பல வருடங்களுக்கு முன் நானும் என் மகன் ஜோஷும் ஒரு மலைப்பாதையில் மேலே ஏறினபோது, ஒரு புழுதிபுயல் காற்றில் மேலே வருவதை கண்டோம். நாங்கள் முன்னேறி சென்றுகொண்டிருந்தபோது ஒரு மிருகம் தூசியின் மத்தியில் ஒரு பதுங்கு குழியை தோண்டிகொண்டிருந்தது. அதனுடைய தலை மற்றும் தோள்பட்டை அந்த குழியினுள் இருந்தது. தன்னுடைய முன்னங்கால்களை கொண்டு தீவிரமாக குழிதோண்டி தன்னுடைய பின்னங்கால்களை கொண்டு குழியிலிருந்து மண்ணை வெளியே தள்ளியது. தன்னுடைய வேலையில் மும்முரமாக இருந்ததால் அது எங்களை கவனிக்கவில்லை.

நான் என்னை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த ஒரு நீண்ட குச்சியை கொண்டு அதன் பின்னிருந்து அதனை குத்தினேன். நான் அதை காயப்படுத்தவில்லை, ஆனால் அது எகிறி மேலே குதித்து எங்களுக்கு நேராக திரும்பியது. நூறு அடி ஓட்டத்தில் ஜோஷும் நானும் ஒரு புதிய உலக சாதனை படைத்தோம்.

நான் என்னுடைய துடுக்குத்தனத்திலிருந்து சிலவற்றை கற்றுக்கொண்டேன்: சிலநேரம் மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடாமல் இருப்பதே சிறந்தது, விசேஷமாக இயேசுவுக்குள் சகவிசுவாசிகளாக உள்ளவர்களிடம் உள்ள உறவில். அப்போஸ்தலர் பவுல் தெசலோனிக்கேயரை “நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப்பார்க்கவும் உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்” (1 தெசலோனிக்கேயர் 4:12) உற்சாகப்படுத்துகிறார். நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் மற்றும் தேவனுடைய கிருபையை கொண்டு வேதவாக்கியங்களை பகிர முயற்சிக்க வேண்டும். மற்றும்சில நேரங்களில் சீர்படுத்தும் கனிவான வார்த்தைகளை வழங்கக்கூட  அழைக்கப்பட்டிருப்போம். ஆனால் மற்றவருடைய வாழ்க்கையில் தலையிடாமல் அமைதியாக வாழக் கற்றுக்கொள்வது அவசியம். தேவனுடைய குடும்பத்திற்கு வெளியே உள்ள மற்றவர்களுக்கு அது ஒரு உதாரணமாக இருக்கும் (வ 12). “ஒருவரில் ஒருவர் அன்பு கூர்வதே” (வ 9)  நம்முடைய அழைப்பு.