தேவன் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வார் (வ. 6) (எபேசியர்:2:1-10)

பல குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் புதியதாக பிறந்திருக்கும் குழந்தைகளை பாராமரிக்கும் செவிலியர் அமர்ந்திருந்த ஒரு அறைக்குள் நுழைந்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு குறைமாத குழந்தைகளாக அந்த செவிலியரால் பராமரிக்கப்பட்டு வந்தபோது எடுக்கப்பட்ட தங்கள் புகைப்படங்களை அந்த குழந்தைகள் எடுத்துச் வந்திருந்தனர். அந்த குழு அந்த செவிலியரை ஆச்சரியப்படுத்துவதற்கு முன்பு, அவர் ஒரு வீடியோவைப் பார்த்தார். அதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதில் அவரின் பங்குக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தினர். மீண்டும் இணைந்த பிறகு, “நான் செய்வதை நான் விரும்புகிறேன். எனக்கு இது ஒரு ஊழியம். தேவன் என்னை ஒரு நோக்கத்திற்காக [இங்கே] வைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இந்த குழந்தைகள் மீதும் இந்த பெற்றோர்கள் மீதும் அன்பைக் கொடுத்துளார்” என்று அந்த செவிலியர் குறிப்பிட்டார்.

மனதைத் தொடும் இந்தக் கதை, தேவனின் அன்பும் தயவும், நாம் உதவியற்ற சூழ்நிலையை இருக்கும் போது நம்மை மீட்ட செயலை மனதிற்கு கொண்டு வருகிறது. பவுல் சொன்னது போல், நம்முடைய பாவத்தினிமித்தம் இறந்த நம்மை உயிர்ப்பிக்கிறார் (எபேசியர் 2:1). நாம் அவநம்பிக்கையுடன் இருந்தாலும், ஆவிக்குறிய வாழ்க்கையை சாத்தியமாக்குவதற்கு என்ன அவசியம் என்பதை தேவன் அறிவார். “சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்” (வச. 3). ஆனால் தேவன், கோபத்தில் நமக்கு பதிலளிக்கவில்லை. அவர் நம்மை நேசிக்கிறார், நம்மீது அக்கறை காட்டுகிறார். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் மூலமும் உயிர்த்தெழுதல் மூலமும், நாம் அவருடைய இரக்கத்தைப் பெறுகிறோம்.

எபேசு சபை விசுவாசிகளுக்கு இந்த விஷயங்களைப் பற்றி பவுல் எழுதியபோது, அவர் அவர்களிடம், “தேவன் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வார்,” (வச.7) என்று கூறினார். இன்று நாம் வேதத்தை வாசிக்கும் போது, பவுல் எதை அர்த்தப்படுத்தினார் என்பதைக் காணலாம். பல நூற்றாண்டுகளாக மாறிவிட்ட வாழ்க்கையையும், தேவனுடைய தயவின் சான்றையும் நாம் திரும்பி பார்க்க முடிகிறது. மேலும் எதிர்நோக்கும்போது, நமது இரட்சிப்பு எதிர்கால சந்ததியினருக்கும் தேவனின் நற்குணத்தை காண்பிக்கும் என்பதை அறியலாம்.

செவிலியரின் இரக்கக்மான கவனிப்பைப் போலவே, தேவன் நம் ஆத்துமாவுக்கு சேவை செய்திருக்கிறார். அவர் நம்முடைய பாவங்களை கழுவி, அவருடைய ஆவியின் மூலம் புதிய வாழ்க்கையை சாத்தியமாக்கியுள்ளார் (தீத்து 3:5).

ஆசிரியர்: ஜெனிபர் ஷுல்ட்

சிந்தனை

2 சாமுவேல் 9:1-11ஐப் வாசித்து, உடல் ஊனமுற்ற ஒருவரை தாவீது கவனித்துக்கொண்ட விதத்தைக் கவனியுங்கள்.
தேவன் உங்கள் ஆத்துமாவை எவ்வாறு கவனித்து உங்களை முழுமைப்படுத்தினார்? தேவனின் தயவு, அவருக்கு உங்கள் பதிலையும், மற்றவர்கள் மீதான உங்கள் அக்கறையையும் எவ்வாறு பாதிக்கிறது?

 

 

 

banner image