உலகம் கதைகளால் நிறைந்தது. ஆனால் அவைகள் எல்லாவற்றிலும் சொல்லுவதற்கு உகந்த ஒரு கதை உண்டு. அது உலக மக்களால் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்று பரவலாய் அறியப்பட்ட 66 ஆகமங்களின் தொகுப்பிலிருக்கும் அன்பின் கதை.

ஆனாலும் இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் புத்தகங்கள் இந்த கதையை தொடர்ச்சியாய் சொல்லத் தவறுவதால், அதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் முழுமையான கதையை தவறவிட நேரிடுகிறது.

பின்வருவது மார்ட் டிஹானின் அந்தக் கதையின் மறுகதையாடலாகும். இதில் பரிமாறப்படும் கற்பனைகள், காலங்களைக் கடந்த வேதாகமத்தில், நாம் அறிந்த நபர்கள், இடங்கள், மற்றும் சம்பவங்கள் ஆகியவைகளை சீரான நிபந்தனைகளோடு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

இது நம்முடைய கதை. இது நம்மை நமக்கு யார் என்றும், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் என்றும், நாம் எங்கே செல்லுகிறோம் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. இது நம் ராஜாவின் சுதந்திரமான பிரபஞ்சத்தில் நம்முடைய தேர்ந்தெடுப்புகளைப் பார்க்க உதவி செய்கிறது.

 

ஒரு பெரிய ராஜா தனது ராஜ்யத்தை விரிவுபடுத்துவதற்கும், குடிமக்கள் தனது வாழ்க்கையையும் மதிப்புகளையும் விருப்பத்துடன் பகிர்ந்து கொள்ளும் சுதந்திர உலகத்திற்கான தனது பார்வையைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு மர்மமான கடந்த காலத்திலிருந்து தோன்றுகிறார்.

அந்த புதிய உலகத்தில் மக்கள் அவருக்கு விரோதமாய் எழும்பிய போது, அந்த ராஜா தன் பொறுமையைப் பிரதிபலிக்கிறார். தன் கட்டளையை அதிகாரத்தோடு செயல்படுத்தாமல், தன்னை நம்புகிற மக்கள் கூட்டத்திடம் நல்லுறவை வளர்க்கும் நீண்ட முயற்சியை ஏறெடுக்கிறார்.

அவர் தன்னை பாடனுபவிக்கும் ஊழியக்காரனாய் ஒப்புவித்ததில் அவருடைய இருதயத்தை மக்கள் தெளிவாய் பார்க்க முடிந்தது. பொல்லாங்கான ராஜாவின் ஆதிக்கத்தில் வீழ்ச்சியடைந்திருந்த மக்களை காப்பாற்றும் முயற்சியில் பெரிய விலைக்கிரயத்தைச் செலுத்துகிறார். தன் மக்களுக்கு நேர்த்தியான பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் அந்த ராஜா உறுதிசெய்த பிறகும், மக்களுடைய இருதயத்தில் சிந்தையிலும் அமைதி இல்லை.