பாவமறியாத தங்களுடைய குணாதிசயத்தை இழந்த இந்த பராமரிப்பாளர்கள், தாங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு பாதையில் பயணிக்கத் துவங்கினர். அவர்கள் ராஜாவைப் பார்க்க விரும்பாதது இதுவே முதல் முறை. அவர்கள் தங்களுடைய நிர்வாணத்தை உடனே அறிந்து, தங்களை ஒளித்துக்கொண்டனர். அதற்கு முன்பு இருவரும் ஒருவரையொருவர் குற்றப்படுத்தியதில்லை. தொடர்ந்த சில மணி நேரங்களுக்குள்ளதாகவே அவர்கள் பயத்தின் அர்த்தத்தை விளங்கிக்கொண்டனர். ராஜா அந்த தம்பதியினரை கண்டுபிடித்து, அவர்களின் பதிலைக் கேட்க முற்படுகிறார். அவர்கள் ஏன் தங்களை ஒளித்துக்;கொண்டனர்? அவர்களின் நிர்வாணம் மறைக்கப்படவேண்டும் என்று யார் சொன்னது? ராஜா தவிர்க்கச் சொன்ன பாதையை தேர்ந்தெடுத்துவிட்டார்களோ?

பராமரிப்பாளர்கள் பிடிபட்டார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் செய்த தப்பிதத்திற்கு பொறுப்பேற்க ஆயத்தமாயில்லை. மனுஷன் மனுஷியைக் குற்றப்படுத்தினான். மனுஷி பொல்லாங்கனை குற்றப்படுத்தினாள். பொல்லாங்கன் ஏதும் சொல்லவில்லை என்றாலும், ராஜாவின் மீதான வெறுப்பு அவன் கண்களில் தென்பட்டது. பராமரிப்பாளர்கள் குழம்பி, பயத்தில் ஆழ்ந்தனர். சற்று நேரத்திற்கு முன்பு அவர்கள் இருவருக்குள்ளாகவும் ராஜாவுக்குள்ளாகவும் இருந்த நெருக்கம் அவர்களுக்கு அதிகமாயிருந்தது. ஆனால் தற்போது அவர்கள் பயந்து நடுங்கினர்.

பராமரிப்பாளர்கள் பிடிபட்டார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் செய்த தப்பிதத்திற்கு பொறுப்பேற்க ஆயத்தமாயில்லை

அவர்கள் செய்த தப்பிதத்திற்காக ராஜா அவர்களை மன்னிக்கத் தீர்மானித்தபோதிலும் அவர்களின் சுய தேர்ந்தெடுப்பை அவர் தவிர்க்கவில்லை. அவர்களின் தோட்ட வீட்டில் அவர்கள் தொடர்ந்து இருப்பதை ராஜா அனுமதிக்கவில்லை. அந்த தோட்டத்தில் இருந்த ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்க அவர்களை அனுமதித்தால், அவர்களுக்குள் ஏற்கனவே துவங்கியிருக்கும் பருவ மற்றும் மரணத்தின் பாதையை மீண்டும் தலைகீழாக்கவேண்டியிருக்கும்.

பூரணமான சுதந்திரம் கொடுக்கப்பட்டதால், பராமரிப்பாளர்கள் சுயத்தை முக்கியத்துவப்படுத்தியதால், ராஜாவை விட்டு பிரிந்தது மாத்திரமல்ல, அவர்களுக்குள்ளும் பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் நித்திய நித்தியமாய் இப்படி வாழ்வது முறையன்று என்பதினால், ராஜா அவர்களை தோட்டத்தை விட்டு வெளியேற்றினார். தோட்டத்திற்கு வெளியேயும் ராஜா அவர்களை தொடர்ந்து பராமரித்தார். ஆனால் உறவில் மாற்றம் ஏற்பட்டது. பராமளிப்பாளர்கள் முன்பு ராஜாவை நம்பியதுபோல தற்போது நம்புவதில்லை.

தேர்ந்தெடுப்பின் மரபு

இந்த முதல் குடும்பத்தோடு ராஜா நெருங்கிய தொடர்பில் இருந்தாலும், பிரச்சனை துளிர்விட ஆரம்பித்தது. பராமரிப்பாளர்கள் தோட்டத்திற்கு வெளியே தங்களுடைய வாழ்க்கையை மீண்டும் கட்டிக்கொள்ள தீர்மானித்தபோது, அவர்களின் மூத்த குமாரன் அவர்களுடைய இருதயத்தை உடைத்தான். அவனுடைய கோபத்தின் சுபாவத்தினால் ராஜாவின் மென்மையான ஆலோசனையை எதிர்த்தான். ஒரு கண்மூடித்தனமான கோபத்தில் தன் உடன்பிறந்த சகோதரனை கொன்றான். அதன்பின்பு அவர்களுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியது. திரும்பி வருவதற்கு வாய்பில்லை. நன்மை தீமை அறியத்தக்க விருட்சம், முழு சுதந்திரத்தின் விருட்சமாய் ஓங்கி வளர்ந்தது. அது துக்கம் மற்றும் இழப்பின் மரபாய் மாறியது.

குமாரன் அகதியானான். தங்கள் பெற்றோரின் துயரத்தோடு வாழ விரும்பாத அவன் அலைந்து திரிய ஆரம்பித்தான். எங்கும் நிலையாய் தரிக்க முடியாமல் திரிந்துகொண்டேயிருந்தான். அவன் செய்த தப்பிதங்களின் நினைவிலிருந்தும் அவனுடைய வாழ்க்கையின் இந்த மாற்றத்தின் நினைவுகளிலிருந்தும் அவனால் தப்ப முடியவில்லை. காலங்கள் நகர, முதல் தம்பதியினருக்கு பல குழந்தைகள் பிறந்தது. பராமரிப்பாளர்களுக்கு பிறந்த எண்ணற்ற பிள்ளைகள், ராஜாவைக் குறித்த அறிவில் குறைவுள்ளவர்களாய் காணப்பட்டனர். ஓடும் நீர்நிலைகளின் அருகாமையிலும், எரியும் நெருப்புப் பந்தங்களையும் சுற்றி அமர்ந்துகொண்டு, குடும்பத்தில் மூத்தவர்கள் சிறந்த ராஜாவைக் குறித்த கதைகளை பகிர்ந்தனர். ஆனால் பிள்ளைகளில் பெரும்பாலானோர் கடந்த காலத்தைக் குறித்தல்ல, நிகழ்காலத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தனர். அந்த ராஜாவைக் குறித்து எண்ணாமல், பூமியில் உதித்த பல தலைமுறைகள், வாழ்ந்து மரிப்பதையே சூரியனுக்குக் கீழ் வழக்கமாய் கொண்டிருந்தது.

உலகளாவிய ஜலப்பிரளயம் பூமியில் இருந்த பல பராமரிப்பாளர்களை வாரிச்சென்றது. தப்பிப்பிழைத்தவர்கள் தங்கள் சுய ஆதிக்கத்தை ஸ்தாபிக்க துவங்கினர். ராஜாவுக்கு உண்மையாய் இருந்தவர்கள் வெகு குறைவானவர்களாயும், ஒருவரிலொருவர் வித்தியாசப்பட்டும் இருந்தனர். ராஜாவின் நோக்கத்திலிருந்தும் தரிசனத்திலிருந்தும் வழிவிலகிய குடிமக்களிடம் ராஜாவின் சாயலைப் பார்ப்பது அரிதாகப்பட்டது. பலவான் பலவீனனை ஒடுக்கினான். குடும்ப பிரச்சனைகள் வலுத்தது. மனக்கசப்பு, குடும்பத்து அங்கத்தினர்களின் இடைவெளிக்கு காரணமாகியது. தலைவர்கள் பொங்கியெழுந்தனர். பிரிவினை ஏற்படுத்திய தீமையின் ஆதிக்கத்தைத் தகர்த்தெரிந்து குடும்பத்தை ஒன்றுசேர்க்க அவர்களுக்கு ஒரு திட்டம் அவசியப்பட்டது.

ஒரு தரிசனம் உதயமானது. தங்கள் பிள்ளைகள் எங்கும் இடம்பெயராதபடிக்கு அக்குடும்பம் ஒரு உயர்ந்த கோபுரத்தைக் கட்டியது. பட்டணத்தின் நடுவில் உயர்ந்து நின்ற அந்த வானளாவிய கோபுரத்தை பார்த்த எவரும் அவர்களின் சாமர்த்தியத்தைக் கண்டு பெருமையில் திளைத்தனர். அதின் வீதிகளில் வலம் வந்த அனைவரும் முடிவில்லா பெருமையினாலும் மனித முயற்சியின் மேன்மையினாலும் பெருமிதம் கொண்டனர். ஆனால் அதைக் கட்டியவர்கள் ராஜாவின் தரிசனத்தை மறந்துவிட்டனர். அடுத்த நாள் காலையில் கோபுர கட்டுமானப்பணியில் ஈடுபட்டவர்கள் நடுவே குழுப்பம் ஏற்பட்டது. அவர்களுக்குள்ளான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் பாஷைகளை மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களால் மற்ற கோத்திரத்தாரின் பாஷைகளை விளங்கிக்கொள்ள முடியவில்லை. சில மணி நேரங்களுக்குள்ளாகவே, கோபுரக் கட்டுமானப்பணி முடிவுக்கு வந்தது. வாகனத்திலிருந்து விழும் தூசுகள் எல்லா திசைக்கும் பரவுவதுபோல, அவரவர் மொழி பேசுகிறவர்கள் சுற்றியிருந்த அனைத்து திசைகளிலும் பரம்பினர்.

ராஜாவின் திட்டம்

தங்கள் கனவுகளைத் தொலைத்த இந்த கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் ராஜாவின் தரிசனத்தை நினைவுகூர தவறினர். என்ன தவறு நிகழ்ந்தது என்றும் ஏன் அவர்களால் சமாதானமாய் வாழ முடியவில்லை என்றும் யோசித்தனர். ஆனாலும் ராஜாவின் ஆசீர்வாதங்களை அனுபவித்த அவர்கள், அதே போன்று ஒருவருக்கொருவர் உதவிசெய்து வாழும் சுதந்திர பூமி என்னும் ராஜாவின் திட்டத்திற்கு தங்கள் இருதயத்தில் இடங்கொடுக்கவில்லை.

எனவே ராஜா புதிய திட்டத்தை அமல்படுத்தினார். அவர் தன்னை 75 வயது நிரம்பிய பராமரிப்பாளனுக்கு அறிமுகப்படுத்தி, அவரிடத்தில் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்: “உன் தேசத்தை விட்டு என்னை பின்தொடர்ந்து வா. நான் உனக்கு புதிய தேசத்தையும், அநேக பிள்ளைகளையும் கொடுத்து, பூமியிலிருக்கும் அனைத்து வம்சங்களுக்கும் என் அன்பையும் விளங்கப்பண்ணுவேன்.” அந்த வயதானவரும் அவருடைய மனைவியும் வெகுகாலங்கள் குழந்தையில்லாமல் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு குமாரனோ அல்லது குமாரத்தியோ பிறக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் எப்போதோ இழந்துவிட்டனர். அந்த பராமரிப்பாளனின் பெயரின் அர்த்தம் “உயர்த்தப்பட்ட தகப்பன்.” ஆகையால் குழந்தையின்மை என்பது அவர்களுக்கு வலிமிகுந்த வேதனை.

பராமரிப்பாளனுடைய சந்ததியின் மூலமாகவே உலகத்திற்கு ஒரு நம்பிக்கை உதிக்கும் என்பதை ராஜா மீண்டும் மீண்டும் அவருக்கு உறுதிபடுத்தினார்.

ஆகையால் அவர்கள் காத்திருந்தனர். ஆனால் 25 வருடங்கள் காத்திருந்தும் ராஜா வாக்குப்பண்ணிய பிள்ளை பிறக்கவில்லை. பராமரிப்பாளனுடைய சந்ததியின் மூலமாகவே உலகத்திற்கு ஒரு நம்பிக்கை உதிக்கும் என்பதை ராஜா மீண்டும் மீண்டும் அவருக்கு உறுதிபடுத்தினார். “திரளான ஜாதிகளுக்குத் தகப்பன்” என்று அர்த்தங்கொள்ளும் புதிய பெயரை ராஜா அவருக்குக் கொடுக்கிறார். அந்த மனிதனுக்கு 100 வயதாயிருக்கும்போது, அவருடைய மனைவிக்கு 90 வயதாயிருக்கும் போது அந்த அற்புதம் நிகழ்ந்தது. வயதான அந்த பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவனுடைய பிறப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததால், “நகைப்பு” என்று அர்த்தங்கொள்ளும் பெயர் அவனுக்கு சூட்டப்பட்டது.

ராஜாவின் குடும்பம்

இரண்டு தலைமுறைகள் கடந்தவுடன் அந்த குடும்பம் 12 குமாரர்களையும், அவர்களின் மனைவிகள் மற்றும் பிள்ளைகள் என்று பலுகிப்பெருகியது. மற்ற பராமரிப்பாளர்களின் குடும்பங்களை ஒப்பிடுகையில் இக்குடும்பம் சிறியது என்றாலும், குழந்தையில்லாத தம்பதியரின் வம்சம் உலக சரித்திரத்தின் மறக்கமுடியாத ஒரு குடும்பமாய் மாறியது. தொடர்ந்த வருடங்களில், ராஜா தெரிந்துகொண்ட அந்த குடும்பத்தின் மூலமாக பூமியில் வாசம்பண்ணும் அனைத்துக் குடும்பங்களுக்கும் தன்னை வெளிப்படுத்தினார்.

DONATE

குடும்பத்தின் ஆரம்ப நாட்கள் இயல்பாக நகர்ந்தது. ஒரு சில குடும்பத்தகராறுகள் மற்றும் அந்நியர்களுடனான சில பிரச்சனைகளைக் கடந்து, 70 பேர் கொண்ட அந்த குடும்பம் தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் நிமித்தம் தெற்கு நோக்கி பயணம் மேற்கொண்டது. அந்த பெரிய ராஜா அவர்களுக்கு பின் நின்று வழியை ஆயத்தம்பண்ணுவதால், அவர்கள் போய் சேர்ந்த தெற்கு தேசத்து நண்பர்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். அந்த தேசத்தின் பிரபு அவர்களுக்கு உணவு மட்டுமின்றி, அவர்கள் சொந்தமாய் பயிரிட்டு வாழ்க்கையை நடத்திக்கொள்ளும் செழிப்பான வளைகுடா ஸ்தலத்தை அவர்களுக்கு கொடுத்து உதவினார். இது அவர்களின் சொந்த தேசம் இல்லையென்றாலும், அங்ஙனம் அவர்கள் சௌகரியமாய் வாழ்ந்தனர். அங்கே தங்கள் வீடுகளைக் கட்டிக்கொண்டு, பிள்ளைகளை வளர்த்து, நிலங்களை பயிரிட்டனர்.

ஒரு சில தலைமுறைகள் கடந்த அக்குடும்பத்தின் அதிவேகமான வளர்ச்சி மற்றவர்களை அச்சுறுத்தியது. அவர்களுக்கு நன்மை செய்த அந்த தேசத்தின் பிரபு தற்போது இல்லை. பின்பாக வந்த புதிய பிரபுக்கள், தங்கள் எல்லைக்குள் அடைக்கலம் தேடிவந்த இந்த குடும்பத்தின் அதிவேக வளர்ச்சியைக்கண்டு அவர்கள் தங்களை மேற்கொள்ளக்கூடும் என்று அஞ்சினர். தெற்கு தேசத்து பிரபுக்களின் கை ஓங்கியிருந்தபடியால், அவர்கள் இக்குடும்பத்தை கடுமையாய் வேலை செய்ய கட்டாயப்படுத்தினர். தெற்கு தேசத்தின் கட்டடப்பணிக்கு தேவைப்படும் செங்கல்களை உச்சி வெயிலில் உருவாக்கும்படிக்கு சாட்டைகளைக் கொண்டு அவர்களைக் கொடுமைப்படுத்தினர். உபத்திரவம் அதிகரிக்க, அக்குடும்பம் புலம்ப ஆரம்பித்தது. ராஜா எங்கே? அவர் அவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்திருக்கிறார். ஏன் அவர் இவர்களை பாதுகாக்கவில்லை? செங்கல் சூளையின் தூசி பறந்து உயரே எழும்ப, அவர்களின் புலம்பலும் நாளுக்குநாள் உயர எழும்பியது. ராஜா எங்கே? அவர்களை விட்டுவிட்டு அவர் எங்கே போனார்?

மீட்கும் உறவு

செங்கற் சூளைக்குள் ஒரு புதிய அந்நியன் வந்தவுடன் அவர்களின் குமுறல் அடங்கியது. அவருடைய சத்தம் அந்த தெற்கு பிரபுக்களின் சத்தம்போலில்லை. அவருடைய கையில் சாட்டை இல்லை. அவருடைய கதை நம்முடைய மூதாதையர்களின் கதைகளோடு ஒத்துப்போனது. அந்த புதிய மனிதன், தானும் அக்குடும்பத்தின் பிள்ளை என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். 40 வருடங்கள் வனாந்திரத்தின் கிழக்கு திசையில் தான் அகதியாய் வாழ்ந்ததாய் அறிவித்தான். ஒரு நாள், தன்னுடைய மாமனின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, ராஜாவின் சத்தத்தை அவன் கேட்டிருக்கிறான். ராஜா அவனைப் பார்த்து, தன்னுடைய குடும்பத்தின் புலம்பல் அவருக்கு எட்டியதாகவும், அவர்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு கூட்டிச்செல்லும்படியும் சொல்லியிருக்கிறார்.

அனைத்து கண்களும் அந்த புதிய உறவின் மீதே நோக்கமாயிருந்தது. இவன் யார், எங்கிருந்து வந்தவன்? இவன் பிதற்றுகிறானோ? அல்லது இவன் நிஜமாகவே ராஜாவின் சத்தத்தைக் கேட்டவனா? இந்த கேள்விகளோடு குழப்பத்திலிருந்த குடும்பத்தினர், அற்புத அடையாளக் கிரியைகளை அந்த உறவினன் நடப்பித்துக் காண்பிக்கும்போது, அவன் தேவனால் அனுப்பப்பட்டவன் என்று நம்பியது. ஆனால் துரதிருஷ்டவசமாய் அவர்களை மீட்கும் உறவினனின் முதல் முயற்சி, பிரச்சனையை இன்னும் பெரிதுபடுத்தியது. தெற்கு ராஜாவின் முன் நிறுத்தப்பட்ட இந்த உறவினன், “என் ஜனத்தைப் போக விடு” என்று சொல்ல, குடும்பத்தாரின் உபத்திரவம் அதிகரித்தது. தேசத்தின் பிரபு கோபங்கொண்டு, குடும்பத்தினரின் ஜீவியத்தை இன்னும் கடினப்படுத்தினான்.

தொடர்ந்த கடினமான நாட்களில், தெற்கு தேசத்தின் பிரபுக்கு பேரம் பேசியதை விட அதிகம் கிடைத்தது. தெற்கு தேசத்து பிரபுவின் மீதும் அவனுடைய மக்கள் மீதும் அந்த பெரிய ராஜா பல இயற்கை சீற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாய் அனுமதித்தார். வண்டுகள், பேன்கள், தவளைகள் என்று வாதைகளை அவர்கள் மீது வரப்பண்ணினார். இறுதியில் பிரபுவின் வைராக்கியத்தை தகர்த்தெரியும் கடைசி வாதையை அனுப்பினார். குடும்பத்தை பாதுகாக்கும்பொருட்டு, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை வீட்டு கதவின் நிலைக்கால்களில் பூசும்படிக்கு அறிவுறுத்தினார். அந்த இரவில் மரண தூதன் அந்த தேசத்தில் வலம்வர நேர்ந்தது. தங்கள் வீட்?