ஜார்ஜியாவில் (அமெரிக்கா) உள்ள ஒரு கல்லூரி மாணவர் ஒரு சக மாணவருக்கு, மரபணு சோதனை அவர்கள் சகோதரர்களாக இருக்கக்கூடும் என்று காட்டுகிறது என்று குறுஞ்செய்தி அனுப்பியபோது இவ்வாறு கேட்டார்: “யார் இந்த அந்நியன்?”. ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுப்பு மூலம் பிரிக்கப்பட்ட அந்த இளைஞன் ஒரு பதிலை அனுப்பினான், அதில் மற்ற மாணவருக்குப் பிறக்கும் போது என்ன பெயர் வைக்கப்பட்டது என்று கேட்டார். அவர் உடனடியாக, “டைலர்” என்று பதிலளித்தார். மற்றவர் பதிலளித்தார், “ஆம்!!! நீ என் சகோதரன்!” என்று அவர் பெயரால் அங்கீகரித்தார்.

உயிர்த்தெழுதல் சம்பவத்தில், ஒரு பெயர் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் கவனியுங்கள். அந்த சம்பவத்தை வாசிக்கையில், ​​மகதலேனா மரியாள் கிறிஸ்துவின் கல்லறைக்கு வருகிறாள், அவருடைய சரீரத்தைக் காணவில்லை என்று அவள் அழுகிறாள். “இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார்” (யோவான் 20:15). இருப்பினும், “மரியாளே” (வ. 16) என்று அவள் பெயரைச் சொல்லும் வரை, அவள் அவரை அடையாளம் காணவில்லை.

அவர் இப்படிச் சொல்லக் கேட்டவுடனே அவள், “ரபூனி” (அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்) (வ.16) என்று கத்தினாள். நம் உயிர்த்தெழுந்த கிறிஸ்து அனைவருக்காகவும் மரணத்தை வென்றார் என்பதை உணர்ந்தும், நம் ஒவ்வொருவரையும் அவருடைய பிள்ளைகளாக அறிந்தும், உயிர்த்தெழுதல் நாளின் காலையில் இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் அனுபவிக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. அவர் மரியாளிடம் கூறியதுபோல, “நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்”(வ.17)

ஜார்ஜியாவில், பெயரால் இணைக்கப்பட்ட இரண்டு சகோதரர்கள், “இந்த உறவை அடுத்த கட்டத்திற்கு” கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளனர். உயிர்த்தெழுந்த நாளன்று, இயேசு தம்முடையவர்களாக அறிந்தவர்களுக்கென்று தியாகமான அன்பில் உயர்ந்திருக்க ஏற்கனவே மிக உன்னதமான படியை எடுத்ததற்காக நாம் இயேசுவைத் துதிக்கிறோம். அது உங்களுக்கும் எனக்கும் தான், அவர் உயிருடன் இருக்கிறார்!

-பாட்ரிசியா ரேபன்

இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்தார், உங்கள் பெயரால் உங்களை அறிவார் என்பதை அறிவதால் எப்படி உணர்கிறீர்கள்? அவரை இன்னும் எப்படி நன்றாக அறிந்து கொள்வது?

அன்பு இயேசுவே, என்னைப் பற்றிய உமது அறிதல் என்னை வியப்பூட்டுகிறது. என்னை அறியும் உமது தியாகமான அன்பின் ஈவுக்காகவும் உம்முடனான நித்திய வாழ்வின் நம்பிக்கைக்காகவும் உமக்கு நன்றி.

யோவான் 20:11-18

11 மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று
அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில்
அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,
12
இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை
தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில்
ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக,
உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.
13
அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே,
ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்:
என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்,
அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.
14
இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி,
இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை
இயேசு என்று அறியாதிருந்தாள்.
15
இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்,
யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத்
தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர்
அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால்,
அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும்,
நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
16
இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார்.
அவள் திரும்பிப் பார்த்து; ரபூனி என்றாள்; அதற்குப்
போதகரே என்று அர்த்தமாம்.
17
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே,
நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு
ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப்
போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள்
பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும்
உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்
என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
18
மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக்
கண்டதையும், அவர் தன்னுடனே
சொன்னவகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.

யோவான் 20:16

அவள் திரும்பிப் பார்த்து; ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.