நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். லேவியராகமம் 26:12

 

சற்று கற்பனைசெய்து பாருங்கள்! தேவன், மாம்ச தேகத்தில், யாவரும் அன்றாடம் புழங்கும் இடங்களில் சகஜமாய் வாழ்கிறார். பழைய  வீதிகளில், அழுக்கான இடத்தில் தான் அவர் பிறந்து வளர்ந்தார். அவர் பல இடங்களுக்கு தன் கால்களால் நடந்தே பயணம் செய்தார். அனைத்து இடங்களிலுமிருந்து வந்த திரள்கூட்ட மக்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, அவர்கள் மீது மனதுருகி, அவர்களை நேசித்து, அவர்களுக்கு போதனை செய்தார்.


இந்த டிசம்பர் மாதத்தில், அவருடைய வருகையை எதிர்நோக்கத் தூண்டும் இந்த தியானக் கட்டுரைகள், தேவனோடு நடக்கும் உங்களின் பயணத்திற்கு உறுதுணையாயிருக்கும் என்பது எங்களின் ஜெபமாயிருக்கிறது. அவருடைய பிறப்பு, ஜீவியம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை கண்டு ஆச்சரியப்படும் இந்த நாட்களில், நம்மோடிருக்கும் இம்மானுவேலாகிய ஆண்டவரோடு நாம் இன்னும் நெருங்க பிரயாசப்படுவோம்.

நீங்கள்  இதனை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் படிக்கலாம்

 

ஆங்கிலத்தில் வாசிக்க

 

हिंदी में पढ़ें