யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுப்பார் ! (வ.47). 1 சாமுவேல் 17 :32 -51
என் மகள் ஆழ்ந்த வலியை அனுபவித்த சில நொடிகளுக்கு பிறகு நான் சமையலறைக்கு சென்றேன். அவள் சுண்டுவிரல் கதவிடுக்கில் மாட்டிக்கொண்டது .நான் பார்த்தபோது அவள் தன் ஒரு கையை கதவிடுக்கில் வைத்து மறு கையால் கதவை மூட முயன்றாள். என்ன செய்கிறாள் என்று கேட்டபோது ,”நான் என் தைரியத்தை சோதிக்கிறேன்” என்றாள். அவள் எத்தனை தூரம் கதவு மூடி கை அடிபடும் என்று பார்த்துக் கொண்டிருந்தாள். நல்ல காலமாக நான் அவளின் வலிமிகுந்த சோதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.
கோலியாத் என்னும் ஏளனம் செய்யும் , தவறாக பேசும் அரக்கனை தாவீது எதிர்கொள்ளும்போது, தைரியமாக மோதினான் (1சாமுவேல் 17 :32 ). தாவீது சில இஸ்ரவேல் வீரர்களின் சிறிய தம்பி. ஆனால் அவன் கோலியாத்துடன் எந்த கவசமும் போடாமல் சண்டை போடுவதற்கு தயாரானான். தாவீது தன் தேவன் மேல் வைத்த விசுவாசத்தினால் எதிரி முன் தைரியமாக நின்றான். அவனை காட்டு விலங்குகளின் கைக்குத் தப்புவித்த கர்த்தர் இந்த கோலியாத் கைக்கும் தப்புவிப்பார் என்றான் (வ.37). அதனால் அவனிடம் கத்தினான், “இன்றையதினம்… .அதனால் இஸ்ரவேலின் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.
யுத்தம் கர்த்தருடையது அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்!” (வ. 46-47). தேவன் தாவீதை மீட்டார். தாவீதின் கவணிலிருந்து தேவ வல்லமையால் எறிந்த கல்லின் தாக்கத்தால் கோலியாத் இறந்தான்.
நாம் தைரியமாக செயலாற்றும் திறன் தேவன் மற்றும் அவர் வல்லமையிலிருந்து பாய்கிறது. நாம் பயப்படலாம் அல்லது சந்தேக கணங்களுடன் இருக்கலாம். ஆனால் நம் மூலம் அல்லது நமக்காக அவர் போராடி நீக்குவார் அல்லது அவர் பெலன் மற்றும் ஞானத்தினால் தக்க வைக்கிறார். அவரால் நாம் தேவைப்படும் போது, துணிச்சலான நடவடிக்கையை எடுக்க முடியும். தாவீது சங்கீதம் 28:7ல் வெளிப்படுத்தியது போல நம்மால் வாழ முடியும்: “கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார். என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களி கூருகிறது.”
சிந்தனை
தேவன் தம் மக்கள் கானானுக்குள் சென்றபோது வழங்கியவற்றை காண சங்கீதம் 44: 1-3 பாருங்கள். வாசிக்க: நீதிமொழிகள் 21 :30 -31 உண்மையான வெற்றி தேவனை சார்ந்து உள்ளது என்பதை அறிய வாசிக்கவும்.
.
தேவனின் பார்வையில் சரியாக இருப்பதற்கும் தைரியமாக இருப்பதற்கும் உள்ள தொடர்பு என்ன? (காண்க நீதிமொழிகள் 28:1). இயேசு தைரியமானவர் என்று உங்களால் விவரிக்க முடியுமா?