உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால் அவன் உங்களுக்கு பணிவிடைக்காரனாயிருக்கக் கடவன். மாற்கு 10:43
ஓவியர் வெள்ளை நிறம் தெளித்தபோது, கருப்பு கேன்வாஸில் ஊதா நிறமாக மேகங்கள் தோன்றின. ஓவியர் நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் தெறித்தபோது, மலைகள் விரைவில் வானத்தை நோக்கித் தோன்றின, வெண்ணிறத் துகள்கள் பனியில் அவைகளைச் சூழ்ந்தன.
பின்னர் கலைஞர் அதிர்ச்சியூட்டும் மஞ்சள் தெளிப்பில் அடித்தளத்தை தீட்டியபோது, காட்சி பாழாகத் தெரிந்தது.ஆனால் ஓவியர் கேன்வாஸில் தொடர்ந்து தீட்டியபோதுஒரு ஓடையால் பாய்ச்சப்பட்ட பச்சை மேய்ச்சல் வெளிவரத் தொடங்கியது. தவறு போல் தோன்றிய ஒன்று புதிதாக மாறியது. ஏதோ சிறந்தது.
ஒரு புதிய ராஜ்யத்தைப் பற்றிய கிறிஸ்துவின் வாக்குறுதி சீஷர்களுக்கு ஒரு கவர்ச்சியான வாய்ப்பாகத் தோன்றியது. யூத மக்களை ரோமானிய அடக்குமுறையிலிருந்து விடுவித்து, சீஷர்களைத் தமது அமைச்சரவையாக நியமிக்கும் ஒரு மேசியா தலைமையிலான அரசாங்கத்தை அவர்கள் கற்பனை செய்தனர். சீஷர்களில் யாருக்கு முக்கியமான பதவி என்று கூட சண்டையிட்டனர் (மாற்கு 10:37,41).
சீஷர்களுக்குச்சிலுவை ஒரு பெரிய தவறு, ஒரு முழுமையான தோல்வி போல் இருந்தது. இயேசு வரைந்த காட்சியில் தலைவன் சேவை செய்கிறான், பலவீனம் பலமாகிறது, கடைசியிலிருப்பவன் முதன்மையானவனாகிறானென்பதை அவர்களால்ப் பார்க்க முடியவில்லை.எல்லாம் தோற்றுப்போனபோது, கிறிஸ்து ஜெயித்ததை அவர்கள் உணரவில்லை.
நாமும் நம்சொந்தத் திட்டங்களை உருவாக்குகிறோம், யதார்த்தம் ஊடுருவும் வரை அவை நமக்கு நன்றாகத் தோன்றும். கர்த்தர் நம் வாழ்க்கையில் சற்று வித்தியாசமானதைச்செய்யும்போது, நமது தீர்மானங்களை மாற்றும்போது, நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அழகையும் படைப்பாற்றலையும் நாம் எதிர்பார்க்கலாம். தலைமைக் கலைஞராகியதேவன் நம் வாழ்க்கையில் புதியக் காரியங்களைச் செய்கிறார்
சீடர்கள் தங்கள் தலைவர் சிலுவையில் அறையப்பட்டபோது எப்படி உணர்ந்தார்கள் என்று நினைக்கிறீர்கள்? கடவுளின் வழி நம்முடையதை விட வித்தியாசமானது என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
பரலோகத் தகப்பனே, நன்மையானாலும் தீமையானாலும் உமது சித்தத்தின்படி நடக்கிறதென்றுஅறிந்து கொள்ளக் கூடியஞானமாகிய ரகசியத்தை எங்களுக்குத்தாரும். எல்லா சூழ்நிலைகளிலும் உம்மை நம்பவும்எங்களுடைய வாழ்வின் உம்முடையதிட்டங்களைபுரிந்து கொள்ளவும் எங்களுக்கு உதவியருளும்.
மாற்கு 10:35-45
அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். மற்ற பத்துப்பேரும் அதைக் கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.