மீன் பிடித்தலில் ஈடுபட்டிருந்த எனது நண்பன் “ஆழமற்ற நீரோடைகள் அதிக சத்தத்தை உண்டாக்கும்” என்றான். அது ஆழமாக ஓடும் நீர் அமைதியாக இருக்கும்” என்ற முதுமொழிக்கு மாற்றாக உள்ளது. அதாவது குறைவான அறிவுள்ளவர்கள் அதிகமாக பேசுவார்கள் என்ற அர்த்தத்தில் அவன் கூறினான்.
அந்தப் பிரச்சனையின் மறுபக்கம் நாம் சரியாகக் கேட்பதில்லை என்பதாகும். அது கவனிக்காமல் கேட்பவர்களைப் பற்றி வயது முதிர்ந்த சிமியோன் மற்றும் ஹார்பங்கலின் அமைதியின் சத்தங்கள் என்ற பாடலை நினைப்பூட்டினது. அவர்கள் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் அவர்களது சொந்த எண்ணங்களை அமைதிப்படுத்தத் தவறுவதால் பிறர் கூறுவதை உண்மையாகக் கவனிக்க தவறிவிடுகிறார்கள். நாம் அனைவருமே அமைதியாகவும், மௌனமாகவும் இருக்கக் கற்றுக் கொள்வது நல்லது.
“மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” (பிரசங்கி 3:7) சிறந்த அமைதி என்பது அமைதியாகக்கவனித்தல், அமைதியான தாழ்மையாகும். இவ்விதமான அமைதி சரியான முறையில் கேட்கும் திறன், சரியான முறையில் புரிந்து கொள்ளும் திறன், சரியானமுறையில் பேசும் திறன் ஆகியவற்றிற்கு நேராக வழி நடத்துகிறது. “மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர் போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்” (நீதி 20:5) என்று நீதிமொழிகள் கூறுகிறது. ஒருவர் கூறும் காரியத்தை முழுவதும் புரிந்து கொள்ள அதிக கவனம் அவசியம்.
நாம் பிறர் கூறுவதைக் கவனிக்கும் பொழுது தேவன் என்ன கூற விரும்புகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். விபச்சாரத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்ட ஸ்திரீயை பரிசேயர்கள் இயேசுவிடம் கொண்டு வந்து நிறுத்தின பொழுது, இயேசு குனிந்து தரையிலே எழுதினதைக்குறித்து நான் சிந்திக்கிறேன் (யோவான் 8:1-11) அவர் என்ன செய்து கொண்டிருநதார்? “இந்தக் கூட்ட மக்களுக்கும், அந்த பெண்ணிற்கும் நாம் என்ன பதில் கூறலாம்” என்பதற்கு அவரது பிதா கூறும் பதிலை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் என்று கூறலாமா? இயேசுவின் பதில் இன்று வரை இந்த பூமி எங்கும் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.