எழுத்தாளர் சூசன் கெய்னின் ஆய்வின்படி, மக்கள் தங்கள் விருப்ப பாடல்களின் தொகுப்புகளில் மகிழ்ச்சியான பாடல்களைச் சராசரியாக 175 முறையும், சோகமான பாடல்களை 800 முறையும் கேட்கின்றனர். சோகமான இசை என்பது பலரை ஈர்ப்பது ஏன்? கெய்ன் இது ஏக்கத்திற்கான நமது பசியுடன் தொடர்புடையது என்றும், “துக்கத்துடன் கூடிய மகிழ்ச்சி. இது மிகவும் நேர்த்தியான ஒன்றை நாம் அனுபவிக்கும் போது அடிக்கடி உண்டாகிறது, அது இனம் புரியாத இடத்திலிருந்து நமக்கு வருவதைப்போலத் தோன்றுகிறது. அது ஒரு கணம் மட்டுமே நீடிக்கும், ஆனால் நாம் அங்கே நீண்டகாலம் வாழ விரும்புகிறோம்” என்றும் அறிவுறுத்துகிறார்.

ஏக்கத்தை, வேட்கை மற்றும் அன்பிலிருந்து பிரிக்க முடியாது என்று கெய்ன் வாதிடுகிறார், ஏனெனில் “நீங்கள் பாதிக்கப்படும் இடம்தான் நீங்கள் தீவிரமாக அக்கறை காட்டும் இடம்” ஆகவே, நம்முடைய வலியைக் குறித்துப் பயப்படுவதற்குப் பதிலாக, நம்முடைய ஏக்கம் நம்மை “தெய்வீகத்தின் பக்கம்” நடத்த முடியும் என்று கெய்ன் கூறுகிறார்.

கெய்னின் ஆழமான இந்த புரிதல், பவுல் “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே” (ரோமர் 8:20) காத்திருப்பதை எவ்வாறு விவரிக்கிறார் என்பதை எனக்கு நினைவூட்டுகிறது. இயேசு ஏற்கனவே பாவம் மற்றும் மரணத்தைத் தோற்கடித்திருந்தாலும், அவருடைய வெற்றி அனைத்து சிருஷ்டிகளிலும் முழுவதும் காணப்படுவதற்கு நாம் இன்னும் காத்திருக்கிறோம்.

அந்த நாள் இன்னும் வரவில்லை. நாம் நம்பிக்கையுடன் வாழ்கிறோம், மேலும் “ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?” (வ. 24). ஆனால் நாம் காத்திருக்கும்போது, ​​ஆவியானவர் தேவனின் அன்பில் நம்மைச் சுமந்து பலப்படுத்துவதால், ஏக்கத்தில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அனுபவிக்கிறோம் (வ. 26-27, 39).

-மோனிகா லா ரோஸ்

நீங்கள் எப்போது மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒரே நேரத்தில் அனுபவித்தீர்கள்? ஏக்கம் எவ்வாறு நம்மை நம்பிக்கையுடன் இணைக்கும்?

விலையேறப்பெற்ற தகப்பனே, உமக்காகவும், உமது ராஜ்யத்தின் மாட்சிமைக்காகவுமான ஏக்கத்தால் என் இதயத்தை நிரப்பியதற்கு நன்றி. என் இதயம் அந்த நம்பிக்கையில் நிலைத்திட எனக்கு உதவும்

ரோமர் 8:18-27

18 ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில்
வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள்
அல்லவென்று எண்ணுகிறேன்.
19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச்
சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
20
அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று
விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான
சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,
21
அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல,
கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
22
ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும்
சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
23
அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற
நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக்
காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
24
அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.
காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான்
காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?
25 நாம் காணாததை நம்பினோமாகில்,
அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.
26
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில்
நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி
வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால்,
ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு
நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
27
ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே
பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால்,
இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின்
சிந்தனை இன்னதென்று அறிவார்.

ரோமர் 8:25

நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.