில்லை. நமக்கு மற்றவர்கள் தேவை. அவர்களைப் பார்க்கும் போது அவர்களிடம் இயேசுவின் முகத்தைக் காண வேண்டும்.

எப்பொழுது போட்டி மனப்பான்மைஉறவுகளுக்குள் கலகத்தை ஏற்படுத்தியதை கவனித்திருக்கிறாய்? நீ மற்றவர்களைப் புரிந்து விட்டுக் கொடுத்ததினால்ஆசிர்வதிக்கப்பட்டதை எவ்வாறு உணர்ந்திருக்கிறாய்?

அன்பின் தேவனே, சுலபமாக மற்றவர்களிடம் வெறுப்பும் கசப்பும் உருவாகிறது. உமக்குள்ளானவிசுவாசிகளிடமும் கூடகசப்புருவாகிறது. இதை விட ஒரு நல்ல வழியிருக்கிறதென்பதைநான் அறிந்திருக்கிறேன். அந்த வழியை எனக்குப் போதித்தருளும்.

1 கொரிந்தியர் 12:12-22

எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது. காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே? தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே? அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே. கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது. சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.