வாசியுங்கள்: மத்தேயு 6:25-34

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? (வச.25)

ஒரு குழந்தையாக இருக்கும் போது, பள்ளியில் நண்பர்களைச் சம்பாதிப்பதைக் குறித்து நான் கவலைப்பட்டேன். ஒரு கல்லூரி மாணவனாக, பட்டம் பெற்ற பிறகு வேலைக்காகக் கவலைப்பட்டேன். இன்று, நான் பெற்றோரின் உடல்நிலை குறித்தும், எனது புத்தகங்களை எப்படி விற்பது என்றும் கவலைப்படுகிறேன்.

நீங்கள் எதற்காக கவலைப்படுகிறீர்கள்? சில நொடிகள் செலவழித்து உங்கள் மனதில் ஒரு பட்டியலை உருவாகுங்கள். எனக்கு இருப்பதைப் போன்றே உங்களுக்கும் சில கவலைகள் இருக்கலாம்.

இயேசு நமக்கு “அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” (மத்தேயு 6:25) என்று கூறினார், அதற்கு இரண்டு நல்ல காரணங்கள் உள்ளன என்றும் கூறினார். முதல் காரணம், நடைமுறை வாழ்க்கையில் நாம் கவலைப்படும்போது, ஒருபோதும் நடக்காத ஒரு காரியத்திற்காக நம் ஆற்றலை வீணாக்குகிறோம். நீங்கள் எத்தனை அதிகமாக எதிர்காலத்திற்காக கவலைப்படுகிறீர்கள் என்பதைக் கவனியுங்கள், வேலையை இழக்கலாம், திருமணம் நடைபெறாமல் போகலாம், அல்லது வேலையின் திட்டப்பணியை இழக்கலாம் என்ற பயங்களைச் சந்திக்கிறோம். உண்மை என்னவென்றால், பெரும்பாலான விஷயங்களுக்காக நாம் கவலையால் எந்த பலனுமில்லை. மேலும் கவலைப்படுவதால் ஒரு அங்குல வித்தியாசத்தைக்கூட ஏற்படுத்த முடியாது. “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? ” என்று இயேசு கேட்டார் (வச.27). அவர்களால் முடியாது. எனவே “ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.” (வச.34)

இரண்டாவது காரணம், இறையியலைச் சார்ந்தது; நமது தேவைகளைத் தேவன் தன் வல்லமை மற்றும் நற்குணத்தின் மூலம் சந்திக்கிறார் என்பதைக் கவலை மறுக்கிறது. தம்முடைய பரமபிதா நம்மையும் மற்றும் அனைத்து படைப்புகளையும் ‘ இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? என்று இயேசு சொன்னார்! (வச.30). மேலும் இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (வச.32-33).

தனது சத்திய வார்த்தைகளை மக்கள் அறிந்துகொள்ளும்படி, இயேசு இயற்கை உலகிலிருந்து உவமானத்தின் வழியாக ஒரு வழிகாட்டும் சிந்தனையை வழங்கினார். இயேசு, “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்” என்றார். தேவன் அவைகளுக்கு எப்படி “உங்கள் பரமபிதா பிழைப் பூட்டுகிறார்” (வச.26). “காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்” என்று அவர் மேலும் சொல்கிறார் (வச.28-29). தன்னுடைய அனைத்து சிருஷ்டிகளின் தேவையைச் சந்திக்கப் பரமபிதா சுறுசுறுப்பாக செயல்படுகிறார். ஆகாயத்துப் பறவைகளையும், காட்டுப்புஷ்பங்களையும் கனிவுடன் கவனித்துக் கொள்ளும் பரமபிதா, அவருடைய பிள்ளைகளாகிய உங்களைக் கவனித்துக் கொள்வது அதிக நிச்சயமல்லவா? நாம் நம்முடைய இன்றைய தேவைகளிலும், சவால்களிலும் தேவனையே நம்புவோமாக. ஏனெனில், அவர் உண்மையானவர், அவர் நம்முடனே இருக்கிறார், பொய்யாத் தோன்றும் கவலைகளை விட அவா் மிகப் பெரியவர்.

—ஷெரிடன் வாய்சி

மேலும் அறிய

பிலிப்பியர் 4: 6 ஐப் படியுங்கள், நம்முடைய கவலைகளை எவ்வாறு கையாளவேண்டும் என்று பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார் என்பதைக் கவனியுங்கள்.

அடுத்தது

உங்கள் கவலைகளில், எத்தனை எதிர்காலத்தைப் பற்றியது? என்ன நடக்கும் என்று கவலைப்படுவதற்குப் பதிலாக அவரை நீங்கள் நம்பி தேடும்போது தேவனுடைய வல்லமையும் பிரசன்னமும் தேவைகளை எப்படி வழங்குகிறது?