சில ஆண்டுகளுக்கு முன்பாக நானும் என் மனைவி கரோலினும் வாஷிங்டனிலுள்ள ரெய்னீர் என்ற மலையின் பக்கவாட்டில் கூடாரம் போட்டு சிலநாட்கள் தங்கியிருந்தோம். ஒருநாள் மாலையில் எங்களது கூடாரத்திற்கு திரும்பி வருகையில் புல்வெளியின் மத்தியில் இரண்டு ஆண் கரடிகள் ஒன்றுக்கொன்று காதுகளை பிடித்து இழுத்து சண்டை போட்டுக் கொண்டிருந்தன. நாங்கள் சற்றுநேரம் நின்று அதைக் கவனித்தோம்.

“அந்தப் பெண் கரடி எங்கே?” என்று நான் கேட்டேன்.

“ஓ, இருபது நிமிடங்களுக்கு முன்பே அது சென்றுவிட்;டது” என்று அவர் அசட்டையாக பதில் கூறினார். ஆகவே அப்பொழுது நடந்த சண்டைக்கு அப்பெண் கரடி காரணம் அல்ல. அந்த இரு ஆண் கரடிகளும் தங்களுக்குள் யார் பலசாலி என்று நிருபிக்க அவைகள் சண்டை இட்டன என்பதை அறிந்து கொண்டேன்.

கொள்கை, கோட்பாடு பற்றியோ எது சரி, எது தவறு என்பது பற்றியோ அநேகச் சண்டைகள் ஏற்படுவது கிடையாது. சண்டைகளுக்கு முக்கியமான காரணம் பெருமைதான். நீதிமொழிகளை எழுதின ஞானி “அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும் (நீதி 13:10) என்று எழுதினதினால் சண்டைக்கு அடிப்படையான காரணத்தை தெளிவாகக் கூறியுள்ளார். பெருமையினால், நாம் கூறுவதுதான் சரி என்று சாதிப்பதால், நாம் நினைக்கிற வழியில் செல்ல நினைப்பதால் அல்லது நமது சுயம் பாதிக்கப்படாமல் இருக்க முயலுவதால் வாக்குவாதங்கள் மேலும், மேலும் தூண்டப்படுகின்றன.

மறுபக்கம் ஞானம் நல்ல ஆலோசனைக்காரர்களிடம் உள்ளது. பிறர் கூறுவதை கவனித்துக் கற்றுக் கொள்பவர், பிறரால் கற்றுக் கொடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்பவரிடம் ஞானம் உள்ளது. தங்களது சுயவிருப்பங்களையும் தள்ளிவிட்டு தங்களது அறிவு ஓர் எல்லைக்கு உட்பட்டது என்று ஏற்றுக்கொண்டு. பிறர் கூறும் காரியங்களையும் கவனித்து தங்களது சொந்த எண்ணங்களை திருத்திக் கொள்ள முன்வரும் தாழ்மையுள்ள மக்களிடம்தான் ஞானம் தங்கும். இந்த ஞானம் தேவனிடமிருந்து வருவதோடு, அது உள்ள இடமெல்லாம் சமாதானத்தைப் பரப்புவதாக உள்ளது.