சோக் சிங் கோவிட் -19 இலிருந்து மீண்டு வந்தபோது, அவளது வயதான அம்மா பாதிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அவளுடைய அம்மா இறந்துவிட்டார். பின்னர் அவளைப் பிரிந்திருந்த கணவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார், மேலும் அவர்களது இளம் மகனை உரிமைகோரி வழக்கு தொடருவதாக மிரட்டினார். சோக் சிங் ஒரு பாலைவனத்தில் நடப்பதைப் போல் உணர்ந்தாள், வாழ்க்கை முற்றிலும் வறட்சியானது. தேவன் இருக்கிறாரா? எத்தகைய சூழலில் நான் இருக்கிறேன் என்று அவருக்குத் தெரியுமா? என்று சந்தேகித்தாள்.
ஜெபிப்பது கூட அவளுக்குக் கடினமாக இருந்தது. அப்போது யாத்திராகமம் 2:23-25 நினைவுக்கு வந்தது. இஸ்ரவேலர்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்தனர்: ஒடுக்கும் பார்வோன், கொடூரமான எஜமானர்கள், தங்களது மகன்கள் கொல்லப்பட்டனர். “தேவன் எங்கே?” என்ற அதே கேள்வியை அவர்கள் கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் தேவன் அங்கேயிருந்தார், “தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்” (வ. 24-25). நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டாலும், தங்கள் வேதனையைத் தேவன் அறிந்துள்ளார் என்றும் பதிலளிப்பார் என்றும் இஸ்ரவேலர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.
சோக் சிங் தனது வேதாகம குறிப்பேட்டில் வாசிக்கையில், தேவன் தன் தாயாரைக் கவனித்துக் கொள்ள உதவிய நேரத்தையும், கணவன் அவளை விட்டுப் பிரிந்தபோது அவளைப் பலப்படுத்தியதையும், ஒற்றைத் தாயாக அவளை ஊக்குவித்த நேரத்தையும் அது அவளுக்கு நினைவூட்டியது. இயேசு நமக்காகச் சிலுவைக்குச் சென்றதை அவள் நினைவு கூர்ந்தாள். “பாலைவனத்திலும் தேவன் எனக்காக இருக்கிறார் என்பதை அறிவது எனக்கு நம்பிக்கையைத் தருகிறது” என்றாள். அவள் நம்பிக்கையுடன், “தேவன் இருக்கிறார். மேலும் அவர் நினைவில் கொள்கிறார்” என்று அறிக்கையிடலாம்.
-லெஸ்லி கோ
கடந்த காலங்களில் கடினமான நேரங்களில், தேவன் உங்களுக்கு எப்படி உதவினார்? அவருடைய வாக்குத்தத்தங்களிலிருந்து நீங்கள் எவ்வாறு பெலனடயலாம்?
தகப்பனே, என் சூழலை நீர் அறிவீர், என் வேதனையும் சோகமும் உமக்குத் தெரியும். நீர் என்மீது அக்கறை கொள்வதை நான் அறிவேன். உம்மை தொடர்ந்து நம்பிட உதவும்.
23 சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான்.
இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து,
முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள்
அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம்
தேவசந்நிதியில் எட்டினது.
24 தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம்
ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த
உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்.
25 தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்;
தேவன் அவர்களை நினைத்தருளினார்.
தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்
|
|
|