இயேசு போதுமானவரா? நம்மைத் தாங்கி நடத்த கிறிஸ்துவோடு நமக்குள்ள உறவு போதுமானதா? தொடர்ந்து நமது வாழ்க்கையில் நமக்கு உதவ அவர் போதுமானவரா? அவர் நம்மீது கரிசனை உடையவராய் இருக்கிறாரா? போன்ற சில கேள்விகளை மின்னியும், ஜர்ஜ் லாஸியும் தங்களிடமே கேட்டனர்.
பணித்தள மிஷனரிகளாக அவர்கள் 1904 இல் பணியாற்றி வந்த பொழுது லாசியின் இளைய மகள் நோய்வாய்ப்பட்டாள். பின் அவர்களுடைய ஐந்து பிள்ளைகளும் அடுத்தடுத்து, வெகு விரைவில் “ஸ்கார்லெட்” காய்ச்சலினால் மரித்துப் போனார்கள். புதிய ஆண்டைப் பார்க்க ஒருவரும் உயிருடனில்லை. மிஷனரி ஸ்தாபனத்திற்கு தங்கள் மட்டற்ற வேதனையையும், தனிமையையும் ஜர்ஜ் லாசி கடிதங்களின் மூலம் இவ்வாறு தெரிவித்தார். “சில சமயங்களில் இது எங்களால் தாங்கிக் கொள்ள இயலாத பாரமாயிருக்கிறது” என்று கூறிவிட்டு ஆனாலும் “தேவன் எங்களோடு இருக்கிறாh;, அவர் எங்களுக்கு ஆச்சரியமான விதத்தில் உதவி செய்கிறார்” என்றும் எழுதினார். இப்படிப்பட்ட இருண்ட சூழ்நிலையில் தேவன் அவர்கள் அருகில் இருக்கிறார் என்றும், அவர் போதுமானவராய் இருக்கிறார் என்றும் அறிந்து கொண்டார்கள்.
நம்மால் இன்னும் முன்னேறிச் செல்ல முடியுமா என்று கஷ்டமான சமயங்களில் அநேகர் ஆச்சரியப்படுவதுண்டு. நம் தேக நிலை பாதிக்கப்படும் பொழுது நம் பணிகள் பாதிக்கப்டும் பொழுது, நமக்கு நெருக்கமானவார்களை இழக்கும் பொழுது நாம் தொடர்ந்து விசுவாசத்தில் முன்னேறிச் செல்ல நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவு போதுமானது என்று உண்மையிலேயே நம்புகிறோமா?
தேவனுடைய பிரசன்னத்தையும் அவருடைய உண்மைத் தன்மையையும் சங்கீதக்காரன் (சங்கீதம் 30)இல் நமக்கு நினைப்பூட்டுகிறார் அவன் மன அழுத்தத்தினால் மிகவும் சோர்வுற்ற பொழுது, “கர்த்தாவே நீர் எனக்குச் செவி கொடுத்து என் மேல் இரக்கமாயிரும், நீர் எனக்குச் சகாயராயிரும்” (வ.9) என்று கதறுகிறான். கர்த்தர் அவனை குணமாக்கி அவனுக்கு ஆறுதல் அளித்தார் (வ.2,3).
இயேசுவின் விசுவாசிகளாகிய நாம் தொடா;ந்து முன்னேற தேவையான ஒன்றிலும் ஒருபோதும் குறைவுபடுவதில்லை. தேவன் எப்பொழுதும் நம் அருகிலேயே இருக்கிறார்.
