இது ஆண்டின் இந்தக் காலத்தில் மீண்டும் அன்பு நம்மை சுற்றிலும் உள்ள காற்றில் இருக்கிறது, பூக்கடைகளில் இருக்கும் இதய வடிவ பலூன்கள் முதல், தொலை தொடா்பின் வலைத்தள ஒலிபரப்புகள் வரை, அனைத்து திசையிலிருந்தும் நம் புலன்களை ஈா்க்கும் காதல் விளம்பர வாசகங்கள் மூலம் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை வேலண்டைன் தினம் நமது கொண்டாட்டமாக இல்லாவிட்டாலும், நம் அனைவருக்கும், நேசிக்கப்படவும், நேசிக்கவும் உள்ளார்ந்த ஆசை இருப்பதை மறுக்கமுடியாது.
நம் அனைவருமே அன்புக்காக ஏங்கும் ஒரு இதய வடிவான துளையை உடையவா்களாயிருக்கிறோம். திருமண நிலை எதுவாக இருந்தாலும், தனியாக இருந்தாலும், வாழ்க்கை துனையைத் தேடிக்கொண்டடிருந்தாலும், திருமணமானவராய் அல்லது விதவையாக இருந்தாலும் நீங்கள் நினைவுகூரப்படுகிறீா்கள் மற்றும் அன்புகூரப்படுகிறீா்கள். ஆனால் இந்த இருதய வடிவத் துளை இயேசு கிறிஸ்துவால் மட்டுமே நிரப்பப்பட முடியும், “முக்கியமான யாராலும் ” அல்ல. கிறிஸ்து எப்போதும் நம் அன்பின் ஆதாரமாகவே இருப்பார்.
இந்த வேலண்டைன் தினத்தில், நாம் எந்த திருமண நிலையில் இருந்தாலும், நம்மீது அபரிதமாக பொழியப்பட்ட கிறிஸ்துவின் அனபால் நிரப்பப்படுவோம், அந்த நிகரற்ற அன்பைக் கொண்டாடுவோம்.
மற்ற அனைவரும் சிறப்பு வாய்ந்த ஒருவரை காதலித்து பரிசுகளைப் பெறுகிறாா்கள். நீங்கள் பரிசுகளை பெறாததால் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் உங்களை நன்கு அறிந்து, நீங்கள் விசேஷமானவா்கள் என்பதை உணரச்செய்யும் ஒருவரை தேடலாம் அல்லது ஒருவேளை நீங்கள் ஒரு கசப்பான உறவுக்கு விடை கொடுத்திருக்கலாம். ஆனால் இதை அறிந்துகொள்ளுங்கள், தனிமை, உடைந்த உள்ளம் அல்லது அதிருப்தி இவைகள் போதும் என்று இருக்கத் தேவையில்லை. இயேசு உங்களை எல்லாருக்கும் மேலான விசேஷத்தவராக எண்ணுகிறார், வேறு எவரும் உங்களை அறிந்திருப்பதை விட அவா் அதிகமாக அறிந்திருக்கிறார். இன்றே அந்த நிச்சயத்தை அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள் !
நீங்கள் ஒரு புதிய அல்லது நீண்ட கால உறவில் இருக்கிறீர்கள். உங்கள் வீட்டு வாசலில் ஒரு சாக்லேட் பெட்டியும் மற்றும் ஒரு மலா்கொத்தும் ஆகியவற்றைப் பெற்றுள்ளீர்கள், நீங்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று உள்ளத்தில் மிக்க பரவசமடைகிறீா்கள். ஆனால் உள்ளத்தின் ஆழத்தில் இவைகள் உண்மையாக இருப்பது மிக நல்லது ஆனால் இந்த மகிழச்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை என்று கவலைப்படுகிறீர்கள். உங்கள் உறவு எப்படியிருந்தாலும், உறவின் முன்னேற்றத்தின் பாதையின் ஒவ்வொறு அடியிலும் கர்த்தர் உங்களுடன் இருப்பார் என்பது பெரிய காரியமல்லவா? உங்கள் இருவர் மீதும் அவா் தன் அன்பைத் அருள்வது நிச்சயம், எனவே அவா் உங்கள் உறவின் மையமாக இருக்கும்படி இயேசுவிற்கு அழைப்பு கொடுங்கள்!
நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துனையுடன் அமைதியான இரவைக் கொண்டிருக்கிறீர்கள். பெரும்பாலான நாட்களில், நீங்கள் திருமணம் வழங்க வேண்டியவைகள் அனைத்தையும் நேசிக்கிறீர்கள். ஆனால் திட்டமிட்டபடி காரியங்கள் நடைபெறாதபோது, அதற்குக் காரணம் போதுமான முயற்சி எடுக்காததால் தான் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். திறந்த இருதயத்தோடும், ஊக்கமான ஜெபத்தோடும், தேவன் உங்களிலும், உங்கள் மூலமாகவும், உங்கள் திருமணத்திலும் கிரியை செய்வார் என்று நம்புங்கள். உதவிக்காக பரிசுத்த ஆவியானவரை நம்பி அவரைச் சாா்ந்திருங்கள், நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அன்பிற்கு ஆதாரமாயிருப்பவா் தேவனாகிய கா்த்தா் என்பதை நினைவில் பதித்துக் கொள்ளுங்கள். இன்றே அவரிடமிருந்து அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்!
திருமண வாழ்க்கை சற்று கடினமானதுதான் என்று உங்களுக்குத் தெரியும், ஆனால் அதிலிருந்து விடுபட வேண்டும் ஒரு கட்டத்தை அடைவீர்கள் என்று நீங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. ஒருவரை ஒருவா் குறை சொல்வது, தொடரும் மோதல்கள் மற்றும் ஒருவருக்கொருவாிடம் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாமை ஆகியவை, கிறிஸ்து திருமணத்தை எதற்காக உருவாக்கினாா் என்பதின் நோக்கத்திலிருந்து உங்கள் பார்வையை மங்கலாக்கியுள்ளன. ஆனால், விடாமல் அங்கேயே இருங்கள் ! தேவன் உங்கள் கண்ணீரைப் பார்த்து, உங்கள் மனதின் அழுகுரலைக் கேட்கிறார். அவரால் உடைந்த திருமணத்தை மீட்டு மறுபடியும் கட்டமுடியும். இன்றே விரைவாக அவரிடம் செல்லுங்கள்!
வேலண்டைன் தினம், இப்போது உங்கள் மறைந்த வாழ்க்கைத் துனையுடன் நீங்கள் கொண்டிருந்த இனிய உறவின், நிலையான நினைவூட்டலாக செயல்படுகிறது. இது கசப்பான இனிப்பு, ஒருவேளை இனிப்பை விட கசப்பானதாயிருக்கும். உங்கள் மறைந்த அன்புக்குரியவரின் நினைவு உங்கள் இதயத்திலும் உங்கள் மனதிலும் ஆழமாக பதிந்ததினால் அது உறுத்துதலாகவே இருக்கலாம், ஆனால் கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை அறிந்து நீங்கள் நம்பிக்கையின் அமைதியோடு இருக்கலாம், அவரை விசுவாசிக்கும் அனைவருக்கும் நித்திய வாழ்வு நிச்சயம் உண்டு. உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரிடமும் அவர்களால் முடிந்தவரை நேசிப்பவர்களை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் சொல்வதால், நீங்கள் தனியாக இல்லை என்று தேவனாகிய கா்த்தா் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறார். இன்றே அவரது அன்பைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் !
இங்கே பதிவு செய்யவும்