தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப் படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கு ஏதுவான மனம் திரும்புதலை உண்டாக்குகிறது.
2 கொரிந்தியர் 7:10
பாவ உறுதி பற்றி சிறப்பாக விளக்கும் வார்த்தைகள் :
என் பாவங்கள், என் பாவங்கள், என் இரட்சகர்,
உம்மீது விழுந்ததால் எத்தனை வருத்தம்.
பாவஉணர்வு என்பது ஒரு மனிதருக்கு பொதுப்படையாக இல்லாத விஷயம் ஆகும். அது தேவனைப் பற்றிய புரிதலின் ஆரம்பம். இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அவர் பாவத்தை குறித்து மக்களை கண்டித்து உணர்த்துவார் என்றார் (பார்க்க யோவான் 16:8). பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதருடைய மனசாட்சியை தூண்டி தேவ பிரசன்னத்தின் முன் கொண்டு வரும் போது, அவருக்கு மற்றவர்கள் உடனான உறவை குறித்து தொந்தரவு ஏற்படுவதில்லை. ஆனால் தேவன் உடனான உறவை குறித்து- “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம் செய்து உமது கண்களுக்கு முன்பாக பங்கினை நடப்பித்தேன்” (சங்கீதம் 51 :4) பாவ உறுதி, மன்னிப்பு மற்றும் பரிசுத்தம் போன்றவற்றின் அற்புதங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. மன்னிக்கப்பட்ட மனிதரே பரிசுத்தமாக்கப்பட்டவர். அவர் முன்பிருந்த நிலையில் அவரை தேவன் தமது கிருபையால் மன்னித்தார் என்பதை தமது இப்போதைய மாறான நிலையில் நிரூபிக்கிறார், மனந்திரும்புதல் எப்போதும் ஒரு மனிதரை “நான் பாவம் செய்தேன்” என்று சொல்ல வைக்கிறது. அவ்வாறு சொல்லுவதே தேவன் அவர் வாழ்வில் கிரியை செய்கிறார் என்பதன் நிச்சய அடையாளம் ஆகும். அதைக் காட்டிலும் குறைந்தது முட்டாள்தனமான தவறுகளால் ஏற்பட்ட வெறும் துக்கம் மட்டுமே – சுய வெறுப்பினால் ஏற்பட்ட ஒரு பிரதிபலிப்பு.
மனிதரின் மரியாதைக்குரிய “நன்மையை” எதிர்கொள்ளும் மனந்திரும்புதலின் திடீர் வலிகள், இந்த வலிகளின் மூலம்தான் தேவ இராஜ்ஜியத்தில் நுழைய முடியும். பிறகு, போராட்டங்களை உருவாக்கும் பரிசுத்த ஆவியானவர் அந்த மனிதரின் வாழ்வில் தேவ குமாரனை உருவாக்க தொடங்குகிறார் (பார்க்க கலாத்தியர் 4 :19). உணர்வுள்ள மனந்திரும்புதலை தொடர்ந்து ஆழ்மன பரிசுத்தத்தில் புது வாழ்வு தன்னை வெளிப்படுத்தும். கிறிஸ்தவத்தின் அடித்தளமே பாவமன்னிப்பு ஆகும். கண்டிப்பாகப் பேசினால், ஒரு மனிதர் மனந் திரும்புதலை தேர்வு செய்ய முடியாது. மனந்திரும்புதலின் மதிப்பைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், பாவத்தில் இருக்க உங்களையே அனுமதிக்கிறீர்கள். உண்மையான மனந்திரும்புதலை உண்மையில் புரிந்து கொண்டீர்களா என்று உங்களையே ஆராய்ந்து பாருங்கள்.