முதல் உலகப்போர் ஆரம்பத்தின் நூறாம் ஆண்டு நினைவு நாள் பிரிட்டனில் 2014 ஜூலை 28ல் நினைவு கூரப்பட்டது. பிரிட்டனில் அநேக ஊடகங்களில் அநேக விவாதங்கள் குறுந்திரைப் படங்கள் மூலம் 4 ஆண்டுகள் நடந்த போரைப் பற்றி நினைவுபடுத்தின. உண்மையாகவே லண்டனில் இருந்த ஒரு பல்பொருள் அங்காடி பற்றி திரு. செல்ஃப்ரிட்ஜ் என்ற ஒளிப்பட நிகழ்ச்சி 1914ல் நடந்த ஒரு நிகழ்ச்சியை விளக்கிற்று. அதில் தரைப்படையில் சேருவதற்கென்று இளம் வாலிபர்கள் தன்னார்வத்துடன் வரிசையில் நிற்பது காண்பிக்கப்பட்டது. தங்களையே தியாகம் செய்த அந்த வாலிபர்களை எண்ணின பொழுது என் நெஞ்சே அடைத்தது போலிருந்தது. பங்கெடுக்க இளம் வாலிபர்கள் மிக்க ஆர்வத்துடன் முன்வந்ததை அக்காட்சியில் கண்டேன்.
இந்த உலகத்திலுள்ள ஒரு எதிரியைத் தோற்கடிக்க இயேசு யுத்தத்திற்கு செல்லாவிட்டாலும், பாவம் மரணம் என்ற இறுதிச் சத்துருக்களை தோற்கடிக்க இயேசு சிலுவைக்குச் சென்றார். நாம் நமது பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட மிகவும் கோரமான சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டு, தேவனுடைய அன்பை செயல்படுத்திக் காண்பிக்க இவ்வுலகத்திற்கு வந்தார். அவரை சவுக்கால் அடித்து சிலுவையில் அறைந்த மக்களைக்கூட அவர் மன்னித்தார். (லுக்கா 23:34) அவருடைய உயிர்த்தெழுதலின் மூலமாக மரணத்தை வென்றார். அதனால் நாம் தேவனுடைய குடும்பத்தில் நித்திய அங்கத்தினராக இருக்க இயலும். (யோவான் 3:13-16)
ஆண்டு விழாக்களும். நினைவுச் சின்னங்களும், முக்கிய வரலாற்று நிகழ்வுகளையும், வீரதீரச் செயல்களையும் நினைவூட்டுகின்றன. சிலுவையோ இயேசுவின் மரணத்தின் வேதனையையும், நமது இரட்சிப்புக்கான அவரது தியாகத்தின் அழகையும் நமக்கு நினைவூட்டுகிறது.