லூக்கா 2:42-52
42. அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய், 43. பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. 44. அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள். 45. காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். 46. மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். 47. அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள். 48. தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள். 49. அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார். 50. தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. 51. பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக் கொண்டாள். 52. இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள். மாற்கு 1:15
வேதாகமத்தில் தேவதூதன் தோன்றும் போதெல்லாம் அவன் முதலில் சொல்லும் வார்த்தை “பயப்படாதேயுங்கள்” என்பதே. இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவி, பூமி கிரகத்துடன் தொடர்பு கொள்ளும்போது, அது பொதுவாக மனித பார்வையாளர்களை பயத்தில் ஆழ்த்தி, முகங்குப்புற விழச்செய்கிறது. ஆனால் லூக்கா சுவிசேஷகர், பயப்படாத விதத்தில் தேவன் தோன்றுவதைக் குறித்து சொல்லுகிறார். மாட்டுத் தொழுவத்தில் பிறந்து ஒரு தொட்டிலில் கிடத்தப்பட்ட இயேசுவில், நாம் பயப்படாமல் இருப்பதற்கான வாய்ப்பை தேவன் வழங்குகிறார். புதிதாய் பிறந்த குழந்தையைப் பார்த்து யார் பயப்படப்போகிறார்?
பூமியில் இயேசு கடவுளாகவும் மனிதனாகவும் வாழ்ந்தார். கடவுளாக அவர் அற்புதங்களைச் செய்ய முடியும், பாவங்களை மன்னிக்க முடியும், மரணத்தை ஜெயிக்க முடியும், எதிர்காலத்தை கணிக்க முடியும். ஆனால் மேகஸ்தம்பம் அக்கினிஸ்தம்பம் போன்ற ஆச்சரியமான அற்புதங்களை சாட்சியிட்ட யூதர்களுக்கு இயேசு அதிக குழப்பத்தை ஏற்படுத்துகிறார். பெத்லகேமில் ஒரு தச்சனின் குமாரன், நாசரேத்தைச் சேர்ந்த ஒரு மனிதன், தேவனிடத்திலிருந்து வந்த மேசியாவாக எப்படி இருக்க முடியும்?
தேவன் ஏன் மனித உருவத்தை எடுக்கிறார்? தம் பன்னிரண்டாம் வயதில் இயேசு ஆலயத்தில் ரபீக்களுடன் விவாதம் செய்யும் காட்சி ஒரு குறிப்பை அளிக்கிறது. “அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்” (லூக்கா 2:47). காணப்படாத இறைவனை சாதாரண ஜனங்கள் கண்டு அவருடன் உரையாட முடிந்தது.
இயேசு தேவதூதனைப் போல “பயப்படாதேயுங்கள்” என்று சொல்லாமல், அவருடைய பெற்றோர், ரபி, ஏழை விதவை என்று எவருடனும் பேசவும் நெருங்கவும் முடியும்.
தேவன் தன்னை நீங்கள் அணுகக்கூடியவராகவும் இயல்பாய் உரையாடக்கூடியவராயும் ஆக்கியுள்ளார் என்று நம்புவதைத் தடுப்பது எது? இன்று நீங்கள் நம்பிக்கையுடன் அவர் முன் வருவது எப்படி இருக்கும்?
பரலோகத் தகப்பனே, இந்த கிறிஸ்மஸில் உம்முடைய குமாரன் ஒரு சாதாரண குழந்தையாய் இந்த பூவியில் அவதரித்ததை நினைவுகூர்கிறோம். இறைவன் எங்கள் அருகாமையில் வந்திருக்கிறார் என்பதை ஆச்சரியமாய் பார்த்து துதிக்கிறோம்.