இந்தியாவில் “பாரத் ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ்” என்று அழைக்கப்படும் சாரணர் இயக்கம், “தினமும் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்து” என்ற மிகவும் சுவாரஸ்யமான முழக்கத்தைக் கொண்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் அதன் உறுப்பினர்கள் ஒருவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களின் நாட்டை சிறந்த இடமாக மாற்றும் கருணை மற்றும் உதவியின் சிறிய செயலாகவும் இருக்கலாம். அந்த “நல்ல செயல்” எதுவென்று என்பது பற்றி எந்த விளக்கமும் இல்லை என்றாலும், மற்றொரு நபரின் வாழ்க்கையைச் சற்றே எளிதாக்குவதில் அதற்கு ஏதாகிலும் தொடர்பு இருக்க வேண்டுமென்றே பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
சங்கீதம் 90:12, “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” என்கிறது. ஆரம்பத்தில் இது வயதானவர்களுக்கான அறிவுரையாகத் தோன்றலாம். இருப்பினும், அதைக் கூர்ந்து படிக்கும்போது, இது சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என்று அனைவருக்கும் பொருந்தும் என்பதை நாம புரிந்துகொள்கிறோம். நமது ஆயுட்காலம் எழுபது ஆண்டுகள் என்று சங்கீதக்காரன் கூறுகிறார். முதலில், இந்த ஆண்டுகளின் எண்ணிக்கை மனித வாழ்க்கையின் நீண்ட ஆயுளைக் குறிக்கிறது போலத் தோன்றினாலும், கூர்ந்து கவனித்ததில், சங்கீதக்காரன் உண்மையில் ஒரு நபரின் ஆயுட்காலம் பற்றிக் குறிப்பிடவில்லை, ஆனால் அவர் நம் பூமிக்குரிய வாழ்நாட்களை நோக்கம் வாய்ந்தவையாக இருக்குமாறு உறுதிப்படுத்திக் கொள்ளும்படி கேட்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.
சிறிய கருணை செயல், கண்ணியமான மரியாதை, உதவி செய்வதற்கான ஆயத்தம் மற்றும் பிறரை அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமின்றி நடத்துதல் ஆகியவை நம் நாட்களைச் சரியாக வாழ சில எளிய வழிகள். பூமியில் இருக்கும் நேரத்தை நம்மால் ஒருபோதும் கணிக்க முடியாவிட்டாலும், ஒவ்வொரு நாளும் நன்மை செய்வதன் மூலம் முடிந்தவரைத் தாக்கத்தை விட்டுசெல்ல நாம் தீர்மானிக்கலாம். நாம் கிறிஸ்துவில் வளர்ந்து, அவருடைய சுபாவங்களை வெளிப்படுத்தும்போது, ஒவ்வொரு நாளையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக்குவோம்.
தேவன் நமக்குத் தந்துள்ள நாட்களை நாம் எவ்வாறு முழுமையாகப் பயன்படுத்த முடியும்? தங்கள் நாட்களைச் சரியாக வாழ்ந்த ஒருவரை உங்களால் யோசிக்க முடியுமா?
அன்பு இயேசுவே, உம்மைப் பிரதிபலிக்கும் வகையில் என் வாழ்க்கையை வாழ நீர் என்னை அழைத்தீர். அதைச் செய்ய எனக்கு ஞானமும் புரிந்துகொள்ளும் இதயமும் தாரும்.
