இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லர் இங்கிலாந்தின் மீது தனது தாக்குதலைத் தொடுத்திருந்த வேளையில், சோர்வுற்றிருந்த இங்கிலாந்து வாசிகளிடம் பேசும்படியாக வின்ஸ்டன் சேர்ச்சில் கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் எட்டு சொற்கள் அடங்கிய ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை உச்சரித்தார் (ஆங்கிலத்தில்): “ஒருபோதும் விட்டுவிடவேண்டாம்! ஒருபோதும்இ ஒருபோதும்இ ஒருபோதும் விட்டுவிடவேண்டாம்!”
உங்களுடைய கிறிஸ்தவ வாழ்விலும் நீங்கள் ஊக்கம் இழந்துபோய்விடுகிற தருணங்கள் நேரிடலாம், ஆனால், அதற்காக ஒருபோதும் ஒருபோதும் ஒருபோதும் நீங்கள் விட்டுவிடவேண்டாம். வேறொன்றுமே இல்லாத பட்சத்தில், பாவத்திற்கு எதிரான உங்களுடைய போராட்டம் மறுபடியூம் மறுபடியுமாக தேவனிடம் திரும்பவும், உங்களுடைய மனச்சோர்வில் அவரை பற்றிக்கொள்ளவும் செய்யும்.
“தி ஃபைட் (போராட்டம்)” என்கிற தனது நூலில், ஜோன் வைட் அவர்கள், “ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எழுந்து மறுபடியும் போராடுபவரே உண்மையான போர்வீரர்…….ரோமர் 8:1-4 இன் பலம் வாய்ந்த திராட்சை இரசத்தை அருந்தி உங்களைப் பெலப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் தசைகள் இறுகிப்போய்விட முன்னதாக மறுபடியும் போராட்டத்திற்கு திரும்புங்கள்” என்று எழுதுகிறார்.
வாழ்வின் குறை நிறைகள்இ உயர்வு தாழ்வுகள், வெற்றிகள் மற்றும் தோல்விகள் என்பவற்றினூடாக கீழ்ப்படிவு எனும் இலக்கை தக்கவைத்துக்கொள்ள இங்கு மிகவும் தேவைப்படுவது, உறுதியான சகிப்புத்தன்மையாகும். இது, தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற உங்களுக்குள்ளாக கிரியை செய்கின்றார் என்பதை அறிந்தவர்களாக மீண்டும் முயற்சிப்பதாகும் (பிலிப்பியர் 1:6: 2:13). உங்களுக்கான பணி நிறைவுற்று அவருக்கு முன்பதாக நீங்கள் நிற்கும்வரை, உங்களின் வாழ்வை குறித்த கடவுளின் சித்தத்தை உறுதியாக தொடருவதாகும்.
தேவனும் அற்புதமான வகையில் பிடிவாதமாகவே இருக்கிறார். அவர் உங்களை ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும் விட்டுவிடமாட்டார்!
