ந்திரனுக்கு அதன் சொந்த ஒளி இல்லை, அது சூரியனின் ஒளியை வெறுமனே பிரதிபலிக்கிறது என்பதைக் குறிப்பிடுவது எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. இருப்பினும், இருண்ட இரவின் போது, ​​தனது முழு பிரகாசத்தில் ஒளிர்ந்திடும் சந்திரனை விட அதிக ஆறுதல் எதுவும் நமக்குத் தருவதில்லை. வெளிச்சத்தை குறித்து வேதாகமம், “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” என்று மத்தேயு 5:16 இல் கூறுகிறது. இதன் பொருள் நாம் ஒருபோதும் ஒளியின் தோற்றுவிப்பாளர்கள் அல்ல, நாம் அதன் பிரதிபலிப்பாளர்கள். எனவே, நமது எண்ணங்கள், வார்த்தைகள், குறிப்பாக நமது செயல்களில் கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிப்பது முக்கியம். நமது அனுதின பயணத் தொடரில் உள்ள இந்த வாசிப்புகள், கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிக்கும் வகையில் நமது செயல்களைச் சரிசெய்வதற்கு உதவும் எளிய நினைவூட்டல்கள். தேவனுடைய வார்த்தையின் மூலம் அதிக வெளிச்சத்தைக் கண்டுகொள்ள தொடர்ந்து படியுங்கள்…

நமது அனுதின மன்னா ஊழியங்கள், இந்தியா

banner image

பல ஆண்டுகளாக எனக்கு ஸ்காட்லாந்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. ஒருவேளை நான் பார்த்த ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் பேரிலோ அல்லது அதில் காட்டப்பட்ட அந்நாட்டின் உயர்மலைகளின் பேரிலோ அந்த தாக்கம் உண்டாகியிருக்கலாம். அல்லது எங்கள் குடும்ப சரித்திரத்தை ஆராய்கையில் அதில் இருந்த ஸ்காட்டிஷ் குலத்தைப் பற்றி என் அப்பா ஒருமுறை பேசியதால் கூட இருக்கலாம். நான் அந்த இடத்தைப் பற்றி அடிக்கடி யோசித்து, மக்களைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் எண்ணற்ற எண்ணங்களைக் கொண்டிருந்தேன். இருப்பினும், உணர்வுகளும் யதார்த்தமும் எப்போதும் வேறுபட்டவை.

banner image

நானும் எனது குடும்பமும் ஒரு புதிய நகரத்திற்கு குடிபெயர்ந்தபோது, ​​எங்களின் புதிய தேவாலயத்தில் சீடத்துவ குழுவின் இயக்குனராக நான் பணியமர்த்தப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை, ஞாயிற்றுக்கிழமைகளும் புதன் கிழமைகளும் ஆலயம் நிரம்பி இருப்பதால், இந்நாட்களில் நான் விரைவாக இரவு உணவை சமைக்க வேண்டும் அல்லது என் கணவர் மற்றும் இளம் மகள்களைத் தங்களைத் தாங்களே பராமரிக்கும்படி விட்டுவிட வேண்டும். அதனால்தான் என் மைக்ரோவேவ் அடுப்பிற்காக நன்றி சொல்கிறேன். நேரம் குறைவாக இருக்கையில், ​​சில சமயம் வேகவைத்த உருளைக்கிழங்கு போன்ற எளிய உணவு சமைப்பேன்.

banner image

தனது 100 ஆண்டுகால வாழ்க்கையில், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ஸ்டான்லி ட்ரூட்மேன் சில ஆழமான நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தார். 1945 ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க கடற்படை புகைப்படக் கலைஞராக, ட்ரூட்மேன் ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் இரண்டாம் உலகப் போரின் நெஞ்சை பதைக்கும் சில படங்களைப் படம்பிடித்தார். போருக்குப் பிறகு, ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ விளையாட்டு புகைப்படக் கலைஞராக, இயேசுவின் இந்த விசுவாசி, அற்புதமான தடகள சாதனைகளை கண்ணார கண்டு ஆவணப்படுத்தினார்.

banner image

பல ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று ஒரு தேவாலயத்தில் சேர்ந்த சட்டமன்ற உதவியாளரை எனக்குத் தெரியும். அது அவருக்குப் பொருத்தமற்றதாகத் தோன்றியதால், அதைப் பற்றி அவரிடம் கேட்டேன். “நான் அலுவலகத்திற்கு ஓடிப்போவதை பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன்,” என்று அவர் ஒப்புக்கொண்டார், “இது நன்றாக இருப்பதாக என் முதலாளி என்னிடம் கூறினார்” என்றும் சொன்னார். இந்த கதையை மற்றொருவருடன் ஒப்பிடவும், இயேசுவின் மீதான உங்கள் நம்பிக்கையை பகிர்வதே ஆபத்தானதாக இருக்கும் நாட்டில் இவர் பணிபுரிகிறார். ஆயினும்கூட, அவர் கிறிஸ்துவை தனது அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ள ஒரு வீட்டு சபையை தொடங்கினார்.

banner image

உங்களுக்கு எதனால் கோபம்? போக்குவரத்து நெரிசல்; வீங்கின கால்; அற்பமாக புறக்கணிக்கப்படுதல்; உங்களை சந்திப்பதாக சொன்னவர் வரவில்லையா? அல்லது இரவு முழுவதும் நீளக்கூடிய திடீர் வேலையா? கோபம் என்பது உணர்ச்சிபூர்வமான விரக்தி. நாம் தடைபடும்போதும், ​​யாராகிலும் அல்லது ஏதாகிலும் நம் வழியில் குறுக்கிடும்போதும் இது அடிக்கடி எழுகிறது. கோபம் என்பது எல்லா மனிதர்களும் அனுபவித்திட தேவன் தந்த உணர்வு. எனது உரிமைகள் மீறப்படும்போது நான் அதை விரைவாக அனுபவிக்க கூடும். போக்குவரத்தில் ஒரு வாகனம் தவறாக என்னை இடைமறிக்கையில் அல்லது எனது உரையாடலை யாராவது பாதியில் துண்டிக்கும்போது கோபப்படுவேன்.

banner image

ஒவ்வொரு ஞாயிறு காலையும் அந்த தாழ்வாரத்தில் நாங்கள் சந்தித்துக்கொள்வோம். அவள் கண்கள் மகிழ்ச்சியால் நிரம்பி, மிளிரும். உடனே அவள் என் பெயரை, “மார்லினா!” என்று ராகத்தோடு அழைப்பாள். அவள் என்னை மயக்குகிறாள், அவளை கட்டிப்பிடித்து, “உன்னை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றால், அவள் எப்பொழுதும், “நீ என்னை பார்ப்பது எனக்கும் பிடிக்கும்” என்பாள். “எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்குமென்று உனக்குத் தெரியுமா” என்று அவளுக்கு நினைப்பூட்டினால், “நிச்சயமாக எனக்குத் தெரியும்” என்று உறுதியுடன் பதிலளிப்பாள். எழுபத்தைந்து வயதில், முதுமை மறதி நோயுடன்…

banner image

ஆண்டி சியர்லஸ், ஒரு போதகர் மற்றும் பகுதிநேர விளையாட்டுப் பயிற்சியாளர். சமீபத்தில் ஒரு நண்பர்கள் குழுவிற்கும், எனக்கும் சிந்தனைக்கு ஏற்ற ஞானமான ஆலோசனையை கொடுத்தார். அவர் “நமது உரையாடல்களில் நாம் எப்போதும் எதையாவது ஊக்குவிக்கிறோம் அல்லது பிரதிபலிக்கிறோம். ஒருவேளை அவை நமது மதிப்பீடுகள், நமது கடந்த காலம், நமது நம்பிக்கைகள் அல்லது நம்மையே கூட இருக்கலாம். இயேசுவைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்களின் முதன்மையான நோக்கங்களில் ஒன்று, ‘ஆரோக்கியமானவற்றை’ (தீத்து 2:1) ‘பிரசித்திப்படுத்துதல்’ மற்றும் ‘பிரதிபலித்தல்’ஆகும். இயேசு கிறிஸ்துவில் காணப்பட்ட…

banner image