அந்தக்ஷனமே பரமசேனையின் திரள் அந்த தூதனுடனே தோன்றி;
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி தேவனைத்து தித்தார்கள்”. லூக்கா 2: 13-14
நம்மில் பெரும்பாலானோருக்கு, டிசம்பர் மாத தொடக்கமானது கிறிஸ்துமஸ் காலத்தின் மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ள நம் வீடுகளுக்கு வருகை தரும் பாடகர் குழுக்களின் பழமையான நினைவுகளை கொண்டு வருகிறது. சிறுவர் பாடகர் குழுவின் ஒரு பகுதியாக, நாங்கள் எங்கள் பாடகர் உறுப்பினர்களின் வீடுகளை சந்தித்த போது, இரவு முழுவதும் உற்சாகமாக நாங்கள் பாடியதை நினைவுகூருகிறேன். நாங்கள் வீடுகளை நெருங்கும்போது ஒரு கிறிஸ்துமஸ் பாடலுடன் தொடங்குவோம், அது அந்த குடும்பத்தை எழுப்ப. அவர்கள் தங்கள் வீட்டின் விளக்குகளை ஒளிர செய்தால், நாங்கள் வீட்டிற்குள் சென்று மற்றொரு கிறிஸ்துமஸ் பாடலை பாடுவோம், ஒரு வேதாகம வசனத்தைப் படிப்போம், பின்னர் அந்த குடும்பத்திற்காக ஒரு சிறிய பிரார்த்தனை செய்வோம். கிறிஸ்துமஸ் பாடல் குழு அனுபவத்தின் சிறந்த பகுதி எங்களுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த விருந்து. எனினும், ஒரு சில வீடுகளுக்குச் சென்று, நாங்கள் திருப்தி அடைந்த பின்பு அந்த விருந்தளிப்புகள் இனி வரவேற்கப்பட்டதாய் இருக்காது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்றை இந்த பாரம்பரியம் நினைவுகூருகிறது என்று நான் யோசிக்கிறேன். பெத்லகேமில் இயேசு பிறந்த அந்த அற்புதமான இரவில், மீட்பர் பிறப்பின் அருமையான செய்தி இரவில் தங்கள் மந்தைகளைக் காத்து கொண்டிருந்த சாதாரண மேய்ப்பர்களுக்கு ஒரு தேவதூதனால் அறிவிக்கப்பட்டது. எனினும், சிறந்த பகுதியானது இந்த தேவதூதனுடன் இணைந்த பரம சேனையின் திறல் – தேவனுக்கு மகிமையைக் கொடுத்து – சமாதானமும் மற்றும் மனிதரில் பிரியமும் என்று அறிவித்தனர். நம்முடைய வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு நாளும் தேவன் நம்முடைய துதிக்கு பாத்திரர், எனவே சில நேரங்களிலும் மட்டும் அவரைப் துதிப்பது என்ற கட்டுபாடுகள் வேண்டாம். சங்கீதம் 104:33-ல் தாவீது கூறுகிறார், “நான் உயிரோடிருக்கு மட்டும் என் கர்த்தரை பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனை கீர்த்தனம்பண்ணுவேன்.”
தேவதூத பாடகர் குழு மற்றும் பாடலிலிருந்து நாம் சேகரிக்கக்கூடிய இரண்டு முக்கியமான அம்சங்கள் உள்ளன. முதலில், சங்கீதம் 69:30ல் “தேவனுடைய நாமத்தை பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்” என்று எழுதப்பட்டிருப்பதைப் போல, நமது பாடல்களும் தேவனை எப்போதும் மகிமைப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, நம் பாடல்கள் மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். “சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, (நமது) இருதயத்தில் கர்த்தரை பாடி கீர்த்தனம்பண்ணி” என்று பவுல் அதை எபேசியர் 5:19-ல் மிகவும் பொருத்தமாக கூறுகிறார்.
நாம் செய்யும் எல்லாவற்றிலும் தேவனை துதிப்பதன் மூலம் இவ்விழா காலத்தின் மெல்லிசைகள் நம் இதயங்களில் ஆண்டு முழுவதும் எதிரொலிக்கட்டும்.
அன்புள்ள பிதாவே, தேவதூதர்கள் இணக்கமாக தங்கள் குரல்களை உயர்த்தி உங்கள் பிறப்பை அறிவித்ததை போல, எங்கள் வாழ்க்கை எப்போதும் உங்கள் புகழைப் பாடட்டும். ஆமென் .
– எஸ்தர் காலின்ஸ்