“இப்போதைக்கு வலியைக் கட்டுக்குள் வைப்பது தான் சிறந்தது” என்று மருத்துவர் கூறியது போல், நான் டாக்டர் அலுவலகத்தில், என் கணவரின் பக்கத்தில் அமர்ந்தேன். நான் என் கைத்தடியைப் பிடித்துக்கொண்டேன். நாள்பட்ட வலி மற்றும் முதுகு காயம் காரணமாக ஏற்பட்ட சோர்வு காரணமாக செயல்பாட்டுத் திறன் குறைந்திருப்பதால், நான் ஊனமுற்றவளாகக் கருதப்படுவேன். என் கணவரை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை, அவர் ஏற்கனவே எனது பராமரிப்பாளராக பணியாற்றியதில் சோர்வுற்றிருந்தார்.ஒரு டிஷ்யூவை என்னிடம் கொடுத்து, “நம்பிக்கையை இழக்காதே” என்று என் மருத்துவர் கூறினார்.என் கண்ணீரைத் துடைத்தேன்.

“என் நம்பிக்கை இயேசுவில் உள்ளது” என்றேன். “நான் சற்று… வருந்துகிறேன்”.ஆனால் நானும் என் கணவரும் ஏற்கனவே வெறுமையோடு இருக்கிற போது,நான் எப்படி விடாமுயற்சியுடன் இருக்க முடியும்?என் கணவர் என்னை அமைதியாக வீட்டில் விட்டு விட்டு, வேலைக்குத் திரும்பும்போது கவலையான எண்ணங்கள் என் சமாதானத்தைச் சிதறடித்தது. ஏமாற்றம், கோபம், துக்கம், குழப்பம், விரக்தி, சுய பரிதாபம், பயம்என்னைத் தாக்கியது. நான் வீட்டிற்குள் நுழைந்து, சோபாவில் சாய்ந்து, அழுதுகொண்டிருந்தேன்.

என் நாய்க்குட்டி என் மடியில் ஏறி அசைந்தது. நான் சிரிக்கும் வரை என் கண்ணீரை நக்கியது. “நான் நன்றாக இருக்கிறேன்”என்று சொன்னேன். அவளைத் திசைதிருப்பஒரு பொம்மையைக் காட்டினேன் . எங்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டிருந்த இரும்புச் சிலுவையை வெறித்துப் பார்த்தேன். “நான் பலவீனமாக இருக்கும்போது கிறிஸ்து என் பெலன் என்பதை என்னால் எப்படி மறக்க முடிந்தது?எனக்கு உதவும், இயேசுவே,” நான் என் நாய்க்குட்டியின் காதுகளுக்கு பின்னால் சொறிந்தேன்.

எங்கள் அறையை அலங்கரிக்கும் சிலுவைகளில் கவனம் செலுத்தியபோது அமைதி என்னைச் சூழ்ந்தது. என் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் நிலையான பிரசன்னத்தில் உறுதிசெய்யப்பட்ட எனது நம்பிக்கையுடன் நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் என்னால் எதையும் வெல்ல முடியும் என்பதை ஒவ்வொரு சிலுவையும் உறுதிப்படுத்தியது. “நான் நன்றாக இருக்கப் போகிறேன், காலிமே” ,நான் என் நாய்க்குட்டியின் மென்மையான ரோமங்களைத் தடவி, கண்ணீர் மீண்டும் வழிய அனுமதித்தேன்.

“இயேசு கண்ணீர் விட்டார்”(யோவான் 11:35)என்று நான் கண்டுபிடிக்கும் வரை, அழுகை பலவீனமான விசுவாசத்தின் ஆதாரம் என்று நினைத்தேன். துக்கப்படுபவர்களுடன் அவர் அனுதாபம் கொள்ள முடியும் என்பதை அவரது கண்ணீர் உறுதிப்படுத்துகிறது. ஆனால் இயேசு அழுவதற்கு முன்னும் பின்னும் என்ன நடந்ததென்பது எனக்கு அமைதியைத் தந்தது, என் மாறிவரும் உணர்வுகள் அல்லது கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளைச் சார்ந்தது அல்லஎன்பதைப் புரிந்து கொண்டேன்.

இயேசு லாசருவின் வியாதியை “இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குகிறதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும்அதினால் மகிமைப்படுவார் என்றார்” (யோவான் 11:4). இயேசு அநேகந்தரம், தம்முடைய சீஷர்களுக்கு, அவருடைய சமாதானமாகியபிரசன்னத்தில் தங்கவும், அவருடைய வாக்குத்தத்தங்களை நம்பவும்வாய்ப்பளித்தார். ஒவ்வொரு அதிசயங்களிலும்தம்முடைய உண்மையையும் வல்லமையையும் வெளிப்படுத்தினார். ஆனாலும் சீஷர்கள் பயத்திற்கு இடம் கொடுத்து, இயேசு சொன்னதை நோக்காமல்தாங்கள் காண்பதில் கவனம் செலுத்தினார்கள்(வ. 8-16).

லாசரு கல்லறையில் நான்கு நாட்கள் இருந்தபின் இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அவர் மார்த்தாளுக்கு அளித்த வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தினார் (வ. 17-23). இயேசு யார் என்பதை அவள் ஒப்புக்கொண்டாள், ஆனால் அவளுடைய பதில் அவளுடைய சகோதரியின் பதிலிலிருந்து அதிகம் வேறுபடவில்லை (வச. 29-32). புரிந்துகொள்வதில் தாமதம் ஏற்பட்டதற்காக அவர்களைக் கண்டனம் செய்வதற்கு அல்லது தண்டிப்பதற்குப் பதிலாக, இயேசு அவர்கள் துக்கப்படுவதைக் கண்டு இரக்கம் காட்டினார், அழுதார் (வச. 33-37). இயேசு லாசருவைக்கல்லறையிலிருந்து வெளியே அழைக்கும் வரை அவர்கள் சந்தேகம் கொண்டிருந்தனர் (வச. 41-45). லாசருவின் உயிர்த்தெழுதல் இயேசுவின் வல்லமையை நிரூபித்தது , சீஷர்களைத் தம் சிலுவையின் அடிவாரத்திற்கு அழைத்துச் சென்றபோது அவர் கொடுத்த வாக்குறுதியை உறுதிப்படுத்தியது.

உடன்பிறப்புகள் இயேசுவோடு நெருக்கமாக இருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. தனது புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பிறகு, லாசரு இயேசுவின் முன்னிலையில் ஓய்வெடுத்தான். மார்த்தாள் இயேசுவுக்கு சேவை செய்தாள். மரியாள் முழுமனதுடன் இயேசுவைப்பணிந்து கொண்டாள். பிரதான ஆசாரியர்கள் லாசருவைக் கொல்லவும் திட்டமிட்டனர், ஏனென்றால் அவருடைய வாழ்க்கை பல யூதர்களை இயேசுவிடம் திரும்பச் செய்தது (யோவான் 12:1-2, 9-11).

இயேசுவின் அன்பான , நிலையான பிரசன்னம் அவருடைய சமாதான பலியாகும்.நாம் நம்முடைய பாவத்திலும் உடைந்த நிலையிலும் மரித்திருக்கும்போது, இயேசு நம்மைக் கல்லறையிலிருந்து வெளியே அழைக்கிறார். நாம் மனந்திரும்பி, பாவத்திலிருந்து விலகி, அவர்மீது நம்பிக்கை வைக்கும்போது நம்முடைய பாவமன்னிப்பின் மூலம் ஒரு புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க அவர் நம்மை அழைக்கிறார். நமக்காக தம்முடைய ஜீவனைக் கொடுத்ததன் மூலம்நம்முடைய பாவம், மரணம் மற்றும் முறிவுகளை ஏற்றுக்கொண்டு தம்முடைய உயிர்த்தெழுதலால் சமாதானத்தை அருளுகிறார்.

“உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு”(யோவான் 16:33), கஷ்டப்படும்போது இயேசுவை நம்முடைய பாதிப்புகளுடன் நம்பலாம். அவருடைய மாறாத உண்மை,கிருபை நமது வாழ்க்கைக்கானஅவரது திட்டங்கள்ஒவ்வொன்றிலும் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். ஏனென்றால் அவருடைய அசைக்க முடியாத வாக்குறுதிகளில் நமது நம்பிக்கை உள்ளது.

நம்முடைய உயிர்த்தெழுந்த கிறிஸ்து, அவருடைய வார்த்தையின் மூலம் நமக்குக் கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நம்புவதற்கு ஏராளமான வாய்ப்புகளுடன் திறந்த அழைப்பையும் வழங்குகிறார். நமது கல்லறை ஆடைகளை விட்டு விட்டு புதிய வாழ்வில் அடியெடுக்கவும், அவரைச் சேவிக்கவும், அவரைத் தொழுது கொள்ளவும், மற்றவர்கள் அவரிடம் திரும்பச் செய்யும் வகையில் வாழவும் நம்மை அழைக்கிறார்.

இன்று கிறிஸ்துவின் சமாதானத்தை ஏற்றுக்கொள்வாயா?