மிக்சிகனில் சகிநாவ் விரிகுடாவில் உள்ள கியுரான் ஏரியிலுள்ள மிகப்பெரிய தீவு அன்புத் தீவு ஆகும். அநேக ஆண்டுகளாக கடலில் பயணம் செய்பவர்கள் பத்திரமாக பயணம் செய்வதற்கான ஒரு கலங்கரை விளக்கையும் பாதுகாப்பான ஒரு துறைமுகத்தையும் உடையதாய் இருந்தது. “கடவுளுடைய அன்பினால் தான்” அந்தத் தீவு அந்த இடத்திலிருந்ததென்று, கடலில் பயணம் செய்தவர்கள் நம்பினதினால் அந்தத் தீவிற்கு அன்புத் தீவு என்று பெயர் வந்தது.

சில சமயங்களில் நமது வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளை கடந்து வர வேண்டியதிருக்கும். அந்தக் கடல் பயணிகளைப் போல நமக்கும் வழிகாட்டுதலும், பாதுகாப்பான இடமும் தேவைப்படுகிறது. அதனால் நமக்கென்று ஓர் அன்பின் தீவு இருக்காதா என்று ஏங்கலாம். கலக்கமடைந்த சூழ்நிலைகளில் அமைதியைக் கொடுத்து பாதுகாவலான துறைமுகம் போன்ற இடங்களுக்கு நேராக நம்மை நடத்திச் செல்வதற்கு தேவன் ஒருவர் உண்டு என்பதை சங்கீதக்காரன் அறிந்திருந்தான். “கொந்தளிப்பை அமர்த்துகிறார் அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்” (சங் 107:29-30) என்று அவன் எழுதினான்.

வாழ்க்கையில் ஏற்படும் புயல்களை யாரும் விரும்பிக் கேட்பதில்லை. ஆனால் புயல்கள் போன்ற அச்சூழ்நிலைகளால் தேவன் நமக்கு அருளும் வழிநடத்துதல், பாதுகாவல் இவற்றைக் குறித்த, நமது நன்றியுணர்வு அதிகரிக்கிறது. தேவன் அவரது ஆவியினால் வெளிச்சம் கொடுத்து அவரது வார்த்தையினால் வழிநடத்துகிறார். அவருடைய அன்பு என்ற பாதுகாவலான துறைமுகத்திற்காக நாம் ஏங்குகிறோம்.

அவர் ஒருவரே நமது “அன்பின் தீவாக” இருக்க இயலும்.