வாசிக்க: யோபு 38:1-18

அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? (வ. 1-2)

ஞானி ஒருவர் ஒருமுறை, “மனப்போராட்டம் என்பது மேலோட்டமானது அல்ல, அடிவேரில் தான் அது அதிகமிருக்கும்” என்றார். யோபுவும் கூட இதனை ஆமோதிப்பதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. மனமடிவுண்டாக்கும் அழிவின் செய்திகளை பகுதிப்பகுதியாக கேட்டு அனுபவிக்கும் சூழலுக்கு அவர் தீடிரென்றும் கட்டாயமாகவும் தள்ளப்பட்டார். அவருடைய மிருகஜீவன்கள், வயல்வெளிகள், வேலையாட்கள் மற்றும் குழந்தைகள் என்று அனைத்தும் ஒரே நாளில் அழிந்தது.

இந்த கொந்தளிப்புக்கு மத்தியில், அவரது மனைவி தேவனை நிந்தித்து ஜீவனை விடும்படி வற்புறுத்தினாள். யோபு ஞானமாக இந்த யோசனையை புறக்கணித்தார், ஆனாலும் தேவனோடு தன் நியாயத்தை வழக்காட விரும்பினார் (யோபு 13:3,15). இறுதியாக தேவன் அவருக்கு பதிலளிக்கையில், தேவனும் தனது சொந்த கேள்விகளினால் வழக்காடினார் (38:1-2). தனது கேள்விகளுக்கான பதிலகளை தேடின யோபு, தேவனின் சர்வவல்ல இறையாண்மையை கண்டார் (வ.4). தேவனின் வழிகள் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டவை என்றாலும் அவைகளே இறுதியில் செம்மையும், நீதியுமாய் உள்ளனவென்று தாழ்மையாக ஒப்புக்கொண்டார் (42:1-3).

சோதிக்கப்படும் தேவனை மகிமைப்படுத்தும் விதத்தில் பிரகாசிக்கும் யோபுவின் சுபாவத்திற்கு இதுவே சாட்சி. மறுமையின் இப்பக்தத்தில் நடப்பது என்னவென்றே தெரியாதபோதும், தனது விசுவாசத்திற்கும் உண்மைக்கும் எதிராக நடக்கும் கடுமையான போராட்டத்தில் யோபு சிக்கியிருந்தார். அவர்மேல் சொறியப்பட்ட அணைத்து தீங்குகளும், அவருடைய விசுவாசத்தையும் தேவனையும் மறுதலிக்க செய்யும்படியான சாத்தானின் போலியான முயற்சிகள் மட்டுமே (1:12).

யோபுவின் சம்பவத்தை நாம் நன்கு அறிந்திருந்தாலும், அதனை நமது சொந்த வாழ்வில் அரிதாகவே அப்பியாசிக்கிறோம். குழப்பமான மற்றும் நியாயமற்ற சூழ்நிலைகளின் முரண்பாட்டை நாம் எதிர்கொள்ளும்போது, தேவனின் நீதியை ஒதுக்கித்தள்ள நாம் வலுவாக தூண்டப்படுகிறோம். ஆனாலும், “நிந்தித்து ஜீவனை விடுவதற்கு” பதிலாக அண்டசராசரத்தின் தேவனின் இதயத்தை புரிந்துகொள்ள முயல்வோம். நாம் அவரை நாடி தேடி எதிர்படுகையில், நமது கண்ணோட்டங்கள் மறுரூபமடையும். நாம் அவருடைய ஞானத்தை நம்ப கற்றுக்கொள்வோம்.

தேவன் மட்டுமே முழுவதையும் அறிந்தவர். நாம் அவரில் இளைப்பாறுகையில், நமது வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயங்களை நமது நன்மைக்கும் அவரது மகிமைக்கும் பயன்படுத்துவார்.

– ரெமி ஒயேடெலே

மேலும் அறிய

தேவனின் நீதியும் சர்வவல்லமையுமுள்ள வழிகளை பவுல் எழுதியுள்ளதை ரோமர் 9:19-23 ல் கண்டு வாசிக்கவும்.

சிந்திக்க

கடினமான நேரத்தில் தேவனின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பை நீங்கள் எப்போது தவறவிட்டீர்கள்? எதிர்காலத்தில் அவருடைய ஞானமான மற்றும் அன்பான திட்டங்களில் இளைப்பாற நீங்கள் எவ்வாறு தேர்வு செய்வீர்கள்?