நாம் அவருடையவர்கள் தேவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தத்தெடுப்பு உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை என்று நினைத்தாலும், தத்தெடுப்பு என்று ஒன்றிருக்கிறது. ஒரு வகையில், நாம் ஒவ்வொருவரும் அனாதையாகத்தான் இருக்கிறோம்.
லோரிலி கிராக்கர் தத்தெடுப்பு பற்றிய தனது ஆழ்ந்த தனிப்பட்ட கதையைப் பகிர்ந்து கொள்ளும்போது, நாம் ஒவ்வொருவரும் வியக்கத்தக்க நடைமுறை பயன்பாடுகளைப் பெற முடியும். கிராக்கரைத் தத்தெடுத்தவர் இரண்டு குழந்தைகளைப் பெற்ற தாயும், அனாதை இதயம் கொண்ட இளவரசி ஃபோபியின் வளர்ப்புத் தாயுமாவாள்.
கிராக்கர் தத்தெடுப்பை உள்ளார்ந்த “ஆன்மீக முயற்சியாக” பார்க்கிறார். “அனாதைகள்” நம்மைச் சுற்றிலும் உள்ளனர். ஒவ்வொரு முறையும் நாம் தேவைப்படும் மற்றொருவருக்கு உதவும் மனப்பான்மையில் இருக்கிறோம். அதுபோலவே, நம் தேவைக்காக ஒருவர் நம்மைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் இந்தக் கிருபையைப் பெறுகிறோம். தேவன் நமக்காக என்ன செய்தார், நாம் ஒருவரையொருவர் எப்படி நடத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதற்கான படம் இது.
இயேசு தம் சீஷர்களிடம், நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்”(யோவான் 14:18). தத்தெடுப்பு நமது பரலோகத் தந்தையின் இதயத்தை வெளிப்படுத்துகிறது.
“தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி” என்று சங்கீதக்காரனாகிய தாவீது எழுதுகிறார் (சங்கீதம் 68:6). தத்தெடுப்பு என்பது நமது கதையின் ஒரு பகுதியாகும்.ஏனென்றால் நம்முடன் ஒரு தத்தெடுக்கும் தந்தை இருக்கிறார். அவர் எப்போதும் தமது குடும்பத்திற்கு நம்மை வரவேற்கிறார்.
டிம் கஸ்டாஃப்சன்
எ ன் கதை என் பிறப்பிலிருந்தே துவங்கியதா, கருத்தரிப்பிலிருந்தா, தெரியவில்லை. பல கால நிகழ்வுகள் இந்த பூமியில் எனது தொடக்கத்தின் குறிப்பிட்ட இந்த குழப்பமான சூழ்நிலைகளுக்கு விட்டுச் சென்றுள்ளது.எனது சொந்தக் கதை பல கஷ்டங்கள் மற்றும் விரக்தியை உள்ளடக்கியிருந்தாலும், மீட்பின் நம்பிக்கையின் என்ற ஒன்று எனக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
1967 ஆம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியரும் அவரின் கல்லூரி மாணவரும் காதல் கொண்டிருந்தனர். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, “நான்கு அல்லது ஐந்து சந்திப்புகள்” என்று அதைப்பற்றி என் தந்தை என்னிடம் விவரித்தார். அந்த “சந்திப்புகளில்” ஒரு கட்டத்தில் எனது உயிரியல் அம்மா கருத்தரித்தாள்.
எனது முதல் பெற்றோர் ஒருவரையொருவர் நேசிக்கவில்லை.
உண்மையில், அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கவே முற்பட்டனர். தியோடோரா கர்ப்பமாக இருப்பதை டெட் அறிந்ததும் தலை சுற்றும் வேகத்தில் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டான். வின்னிபெக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்பட்டவர்கள் இருக்கும் இடத்தில் என்னைப் பெற்றெடுக்க என் தாய் தீர்மானித்தார். அவள் கர்ப்பமாக இருப்பது அவளுடைய நெருங்கிய தோழிக்கு மட்டுமே தெரியும்.
1968 மார்ச் மாதம் ஒரு பனி பொழியும் புதன் கிழமை அன்று, பெண்கள் பெவிலியன் மருத்துவமனையில் என்னை தன் கைகளில் எடுக்கும்போது கதறி அழுத 22 வயது தாய்க்கு பிறந்தேன். மருத்துவமனையில் இருந்து அவளது இடிந்த அபார்ட்மெண்டிற்கு, மெத்தை மற்றும் படுக்கை விரிப்புக்கான பையுடன் வண்டியில் அவள் தனியாக பிரயாணம் செய்தாள்.
என் கதை இப்படிப்பட்ட குழப்பத்தில் தான் துவங்கியது. காமம், வெறுப்பு, கைவிடுதல், துக்கம் என்ற குழப்பமான துவக்கத்தில் தான் ஆரம்பித்தது. எதிர்காலத்தைப் பற்றிக் கூற முடியாது.
நமது கதைகள் அனைத்தும் ஆத்துமாவில் இப்படித்தான் துவங்குகின்றன. நாம் ஒவ்வொருவரும் தத்தெடுக்க வேண்டிய தேவையில் பிறந்தவர்கள். நாம் காயங்களுடன், நம் பரலோகத் தந்தையின் நிபந்தனையற்ற குணப்படுத்தும் வரையறுக்க முடியாத அன்பிற்காக ஏக்கத்துடன் பிறந்தவர்கள். தேவன் நம்மை ஏற்றுக்கொண்டதை விவரிக்கும்போது, நிச்சயமாக, முழு வடிவமற்ற வழிகளாக தோன்றும். தேவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.நாம் எப்போதும் அவருக்கு பிரியமான குழந்தைகளாக இருக்கிறோம். இருப்பினும், தத்தெடுப்பு என்ற சொல், தேவ அன்பின் பாதுகாப்பில் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து மனிதன் அந்நியப்படுத்தப்படுதலைப் பற்றிய கருத்தை நன்றாகப் படம்பிடித்துக்காட்டுகிறது. ஒரு வகையில், தேவனால் “தத்தெடுக்கப்பட்டது” என்பது நாம் எப்போதும் தேடும் அன்பையும், குடும்பத்தையும் இறுதியாகக் கண்டுபிடிப்பது போன்றது என்று நாம் கூறலாம்.
இந்த தத்தெடுக்கும் தந்தை நம்மை அனாதையாக, வேறுபட்டவராக, பிரிந்த நிலையில் விடமாட்டேன் என்று உறுதியளிக்கிறார். நாம் அவரிடமிருந்து எவ்வளவு பிரிந்திருந்தாலும் நமக்காக வருவேன் என்று அவர் தம்முடைய வார்த்தையில் உறுதியளிக்கிறார். “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். ”என்று அவர் யோவான் 14:18 இல் நமக்கு உறுதியளிக்கிறார். மேலும் அவர் தமது பிள்ளைகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் மீறுவதில்லை.
என்னைப் பொறுத்தவரை, இந்த தத்தெடுக்கும் தந்தை என் கதையின் இடிபாடுகளில் நிமிர்ந்து நின்றார். நான் பிறப்பதற்கு முன்பே, உண்மையில் காலம் தொடங்குவதற்கு முன்பே, அவர் மீட்பின் விதைகளை விதைத்து, எனது எல்லாக்காரியங்களையும் புதியதாக மாற்றினார். அவர் தனது இரண்டு கைகளால் என்னை வடிவமைத்தபோது, புத்தகங்கள், நண்பர்கள் மற்றும் சிவப்பு டூலிப்ஸை விரும்பும் ஒரு பெண்ணை உருவாக்கினார். எனது தாத்தா லாக்ரோஸ் மற்றும் ஹாக்கியில், புகழ் மட்டத்தில் சிறந்து விளங்கினார்,மேலும் அவரது வருங்கால மகன் அந்த இரண்டு விளையாட்டுகளையும் விளையாடி செழிப்பான் என்பதையும் தேவன் அறிந்திருந்தார். எல்லாவற்றிலும் தேவன் இருந்தார், சிக்கலுக்குள்ளும் மற்றும் அதன் வழியாகவும் மீட்பின் தங்க நூலை தேவன் தைத்தார். தேவன் என்னை உருவாக்கும்போது சிரித்துக்கொண்டே யோசித்ததை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ஹால் ஆஃப் ஃபேம் கண்டுபிடிக்கப்படும்வரை காத்திருப்போம்.நிச்சயமாக தேவ செயலின் முடிவு ஆச்சரியமானதாக இருக்கும்!
எ னக்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது, என்னை அழைத்துச் செல்லலாம் என்று என் பெற்றோருக்கு அழைப்பு வந்தது. (உண்மையில் , அவர்கள் என்னை வெளியே அழைத்துச் செல்லலாம் என்று சொன்னார்கள். ஆனால் அங்கிருந்த சமூக சேவகரே என்னை தேர்வு செய்ய வேண்டும் என்று என் அப்பா வற்புறுத்தினார். அது அவர்களின் மகளுக்கு தேவனின் விருப்பமாக இருக்கும் என்று அவர் நம்பினார். “நாங்கள் இங்கு ஒரு மாடு வாங்கவில்லை!” அவர் கோபமாக கூறினார். நான் ரசீதுடன் வந்துள்ளேன் என்பதை சமீபத்தில் கண்டுபிடித்தேன். $8! ((சுமார் ரூ. 600)என்னை தத்தெடுத்ததற்கான நிர்வாகக் கட்டணத்தின் செலவு.)
பிறகு நான் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு, கிங்ஸ்ஃபோர்ட் அவென்யூவில் உள்ள ஒரு எளிய பங்களாவில் வளர்க்கப்பட்டேன். என் பெற்றோர் ஜெர்மன் மொழி பேசினர், வானொலியில் ஜெர்மன் பாடல்களைக் கேட்டனர்.
இரண்டாம் உலகப் போரின்போது, ஐரோப்பாவில் வளர்ந்ததைப் பற்றி என் அப்பா சில சமயங்களில் என்னிடமும் என் தம்பி டானிடமும் கூறுவார்.
என் அப்பா உக்ரைனில் ஸ்டாலினின் மாபெரும் தூய்மைப்படுத்தலின் போது பிறந்தார். அவரது தாத்தா ஸ்டாலினின் படையால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். மேலும் அவரது இரட்டையர் அண்ணா உட்பட அவரது இரண்டு சகோதரிகள் பட்டினியால் இறந்தனர். என் அப்பாவுக்கு ஆறு வயதாக இருந்தபோது அவரது குடும்பம் ஓடிப்போய், ஜெர்மன் ராணுவத்தில் சேர்ந்தனர். ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பு கேத்தரின் தி கிரேட் அவர்களுக்குக் கொடுத்த நிலத்திலிருந்து விலகி, தங்கள் இனமான ஜெர்மனிக்கு தப்பி ஓடினார்கள். என் அப்பா தாயகத்தில் இருந்து வந்தபோது விமானத்தில் மனக்கவலையினாலும், இழப்பாலும் அதிர்ச்சியாக இருந்தாராம்.
அவருக்கு பத்து வயதாக இருந்தபோது, என் அப்பா தனது பெற்றோர் மற்றும் அவரது மூத்த சகோதரிகளுடன் சேர்ந்து அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து ஹாலிஃபாக்ஸ், நோவா ஸ்கோடியாவுக்குச் சென்றார். கனடா மீண்டும் எனது குடும்பத்திற்கு அதன் கதவுகளைத் திறந்தது. (1800களின் பிற்பகுதியில், குடியேற்றத்தின் முதல் அலையின் போது என் அம்மாவின் குடும்பம் வந்திருந்தது).
ஏழு பேர் கொண்ட குடும்பம் காப்பீடு இல்லாத கோழிப்பண்ணையில் ஒரு வருடம் வாழ்ந்தார்கள். என் அப்பா ஐந்தாம் வகுப்பில் இருக்க வேண்டும், ஆனால் அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டார். முதலில், குழந்தைகள் அவர் மீது கற்களை எறிந்து அவரை நாஜி என்று அழைத்தனர்.
பின்னர் என் அப்பா ஒரு புத்தக விற்பனையாளராக வளர்ந்தார் ,கதை மற்றும் உண்மையின் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு நாவலாக இருந்தாலும் சரி, புனைகதை அல்லாத புத்தகமாக இருந்தாலும் சரி, சரியான நேரத்தில் சரியானவரிடம் கொடுப்பதே அவருக்கு உலகில் மிகப்பெரிய விஷயம்.
அகதி கதைகள் அவருக்கு மிகவும் பிடித்தமானது. புலம்பெயர்ந்தவர் மக்கள் காலனியில் குடியேறினார்.அங்கே அவரது வாடிக்கையாளர்கள் அவரைப் போலவே கதையை நேசித்து அவற்றை மதித்தார்கள்.என் அப்பா தனது போர்க்கால குழந்தைப் பருவத்தின் பயங்கரமான விஷயங்களிலிருந்து புத்தகக் கடையில் ஒரு புகலிடத்தைக் கண்டுபிடித்தார். (என் அப்பாவின் புத்தகக் கடை இருக்கும் அதே மாலில், பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு மளிகைக் கடையும் வந்தது. என் தந்தை டெட் வழக்கமாக ஷாப்பிங் செய்யும் மளிகைக் கடை அது. நாங்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், அந்நியர்களைப் போல ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வோம்.)
ஒவ்வொரு குடும்பத்திலும் சிக்கல்கள், விரிசல்கள், குழப்பம் மற்றும் துக்கம் இருக்கத்தான் செய்கிறது. என் சொந்த குடும்பத்தில் எனக்கு நடந்ததைப் போலவே, என் வளர்ப்புக் குடும்பத்திலும் எனக்கு நடந்தது. நான் என் சொந்த குடும்பத்தை மிகவும் நேசித்தாலும், என் முதல் தாயால் நான் கைவிடப்பட்ட நாளில் என்னுள் ஏதோ ஒன்று உடைந்தது. ஆம், குழந்தைகள் தான் பாதிக்கப்படுகிறார்கள். மிகச்சிறிய குழந்தைகள் அதிர்ச்சிகரமான இழப்பை சந்திக்கும் போது, அந்த இழப்பை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் பெரும்பாலும் துக்கத்தின் வடிவில் வெளிப்படுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சில குழந்தைகள் கத்துவார்கள், ஒரு சிலர் என்னைப் போல அழவதில்லை, உள்ளுக்குள் புலம்புவார்கள்.
எழுத்தாளர் எலிசா மோர்கன் கூறுகையில், தத்தெடுப்பு மோசமான சூழ்நிலையிலிருந்து அன்பான மற்றும் அற்புதமான சூழ்நிலைக்கு தத்தெடுக்கப்பட்டாலும், எப்போதும் அவர்களுக்குள் “ஒரு இழப்புணர்வு” இருக்கும் என்கிறார். சில காலகட்டங்களில், அவர்கள் தங்கள் உண்மையான குடும்பத்தை இழந்ததை நினைத்து வருந்துவர். உடைக்கப்பட்ட அந்த சூழ்நிலையில் அவர்கள் யாராலாகிலும் தத்தெடுக்கப்பட வேண்டி உள்ளது. இது எப்போதும் திட்டம் B (C, D, அல்லது E . . . .) ஆகும்.
நம் படைப்பாளரின் மீட்பென்பது ஒரு நல்ல விஷயமாகும். பூமியில் உள்ள சில விஷயங்கள் உடையும்போது, அவை தொடர்ந்து உடைந்த நிலையில்தான் தொடரும். அப்பொழுது தேவன் பழுதுபார்ப்பது, மீட்டெடுப்பது போன்ற வேலைகளை நமக்காக செய்கிறார். குழப்பம், இடிபாடுகள் மற்றும் உடைந்த துண்டுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, “நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” (வெளிப்படுத்தின விசேஷம் 21:5) என்று நமக்கு உறுதியளிக்கிறார்.
பழுதுபார்க்கப்பட்ட பீங்கான் கிண்ணங்கள்
அதிர்ச்சியூட்டும் ஜப்பானிய மட்பாண்டக் கிண்ணங்களை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
“தங்க ஒட்டுதல்” என்று வெளிப்படையாக மொழிபெயர்க்கப்பட்ட கிண்ட்சுகி என்பது உடைந்த மட்பாண்டங்களைப் புதுப்பிக்கும் பல நூற்றாண்டுகள் பழமையான ஜப்பானிய கலையாகும். கண்ணுக்குத் தெரியாத பிசின் மூலம் பீங்கான் துண்டுகளை மீண்டும் பிணைப்பதற்குப் பதிலாக, கிண்ட்சுகி நுட்பமானது, தூள் செய்யப்பட்ட தங்கத்தால் தூவப்பட்ட ஒரு சிறப்பு மர சாறு அரக்குகளைப் பயன்படுத்துகிறது. முடிவில் விரிசல்களில் தங்கத் தையல்கள் மின்னும். ஒவ்வொரு “பழுது” பானையும் ஒவ்வொரு வகையா யிருக்கும்.
தேவன் தம் பிள்ளைகள் ஒவ்வொருவரிடமும் இதுபோன்ற ஒன்றைச் செய்கிறார். அவர் நம் உடைந்த துண்டுகளை எடுத்து பழுதுபார்க்கத் துவங்குகிறார். கின்ட்சுகி கலைஞர்களைப் போலவே, பெரும்பாலும் பழுதுபார்க்கப்பட்ட பகுதியை இயற்கையைவிட அழகாக்கி, புத்துயிர் அளித்து, இரண்டாவது வாழ்க்கையைத் தருகிறார்.தேவன் நம் வாழ்க்கையை மீட்டெடுக்கிறார். உடைந்த இடங்களில் அவரது ஒளி சிறப்பாக பிரகாசிக்கிறது. லியோனார்ட் கோஹன் பாடியபோது அதைச் சிறப்பாகச் சொன்னார், “எல்லாவற்றிலும் ஒரு விரிசல் இருக்கிறது . . . அதன்மூலமாகத்தான் வெளிச்சம் உள்ளே வரமுடியும்.”
உங்கள் கதையின் உடைந்த பகுதிகளில் தங்கத் தையல்களைப் பார்க்கிறீர்களா? நான் அவைகளை முன்பைவிட நன்றாகப் பார்க்க ஆரம்பித்தேன். சிலர் அதை தற்செயல் என்று அழைக்கலாம். ஆனால் அன்பான தத்தெடுக்கும் தந்தையைப் பற்றி சிந்திக்கும்போதும், கற்றுக் கொள்ளும்போதும், தங்கத்தின் மினுமினுப்பை மேலும் மேலும் தெளிவாகக் காணமுடியும்.
- என் தாய் ஒரு டச்சு, போலந்து எழுத்தாளர், நான் டூலிப்ஸ், பைரோகிஸ் மற்றும் எழுத்துகளுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
- எனது தந்தை, எனக்கு மனதைத் துன்புறுத்தும் ஏமாற்றத்தை அளித்தார், இருப்பினும் அவரது டிஎன்ஏ மூலம் ஒலிம்பிக் இணைப்பு உட்பட (நான் உலகின் மிகப்பெரிய குளிர்கால ஒலிம்பிக் ரசிகன்) சில அதிசயங்களை வெளிப்படுத்தினார்.
- என் அப்பா (என்னுடைய வளர்ப்பு அப்பா, அல்லது என் உண்மையான அப்பா) பின் தங்கியவர்களுக்காக அவரது புத்தகங்கள் மூலம் தனது நேசத்தை வெளிப்படுத்தினார்.
என் அப்பாவும் அம்மாவும் என்னை தத்தெடுத்ததால், நானும் என் கணவரும் கொரியாவில் இருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுப்போம்.
ஒரு அகதி என்னை தத்தெடுத்ததால், அகதிகள் மீது எனக்கு ஆழ்ந்த அக்கறை இருக்கும்.
ஒரு புதிய நிலத்தில் அந்நியராக இருப்பது மற்றும் நிராகரிக்கப்பட்டவராக இருப்பது என்னவென்று என் அப்பா மூலம் எனக்குத் தெரியும்.
ஒரு புத்தக விற்பனையாளரும், கதையை விரும்பியுமானவர் என்னை தத்தெடுத்ததால், இந்த பூமியில் எனது வேலையின் ஒரு பகுதி கதைகளை எழுதுவதும் சொல்வதும் ஆகும்.
தேவன் நாம் அனைவரும் விழித்தெழவும், புதுப்பிக்கப்படவும், பழுதுபார்க்கப்படவும், நம் ஆத்துமாக்களை மீட்டெடுக்கவும், அனைத்து வழிகளிலும் பொறுமையுடன் காத்திருக்கிறார். ஆனால் தேவன் நம்மை மீண்டும் ஒன்றாக இணைக்கவில்லை, அதனால் நாம் வெறுமனே செயல்படுகிறோம். நம்முடைய குழப்பமான தொடக்கங்கள் மற்றும் சூழ்நிலைகள் மற்றும் தேர்வுகளில் நம்மை ஒருபோதும் கைவிடாதபடி அவர் உறுதி செய்கிறார்.
ஒரு கிண்ட்சுகி கலைஞரைப் போல, நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம், மேடைக்கு மேடை, படைப்பாளர் நம்மை சுத்தம் செய்கிறார், உபசரித்து, தூய தங்கத்தால் நம்மை மேம்படுத்துகிறார், நம்மை குணப்படுத்துகிறார்.
நான் முன்பே கூறியது போல், எனது தத்தெடுப்பு கதை பல தத்தெடுப்பு கதைகளைப் போலவே காமம், வெறுப்பு, கைவிடுதல் மற்றும் துக்கம் ஆகியவற்றின் குப்பைகளில் தொடங்கியது. ஆனால் என் வாழ்நாள் முழுவதும், தேவன் எல்லாவற்றையும் புதியதாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இருப்பினும் அவருடைய கைவேலையைப் பார்க்க எனக்கு பல ஆண்டுகள் ஆனது.
கிண்ட்சுகி பானையை வைத்திருக்கும் சிலாக்கியம் உங்களுக்கு இருந்தால், ஒளியில் தங்கத் தையல்கள் எப்படி ஒளிரும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த மினுமினுப்பான கண்ணிசைகளில் கவனம் செலுத்த கற்றுக்கொண்டேன். தத்தெடுக்கும் தந்தை நம் அனைவரையும் தத்தெடுத்ததால், நாம் நேசிக்கப்படுகிறோம் என்பதை அவர்கள் எனக்கு நினைவூட்டுகிறார்கள். அவர் எல்லாவற்றையும் புதிதாக உருவாக்குகிறார் என்பது தெரியவருகிறது.
எங்கள் இரண்டு ஆண் குழந்தைகளான ஜோனா மற்றும் எஸ்ரா பிறந்த பிறகு, நானும் என் கணவரும் உயிரியல் ரீதியாக அதிக குழந்தைகளைப் பெற முடியாது என்று மக்கள் அடிக்கடி கருதினார்கள். அதனால்தான் நாங்கள் எங்கள் மூன்றாவது குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தோம் என்ற அனுமானம் தவறானது.
ஏனென்றால் என் கணவரும் நானும் எங்கள் உறவின் ஆரம்பத்திலிருந்தே தத்தெடுப்பு பற்றி பேசினோம். எப்போதாவது ஒரு குழந்தையை தத்தெடுப்பது மட்டுமல்லாமல், தத்தெடுப்பு பற்றிய கருத்துடன் டாய்ல் குழுவில் இருப்பது எனக்கு முக்கியமானது. “என்னுடைய குழந்தையைப் போல இன்னொருவரின் குழந்தையை என்னால் நேசிக்க முடியவில்லை” அல்லது “தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளனர்” போன்ற விஷயங்களை மக்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எனது தோழி ஒருவர், சீனா அல்லது கொரியாவில் இருந்து தத்தெடுக்கும் எண்ணத்துடன் அணுகியபோது, அவரது கணவரைத் தடுத்து நிறுத்தினார். “அந்த வெளிநாட்டினரைப் பற்றி அவருக்கு அவ்வளவு உறுதியாக தெரியவில்லை,” என்று அவர் கூறினார். (உணர்வைத் தணிக்கும் வகையில், “வெளிநாட்டினர்” என்று போலியான மலைப்பாங்கான உச்சரிப்பில் சொன்னாள். ஆம், அது நன்றாகவே நடந்தது.)
இந்த அறிக்கைகள், போதுமான அளவு கருணையுடன் வழங்கப்பட்டபோது, என் இதயத்திற்கும் அடையாளத்திற்கும் ஒரு அடியாக இருந்தது. நான் ஒருவித “அந்நியனாக” இருந்தேனா? நான் மேற்கத்திய ஐரோப்பிய வேர்களைக் கொண்ட கனேடியனாக இருந்திருக்கலாம்.ஆனால் எனது நண்பரின் கருத்து என்னை உறுதியாக “மற்றவர்” என்று உணர வைத்தது. (தத்தெடுக்கப்பட்டவர்களுக்கு இது போன்ற கருத்துகள் எவ்வளவு பாதிக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.) மற்ற நண்பர்கள் தங்கள் கணவர்கள் (அல்லது அவர்களின் கணவர் உண்மையில் பிரச்சினையா?) தத்தெடுப்பைக் கருத்தில் கொள்ள மாட்டார்கள் என்று என்னிடம் புகார் கூறும்போது, அது குழப்பமான இருந்தது. “இயற்கையாகப் பிறந்த” குழந்தைகளைப் போலவே மதிப்புமிக்கவர்கள் தத்தெடுக்கப்பட்டவர்கள். இதைப்பற்றி ஏலியன் திரைப்படத்தில் காணலாம்.
1990 ஆம் ஆண்டில், நான் டாய்லைச் சந்தித்தபோது, அச்சந்திப்பை மிகவும் முக்கியமானதாக கருதினேன். ஆனால் சாத்தியமான வாழ்க்கைத் துணைவர் என் விருப்பத்தை நிறைவேற்றுவார் என நம்பினேன். ஒரு உயிரியல் குழந்தைக்கு சமமாக என்னை ஏற்றுக்கொள்ளக்கூடிய திறந்த இதயமுள்ள இளைஞனாக இருக்க வேண்டும் என எண்ணினேன். டாய்லும் அப்படிப்பட்ட இளைஞன் தான். ஒரு காலகட்டத்திற்குப் பின்னர் , அல்ட்ராசவுண்ட் டெக்னீஷியன் மூலம் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. டார்லிங் எஸ்ரா அன்று பிரசவித்தபோது, எனக்கு எபிபானி ஏற்பட்டது. நாங்கள் இருவரும் விரும்பிய விவிலிய, இலக்கிய மற்றும் இயற்கைப் பெயரான ஃபோபி என்று பெயரிடவிருந்தோம். இதன் பொருள் “பிரகாசமான, ஒளிரும் நட்சத்திரம்” ஆகும்.எனக்குப் பிறந்த மகனை என் கைகளில் அணைத்தபடி, எப்படியாவது ஒரு பெண்ணைத் தத்தெடுப்போம் என்பதை நான் உறுதியாக உணர்ந்தேன். ஒரு பிரகாசமான நட்சத்திரம் எங்கள் அனைவரையும் வழி நடத்தியது.
அம்மா ஒரு போராளி
நான் தத்தெடுக்கப்பட்டு முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு நானும் என் கணவரும் கொரியாவில் எங்கள் மகள் ஃபோபி மின்-ஜூ ஜேனினுடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டோம். நாங்கள் அவளை சியோலில் உள்ள எங்கள் ஹோட்டல் அறைக்கு அழைத்து வந்தபோது, அவளுக்கு ஆறரை மாதங்கள். முதலில் அவளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எங்களிடம் அவளை ஒப்படைக்க மாட்டார்கள் என நினைத்தாள், ஆனால் நாங்கள் அவளைத் திருப்பித் தரவில்லை. அதனால் அவள் கத்தினாள். அதிகாலையில் கத்துவாள். அவள் அழுவதை நிறுத்த பல முயற்சிகளில் ஈடுபட்டோம். இறுதியாக தேவ உதவிக்காக கெஞ்சினோம். 99.9 சதவிகிதம் உதவி செய்த டாய்ல், ஒரு கட்டத்தில் தூங்கிவிட்டார். இது என்னை பொறுப்பாளராக மாற்றியது. அவர் தனது குழந்தையின் கதறலில் எப்படி தூங்கினார் என்பது எனக்கு ஒருபோதும் தெரியாது. “அவசியத்தை” – கண்டுபிடிப்பின் தாய் என்று எப்படி சொல்கிறார்கள் தெரியுமா? ஏனென்றால் உன் கஷ்டத்தின் போது தான் சில உண்மையை நாம் கற்றுக் கொள்கிறோம். அச்சமயத்தில் நான் அவநம்பிக்கையுடன் இருந்தேன்.
ஒரு குழந்தை கேரியரில் ஃபோபியை எடுத்துக்கொண்டு, ஒரு நல்ல யோசனையில் இறங்கினேன். குழாய்களை ஆன் செய்து, அவளது குட்டிக் குழந்தையை மடுவின் விளிம்பில் உட்காரவைத்து, ஓடும் நீரில் அவள் கால்களை உதைக்க அனுமதித்தேன். ஃபோபி அழுகையை நிறுத்தினாள். நாங்கள் குளியலறையின் கண்ணாடியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். என் குட்டி இளவரசியினால் (“இளவரசி” கொரிய மொழியில் ஃபோபியின் வளர்ப்புப் பெற்றோரின் புனைப்பெயர்.)
நான் சோர்வாகவும், மனமுடைந்தும் நின்றபோது, என்னுள் ஒரு வீரனைப் போல உணர்ந்தேன். இந்தப் பெண் குழந்தைக்கு நான் இரவும் பகலும் நான் ஒரு சிப்பாய். அவள் பாதுகாப்பாக இருக்கிறாள். என்னை நம்ப முடியும் என்று அவளுக்குத் தெரியும் வரை நான் கைவிடமாட்டேன்.
நீயும் நானும் தான் என் குழந்தையே. இதில் நீ வெற்றி பெற மாட்டாய் என்று தாய்மார்கள் சொல்வார்கள். நாம் சண்டையிவோம். “நீ குறும்பு செய்து கொண்டிருந்த போதும், இப்போதும் நான் உனக்காக போராடுகிறேன். ஏனென்றால் நாம் ஒன்றானவர்கள்.
பொதுவாக அம்மாக்கள் பிள்ளைகளுடன் போராடுகிறார்கள். ஆனால் அப்படி செய்தால் வெற்றி காண முடியாது. அவர்கள் வம்பு செய்யும்போதும் , அவர்களுக்காக தாங்கள் போராடுவதை அவர்கள் புரியச் செய்ய வேண்டும். பிறகு நானும் என் மகளும் ஒன்றிணைந்தோம். மணிக்கணக்காக நாங்கள் அப்படியே நின்றோம். இறுதியாக, அவள் தூங்கிவிட்டாள். காலையில் எழுந்தவுடன் மீண்டும் கத்த ஆரம்பித்தாள்.
இது நடக்கலாம் என்று யாரும் எச்சரிக்கவில்லை. எங்கள் சமூக சேவகர் மற்றும் குழந்தை மருத்துவர் (சர்வதேச தத்தெடுப்புகளை நன்கு அறிந்த ஒரு ஆப்பிரிக்க பெண்) எங்களிடம் அவர் அழக்கூடும் என்று கூறினார்.
“அவள் கத்தலாம் அல்லது மிகவும் அமைதியாக இருக்கலாம்” என டாக்டர் ஹாடி கூறினார். “இந்த குழந்தைகள் தங்கள் துயரத்தக் சமாளிக்கும் இரண்டு முக்கிய வழிகள் இவை என்றார். “வேண்டுமென்றால் அவள் கத்துவாள் என டாக்டர் ஹாடி கூறினார் . உள்ளே பூட்டி வைப்பதை விட கூச்சலிட்டால், அவள் தன் பராமரிப்பாளர்களுடன் இணைந்திருக்கட்டும். அவள் அவர்களுடன் இணைந்திருந்தால், எங்களுடனும் ஒரு இணைப்பை எளிதாக உருவாக்க முடியும்.
நானும் டாய்லும் அதற்கு ஒப்புக்கொண்டோம். நாங்கள் எல்லாவற்றையும் கோட்பாட்டில் புரிந்துகொண்டோம்.
கொரிய ஏர்லைனில் வீட்டிற்கு செல்லும் வழியில் ஃபோப் கத்தினாள், கொரியர்கள் எங்களுக்கு உதவ முயன்று நிலைமையை மோசமாக்கினர். நான் ஏரோபிளேன் பாத்ரூமுக்குச் சென்று அழுதேன். என் மகளுடன் வாழ்க்கையைத் தொடங்க நான் விரும்பிய விதம் அதுவல்ல. ஒவ்வொரு முறை நான் என் இருக்கைக்குத் திரும்பிச் செல்லும்போதும், அவளது அனாதை இதயத்துடன் போராடுவதற்கான ஒரு புதிய தீர்மானத்தை உணர்ந்தேன்.
“அனாதை” என்ற வார்த்தை உங்களுக்கு சங்கடமாக தோன்றலாம். ஃபோபியை அவர்கள் எங்கள் கைகளில் வைத்த தருணத்தில், அனாதை என்ற அவள் நிலை ரத்து செய்யப்பட்டதாக நினைக்கலாம்.
ஆனால், “தி பிரின்ஸ் பிரைடில்” இல் இனிகோ மாண்டோயாவின் வார்த்தைகளில், இந்த வார்த்தையின் அர்த்தம் இருக்கிறது. பெற்றோரை இழந்த ஒருவரை நாம் அனாதை என்று நினைக்கிறோம். ஆனால் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு அது தெரிவதில்லை.
தத்தெடுப்பு நிபுணரான டாக்டர். மார்சி ஆக்ஸ்னெஸ் தனது வாழ்க்கையில் எண்ணற்ற முறை இந்த புறக்கணிப்பு மனப்பான்மையைக் கண்டுள்ளார். தத்தெடுப்பு மாநாடுகளில் பல விளக்கக்காட்சிகளில், ‘நான் பிறந்த அன்றே என் தாயை இழந்தேன்’ என்று அப்பட்டமாகச் சொல்வார்கள். பெரும்பாலான மக்களிடம் நான் அதைச் சொல்லுவேன். அவர்கள் தத்தெடுக்கப்பட்டார்கள். அது அதிசயமானது , பெரியது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
தத்தெடுப்பு வெற்றியானது என்ற பிடிவாதக் கோட்பாடு சமூகத்தில் உள்ளது! ஒரு குடும்பத்தால் தங்கள் குழந்தையைப் பராமரிக்க முடியாததால், கவனிக்கக்கூடிய குடும்பத்திற்கு அக்குழந்தை அனுப்பப்படுகிறது. அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பிறந்த குடும்பம் வெற்றி பெறுகிறது (உங்கள் குழந்தையை வளர்க்க முடியாத சோகம் மற்றும் அதிர்ச்சியைப் பொருட்படுத்த வேண்டாம்), வளர்ப்புக் குடும்பமும் வெற்றி பெறுகிறது. குழந்தை? சமுதாயத்தில் குழந்தையும் வெற்றி பெறுகிறது. குழந்தை தனது புதிய மற்றும் மேம்பட்ட பெற்றோருக்கு எப்போதும் நன்றியுடன் இருக்க வேண்டும். கதையின் முடிவு எனக்கு புரிகிறது.
ஒரு குழந்தை தன்னை நேசிக்கும் ஒரு குடும்பத்தைக் கண்டுபிடிப்பதில் மகிழ்ச்சியடையாதவர் யார்? நான் இன்ஸ்டாகிராமில் #”அன்பு என்பது தத்தெடுப்பது” என்ற ஹேஷ்டேக்கைப் பின்தொடர்கிறேன். அழகான குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரின் புகைப்படங்களைக் கிளிக் செய்து பார்ப்பேன். தத்தெடுப்பு சொல்ல முடியாத மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ஆனால் ஆழ்ந்த இழப்பும் அதனுள் இருக்கிறது. இரண்டையும் எடுத்துச் செல்வது தான் நல்லது.
தொழில்நுட்ப ரீதியாக, சட்டப்பூர்வமாக, தத்தெடுக்கப்பட்ட நபர் இனி அனாதையாக இல்லை என்பர். ஆனால் அவர்களுள் அனாதை உணர்வுகள் அடிக்கடி நீடிக்கும். எனது வாசகர்களில் பலர் தங்கள் உயிரியல் பெற்றோருடன் வளர்ந்தாலும், தங்கள் பெற்றோரால் கைவிடப்பட்டதாக உணர்கிறார்கள். விவாகரத்து ஆவணங்கள் கொடுக்கப்பட்டதால், பிரிந்துவிட்டதால், வேறு சில வழியில் விலக்கப்பட்டதால் சிலர் பின்தங்கியதாக உணர்கின்றனர். நம்மில் பலருக்கு இல்லாத ஏதோவொன்றிற்காக ஏங்கும் பழக்கம் இருப்பதை அடையாளம் காண முடியும்.
தத்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் உண்மை குடும்ப உறுப்பினர்களின் இழப்பென்ற கேள்விகளால் துக்கப்படுவதை நிறுத்த மாட்டார்கள். தோளுக்கு மேல் பார்ப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள்.நீண்ட காலத்திற்கு முன்பு வெளியேறியவர்களைப் பார்ப்பதை நிறுத்த மாட்டார்கள்.
நாம் கைவிடப்பட்டதாக உணர்வதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், யார் நம்மை விட்டு வெளியேறினாலும், கிறிஸ்துவில் நமக்கு ஆறுதலும் குணப்படுத்தலும் இருக்கிறது. ஆத்ம அனாதைகளாகிய நாமும் தனிமையாக உணர்ந்தோம், இதயத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழியை நீண்ட காலமாக கடினமாகத் தேடினோம். நீங்களும் நானும் மனிதகுலத்தின் அனுபவத்தை இழந்தவர்களாகவும், கைவிடப்பட்டவர்களாகவும், உணர்ந்தோம். நாம் “சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்”. (எபேசியர் 2:3).
பிறகு ஏதோ நடந்தது. கிறிஸ்துவில் தேவன் இறந்துபோன நம் இருதயங்களுக்கு ஜீவனை ஊட்டினார். தனிமையில் இருந்த நம்மைத் தம் தந்தையின் கரங்களுக்குள் இணைத்தார். அவர் நம்மை மகன்கள் மற்றும் மகள்கள் என அழைக்கிறார். அவருடைய சொந்த நேசத்துக்குரிய குழந்தைகள், இப்போது அவருடைய அன்பையும் கவனிப்பையும் பெற முடிகிறது. அதிசயமாக, கிறிஸ்துவின் அன்பை நாம் அனுபவிக்கும்போது, நாம் என்றென்றும் அவருக்குச் சொந்தமானவர்கள் என்ற உண்மையைக் கற்றுக்கொள்கிறோம். நம் வீட்டிற்காகவும், ஆறுதலுக்காகவும், பதில்களுக்காகவும் நாம் தேவன் மேல் நம் பாரத்தை ஊற்ற வேண்டும்.
“ஆ த்தும இல்லம்”அல்லது “உள் கோட்டை” என்ற அவிலா தெரசாவின் கருத்து குணப்படுதலின் ஆரம்பத்தை குறிக்கிறது. நமது வீழ்ந்த உலகில், நாம் அனைவரும் குணமடைய வேண்டியிருக்கிறது, உணர்ச்சியில், உடலில் மற்றும் ஆத்துமாவில்.
பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பேபி ஃபோபியின் அலறல்களை நான் இன்னும் கேட்கிறேன். அவளி டமிருந்து கிழித்தெறியப்பட்ட துயரத்தின் அழுகைகள் அவை.அவளுடைய அம்மா,அப்பா உடன்பிறப்புகள், வீடு, நாடு, கலாச்சாரத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால் ஃபோப் புலம்பிக்கொண்டிருந்தாள். அவள் இதயம் எலும்பு போல உடைந்தது.
அந்த வருத்தம் அவளுடைய கதையின் ஒரு பகுதி.ஆனால் ஒரு பகுதி மட்டுமே. அந்த பழைய காயத்துடன் இருக்க அவள் வரையறுக்கப்படவில்லை. மக்கள் பெரும்பாலும் “பழைய காயம்”கோட்பாட்டை நிராகரிக்கிறார்கள்.ஏனெனில் அவர்கள் தாங்கள் ,தங்கள் அன்புக்குரியவர்கள் விளக்கப்படுவதை விரும்புவதில்லை. ஆனால், நமது கடந்தகால காயங்கள் மறுக்க முடியாதவை என்றாலும், சிருஷ்டிகரின் மென்மையான வடிவத்தின் மூலம் காயங்கள் மாற்றப்படும், குணப்படும் என நற்செய்தி கூறுகிறது.
காயங்கள் ஆறலாம். அதை மாற்ற ஆத்தும வளங்கள் உள்ளன. அப்படிப்பட்ட மக்கள் நெகிழ்ச்சியுடனும், வலிமையுடனும் இருக்கிறார்கள். சரியான ஆதரவுடனும், அன்புடனும் தங்கள் உடைந்த மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையில் தொடர முடியும்.joy.
“பொருந்துதல், ஒருங்கிணைத்தல் ஒன்றாக இணைதல்” என்பது கைவினைஞர் துண்டுகளை எடுத்து அவற்றைக் கொண்டு புதிய மற்றும் அழகான ஒன்றை உருவாக்குவது போன்றது.
முக்கிய விஷயம் என்னவென்றால் கடினமான பகுதிகளைத் தவிர்க்க வேண்டாம். அப்படித் தவிர்த்தீர்களானால் உங்களுக்கு இழப்பு இல்லை என்று நடிப்பதைப் போலாகும்.
நீங்கள் தத்தெடுக்கப்பட்டவரைப் பார்த்து, என்னை நம்பாமல் இருக்கலாம். உண்மையாகவே லாரி நீங்கள் என் உடன் பிறந்தார் மகளைப் பற்றி இப்படி கூற முடியுமா: அவளுடைய உண்மையான பெற்றோர் மதுக்கு அடிமையானவர்கள் மற்றும் சட்ட ரீதியாக அவர்கள் அவளுக்கு பெற்றோர்கள் அல்ல. ஆனால் அவள் தன் வளர்ப்பு பெற்றோர்களுடன் நன்றாக இருக்கிறாள். அனைவரும் அவளிடம் அன்பு செலுத்துகிறார்கள்.நான் நன்றாக இருக்கிறேன், எங்கள் மகள் ஃபோபியும் அப்படித்தான். நாங்கள் இருவரும் ஒற்றைத் தாய்மார்களால் வளர்க்கப்பட்டவர்கள்.”
நீங்கள் தத்தெடுக்கப்பட்டவரைப் பார்த்து, என்னை நம்பாமல் இருக்கலாம். நான் நன்றாக இருக்கிறேன், எங்கள் மகள் ஃபோபியும் அப்படித்தான். நாங்கள் இருவரும் ஒற்றைத் தாய்மார்களால் வளர்க்கப்பட்டவர்கள்.கொரியாவில் வசிக்கும் எனது மகள் திருமணத்திற்கு புறம்பாக பிறந்ததால் கவலையடைந்திருப்பாள். சில சமயங்களில் இந்த ஒற்றைத் தாய்மார்களும் அவர்களது குழந்தைகளும் சமூக மற்றும் குடும்ப ஆதரவின்றி இறுதியில் தங்கள் உடல்களுக்காக கடத்தப்படுவதைக் கூட நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நினைத்து என்னால் தாங்க முடியவில்லை.
எல்லா வகையான குடும்பங்களிலும் முறிவுகள் உள்ளன. உங்கள் குடும்பத்தில் முறிவு இல்லை என்றால் அதற்கு என்ன காரணமாய் இருக்கும்? முறிவு எவ்வாறு இழப்பை ஏற்படுத்துகிறது?
காயங்களுக்கு ஆதாரம் எதுவாக இருந்தாலும், மனிதர்கள் என்ற வகையில் எல்லோருக்கும்,எப்போதும் உடைவுகள் இருக்கும். தத்தெடுக்கப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், பழைய இடைவெளியைத் தாங்குகிறார்கள்.அது சில சமயங்களில் நமக்கு சிக்கலைத் தரும். 1997-ல் நடந்த கார் விபத்தில் என் வால் எலும்பு மற்றும் இடுப்பு எலும்பு முறிந்த போது அவ்வலி எனக்கிருந்தது.
தத்தெடுக்கும் பெற்றோருக்கு நான் ஒரு விஷயத்தைச் சொல்ல முடியும் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும்:
நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து இருந்தீர்கள் என்றால் அக்குழந்தைக்கு நம்பிக்கையின்மை மற்றும் விரத்தி இருக்கும். ஆனால் உங்களது ஏற்றுக் கொள்ளும் கரங்களால் அந்த முறிவு உணர்வு மாறும் .அதுதான் உண்மை.
எனக்கு வயது 51, என் பெற்றோரால் நான் மிகவும் நேசிக்கப்பட்டேன். என் கணவரும் நானும் எங்கள் மகளை ஆழமாகவும், தீவிரமாகவும் நேசிக்கிறோம். சில நேரங்களில் இது என்னை திடுக்கிட வைக்கிறது.
உண்மை என்னவென்றால், ஒருவரின் உண்மை குடும்பத்தின் குழப்பமான இழப்பினால், அக்குழந்தைகளுக்கு அற்புதமான வாழ்க்கை இருக்காது என்று அர்த்தமில்லை. நான் செய்தேன் மற்றும் செய்கிறேன்! எனது பெற்றோர்கள் நிபந்தனையற்ற அன்பினால் என்னைத் தத்தெடுத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள்தான் என் உண்மையான பெற்றோர்,என் குடும்பம். மேலும் அன்பான தாத்தா, பாட்டி, அத்தைகள், மாமாக்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
ஆனால் அந்த இழப்பு சிறியதாகத் தோன்றினாலும் அவை கணக்கிடப்பட வேண்டும்.
எப்படி?
தைரியமாக இரு என்பதற்கு மாறாக, உங்கள் பிள்ளைகளை அந்தப் புள்ளிகளை இணைக்க உதவுங்கள். நீங்கள் பெரியவர்கள். வாழ்க்கையின் பயமுறுத்தும் மற்றும் குழப்பமான நேரங்களில் அவர்களுக்கு உதவ அவர்கள் நம்புபவர்கள் நீங்களே. உங்கள் குழந்தையின் இதயத்தில் முதலீடு செய்யுங்கள். வலிமிகுந்த ஆராய்ந்து புரிந்துகொள்வது, ஏற்றுக்கொள்வது மற்றும் மன்னிப்பது ஆகியவற்றை ஊக்குவியுங்கள். உடைந்த இடங்களில் நம்மைச் சரிசெய்து பலப்படுத்தும் தேவனை உங்கள் குழந்தைக்கு சுட்டிக்காட்டுங்கள்.
“நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (எரேமியா 30:17) என்று வாக்குத்தத்தம் செய்யும் குணமாக்கும் தேவனை சார்ந்து கொள்ளுங்கள்.
ஒரு நாள் உங்கள் குழந்தை வளர்ந்து, அவர்களின் ஆரம்ப நிலை பற்றி அறிய விரும்பினால், தாய்,தந்தை ,சொந்த நாடு, அனாதை இல்லத்தைத் தேட அவர்களுக்கு உதவுங்கள் (இது திகிலூட்டும்).
எனது தேடலில் எனது பெற்றோர் எனக்கு ஆதரவளித்தனர், இறுதியில், அவர்கள் மீதான எனது அன்புக்கும் விசுவாசத்திற்கும் எல்லையே இல்லை.
நான் அவர்களின் மகள் என்பதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது என்பதை நான் புரிந்துகொண்டேன். அதை எதுவும் மாற்ற முடியாது. ஞானம் மற்றும் கிருபையை தேவனிடம் கேளுங்கள்.
நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அவரிடம் மீண்டும் மீண்டும் கேளுங்கள். உங்களுக்கு ஒவ்வொரு மண்த்துளியும் அவை தேவைப்படும்.
ஒரு தத்தெடுக்கும் தந்தை
ஒரு தத்தெடுக்கும் தந்தை பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது நமக்குத் தெரிந்தவை அப்போது தெரியாது. உலகம் மற்றும் தேவன் பற்றிய நமது பார்வைகள் எவ்வளவு ஆழமாக மாறும் என்று எங்களுக்குத் தெரியாது. தத்தெடுப்பு என்பது ஒரு தீவிர கிறிஸ்தவ கருத்தாகும். எண்ணற்ற நம்பிக்கையற்றவர்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இது ஒரு கிறிஸ்தவ கோட்பாடாகும். தத்தெடுப்பு என்றால் என்ன?
எனது போதகர், மூன்று குழந்தைகளின் வளர்ப்புத் தந்தை என்ற தலைப்பில் பிரசங்கிக்க விரும்பினார். அவர் மூலம் ஆரம்பகால தேவாலயம் தத்தெடுப்பை மாதிரியாகக் கொண்டிருந்தது என்பதை அறிந்தேன். முதல் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசில், சிசுக்கொலை பரவலாக இருந்தது.ஏனெனில் இது கருக்கலைப்பை விட எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது (தாய்க்கு). குழந்தைகள் (பெரும்பாலும் பெண்கள்) நகரின் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் வெளிவந்தால், இறந்துவிடுவார்கள் அல்லது விலங்குகளால் கொல்லப்படுவார்கள். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் குழந்தைகளை மீட்டுத் தத்தெடுத்தனர். இறையியலாளர் ஜீன் வீத் கருத்துப்படி, “கிறிஸ்தவம் எவ்வாறு புறமத கலாச்சாரத்தை வென்றது” என்ற வலைப்பதிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் “ரோமின் கைவிடப்பட்ட குழந்தைகளை மீட்டு, அவர்களைத் தங்களுடையவர்களாக வளர்ப்பதன் மூலம் சிசுக்கொலைக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது ஒரு மகத்தான சுய தியாகமாகும்”. வளங்கள் குறைவாகவும் உயிர்வாழ்வது கேள்விக்குறியாகவும் இருந்த காலமது.
என் போதகர் தேவனை தத்தெடுக்கும் தந்தை என வர்ணித்தார். தேவன் இரண்டு குழந்தைகளை மட்டும் தத்தெடுக்கவில்லை. அவர் மில்லியன் கணக்கானவர்களை தத்தெடுத்துள்ளார் . ஒவ்வொரு நாளும் புதிய குழந்தைகளை தத்தெடுத்து வருகிறார். அவரது அன்பான பின்தொடரும் தன்மை புதியவர்களை கவனித்துக்கொள்ள உதவுகிறது.இந்தச் செயல் தொடர்கிறது. அவர் எப்போதும் நம்மை ஏற்றுக்கொள்கிறார், தழுவிக்கொண்டிருக்கிறார்.
தத்தெடுப்பைப் புரிந்துகொள்வதன் மூலம் தேவனின் இதயத்தைப் பற்றி நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். எனது தத்தெடுப்பு அனுபவத்தின் மூலம் தேவனைப் பற்றிய எனது சொந்த புரிதல் மிகவும் ஆழமாக வளர்ந்துள்ளது. கடந்த காலச் சூழ்நிலைகளிலிருந்து நம்மை வெளியே கொண்டு வந்து, நம்மைத் தன் சொந்தக் குழந்தைகளாக்கி, மரணம் வரை நம்மைக் காப்பார். நாம் எப்போதும் தேவனின் மகன்களாகவும், மகள்களாகவும் இருப்போம். நமது அடையாளம் அவருடைய பாதுகாப்பில் உள்ளது. அவர் நம்மைத் தத்தெடுப்பது நம்மை நேசத்துக்குரியவர்களாகவும், பராமரிக்கப்பட்டவர்களாகவும் மாற்றுகிறது.
தத்தெடுப்பு மூலம் தேவனின் அன்பின் ஆழம் மற்றும் நிலைத்தன்மையை முன்னெப்போதும் இல்லாத வகையில் புரிந்துகொள்ளலாம். தத்தெடுப்பின் மூலம் ஃபோபியை எங்கள் சொந்த அன்புக்குரிய குழந்தையாகக் கூறுவது போல, பரம தந்தை நம்மைப் பின்தொடர்கிறார், உரிமை கோருகிறார்.ஒருபோதும் நம்மைத் திரும்பப் பெறுவதில்லை. நம் மகளுக்கு நாம் எவ்வளவு உறுதியாய் உள்ளோமோ, அதே அளவு தேவனின் அர்ப்பணிப்பு எல்லையற்ற வலிமையானது.அது ஒரு உடைக்க முடியாத உடன்படிக்கையாகும்.
தேவன் நம் அனைவரையும் ஒரே மாதிரியாக நேசிக்கிறார் என்பதை தத்தெடுப்பு காட்டுகிறது. என் மகன்களைப் பற்றி நான் உணருவதையும், என் மகளைப்பற்றி நான் உணரும் விதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க, ஒரு உயிரியல் தாயாகவும, வளர்ப்புத் தாயாகவும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அதில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. தேவன் தனது ஒவ்வொரு குழந்தையையும் ஒரே மாதிரியாகப் பார்த்து மகிழ்கிறார், அக்கறை காட்டுகிறார் என்பதை நாம் கற்றுக்கொள்ளலாம். விசுவாசிகளாகிய நாம் அனைவரும் தத்தெடுக்கப்பட்டவர்கள். அவருடைய அன்பிலிருந்து எதுவும் நம்மை பிரிக்க முடியாது.
தேவன் அனாதையின் உதவியாளராக இருப்பதால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்களுக்கு தங்குமிடம், உதவி மற்றும் வளங்களை வாக்களித்துள்ளார். அனாதைகளுக்கு உணவளிப்பதன் மூலமும், அவர்கள் வாழ்க்கையில் அக்கறை செலுத்துவதன் மூலமும், அவர்கள் தவறுகளைச் சரிசெய்வதன் மூலமும் இந்தப் புனிதமான பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளலாம். அவர்களைப் பாதுகாக்கவும், ஆதரிக்கவும் நம்மை அழைக்கிறார். “பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்” என்று சங்கீதம் 146:9-ல் கூறுகிறது. தத்தெடுப்பு உலகளாவிய அனாதையர்களின் நெருக்கடியை தீர்க்காது. ஆனால் அது ஒரு அனாதையின் நெருக்கடியை தீர்க்கும். அவருடைய கண் குருவியின் மேல் இருக்கிறது. நம்மேலும் உள்ளது.
“நா நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.” என்று யோவான் 14:18ல் இயேசு கூறுகிறார்.
இந்த வசனம் நம் அனைவருக்குமானது. மனிதர்களாகிய நாம் பல சமயங்களில் இழந்தவர்களாகவோ, பிரிந்து சென்றவர்களாகவோ, கைவிடப்பட்டவர்களாகவோ இருந்தபோதிலும், தேவன் நம்மை ஆறுதல்படுத்துகிறார். அன்பால் நம்மை ஆசீர்வதிக்கிறார். தேவன் நம்மைக் கைவிடுவதில்லை, நம்முடன் இருக்கிறார், காப்பாற்றுகிறார், பராமரிக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் நமக்காக வந்து நம்மைத் தத்தெடுப்பதாக வாக்களித்துள்ளார். நாம் அவருக்கு சொந்தமானவர்கள்.
தேவனின் உருவம் தாங்குபவர்களாகிய நமக்கு என்ன பாதிப்புகள் உள்ளன? சட்டப்பூர்வ தத்தெடுப்பு என்பது குழந்தைகளை அனாதைகளாக விடுவதில்லை.அவர்களுக்காக உறுதியான வழியில் உதவுவதாகும்.ஆனால் தத்தெடுப்பு என்பது நாம் தேவனைப் பின்பற்றுவதற்கான ஒரே வழி அல்ல. அனாதைகள் மற்றும் விதவைகளைகளின் துயரத்தில் அவர்களைத் தாங்குவது “மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது” (யாக்கோபு 1:27 ஐப் பார்க்கவும்).
அனாதைகள் யார் என்பதை மட்டும் கருத்தில் கொள்வோம். இது “தொழில்நுட்ப” அனாதைகளை மட்டும் குறிக்கவில்லை. அனாதைகள் என்ற வார்த்தை வேதத்தில் நாற்பத்தி இரண்டு முறை குறிப்பிடப்பட்டுள்ளது.எப்போதும் தந்தை இல்லாத ஒருவரைக் குறிப்பிடுகிறது. (உங்கள் தந்தை இறந்தால், நீங்கள் அனாதையாக கருதப்படுவீர்கள்.) அனாதைகளைப் பார்க்கும் கலாச்சாரம், பரவலாக நம்பிக்கையின்மையின் எடையின் கீழ் உள்ளது. தேவனைப் போல நாம் எப்படி அனாதைக்கு இருக்க முடியும்?
சில ஆபத்தில் இருக்கும் இளம் வயதினருக்கு வழிகாட்டலாம்,முதிர்ந்த சகோதர , சகோதரியாக இருக்கலாம். சில காரணங்களால் பெற்றோரிடமிருந்து அந்நியப்பட்டவர்கள் மீது ஆர்வம் காட்டலாம். ஒற்றைத் தாயால் வளர்க்கப்படும் ஒரு பையனை ஹாக்கி கேம் அல்லது மீன்பிடிக்க அழைத்துச் செல்லுங்கள்.வீடியோ கேம்களை விளையாடுவதற்கு கூட அழைத்துச் செல்லுங்கள். நம் சமூகத்தில் பெற்றோருக்குரிய நெருக்கடி உள்ளது.நாம் விழிப்புடன் இருந்தால், இன்றைய “அனாதைகளை” கண்டுபிடித்து அவர்களுக்கு சேவை செய்யலாம். இது தேவனைப் போன்ற ஒரு தத்தெடுக்கும் ஆவியை வளர்ப்பது பற்றியது.
உதவியாளர்களைத் தேடுமாறு திரு. ரோஜர்ஸின் தாயார் கூறியது ஏன் தெரியுமா? நான் சிறுவனாக இருந்தபோது, செய்திகளில் பயமுறுத்தும் விஷயங்களைப் பார்ப்பேன்.”என் அம்மா என்னிடம், உதவியோடிருப்பவர்களை தேடுங்கள். நீங்கள் எப்போதும் கண்டுபிடிப்பீர்கள்’’ எனக் கூறுவார். அனாதைகளுக்கு உலகம் ஒரு பயங்கரமான இடம். அவர்களைத் தேடுவோம், அவர்களுக்குத் தேவையான உதவியாளர்களாக இருப்போம்.
எங்கள் தோழியான லூயிசா, மூன்று வயதில் அன்பான மற்றும் வயதான பெற்றோரால் தத்தெடுக்கப்பட்டார் . பதினொரு வயதில் அப்பாவையும், பதினான்கு வயதில் அம்மாவையும் இழந்தாள். லூயிசாவுக்கு முப்பது வயது சகோதரனும் இருக்கிறான். அவளுடைய சகோதரன் மார்வின் அவளுக்கு நல்லவனாக இருந்தபோதிலும், ஒரு டீனேஜ் பெண்ணை வளர்க்கும் திறனில் அவர் குறைவாகவே இருந்தார். பதினெட்டு வயதில், லூயிசா பொது வீடுகளில் வசித்து வந்தார். பில்களை செலுத்துவதற்கும் உயிர் பிழைப்பதற்கும் மிகவும் கடினமாக போராடினாள். கல்லூரிக்குச் செல்வது, வேலைக்கு செல்வது, போன்றவற்றை அவள் அனுபவிக்க முடியவில்லை. இப்போது இருபத்து நான்கு வயதான இந்த அனாதையை பராமரிக்கும் பாக்கியத்தை எங்கள் குடும்பத்தாரும், தேவாலயத்தின் உருப்பினர்களும் பெற்றிருக்கிறார்கள். அவளை மதிய உணவிற்கு வெளியே அழைத்துச்செல்வது, வீட்டிற்கு சாப்பிட அழைப்பது, வீட்டை சுத்தம் செய்யச்செய்வது போன்றவற்றை செய்வார்கள்(அவள் சுத்தம் செய்வதை விரும்புவாள்; எனக்கு அவ்வேலை இல்லை. அல்லேலுயா!). சுத்தம் செய்ய வரும்போது, ஒரு அம்மாவைப் போல அவளை விசாரிக்கலாம், கொஞ்சம் அதிகமாகப் பணம் கொடுக்கலாம். சிலர் கல்லூரிப் படிப்புக்கு நன்கொடை அளித்து, இலாப நோக்கமற்ற மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து கூடுதல் உதவியைப் பெறுவதற்கு உதவினார்கள். நாங்கள் அவளுடன் ஜெபிக்கிறோம், ஏனென்றால் அவள் எங்கள் தேவாலய குடும்பத்தைச் சேர்ந்தவள். நேர்மையாக, இந்த அனாதையை அவளது “துன்பத்தில்” “கவனிப்பது” என்பது பெரிய அல்லது சிறியமுறையில் அவளை ஆதரவளிப்பதாகும்.
உலகின் லூயிசாக்களை உங்களைச் சுற்றிலும் தேட, உங்களுக்கு சவால் விடுகிறேன். குடும்பம் அனைத்தும் உயிரியல் சார்ந்ததல்ல என்பதை இதன்மூலம் அறியலாம். சில தாய்மார்கள்,தந்தைகள், சகோதரிகள், சகோதரர்கள், மகள்கள் ,மகன்கள் நமக்குக்கிடைக்கிறார்கள், எந்த ஆவணங்களும் தேவையில்லை.
உதாரணமாக, ட்ராய், இரத்தம் அல்லது தத்தெடுப்பு மூலம் என்னுடன் தொடர்புடையவர் அல்ல. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு மிச்சிகனில் உள்ள கிராண்ட் ரேபிட்ஸில் உள்ள தேவாலய நர்சரிக்கு நாங்கள் எங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றோம். எங்களுக்கு ஆச்சரியமாக, நாங்கள் இருவரும் 1,000 மைல் தொலைவில் உள்ள ஒரே நகரத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒரே விளையாட்டுக் குழுவின் பெரும் ரசிகர்கள்.நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள். டிராயும் நானும் ஒருவரையொருவர் கணங்களில் புரிந்துகொண்டோம். நிறைய விளக்கங்கள் இல்லாமல் ஒருவர் “அதைப் பெற வேண்டும்” என்று நாங்கள் இருவரும் ஏக்கத்துடன் இருந்தோம். பல ஆண்டுகளாக எண்ணற்ற கூட்டங்கள், பிறந்தநாள் விழாக்கள், கனடா தின சுற்றுலாக்கள் மற்றும் கனடிய நன்றி செலுத்தும் கொண்டாட்டங்கள் எங்கள் இரு குடும்பங்களை குடும்பம் போலவே நெருக்கமாக்கிவிட்டன. அவருடைய மனைவி எனக்கு சகோதரி, என் கணவர் அவருக்கு சகோதரர். ட்ராய் சமீபத்தில் தாத்தா ஆனபோது, நான் என்னை “ஆன்ட் லோரிலி” என அறிமுகப்படுத்திக்கொண்டேன்.மேலும் அவரது பெயர் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட சிறுவனை வாங்கினேன். ஏனென்றால் அத்தை கள் அதைத்தான் செய்கிறார்கள்.”தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.
“என தாவீது ராஜா சங்கீதம் 68:6 இல் கூறுகிறார். தேவன் என்னை ட்ராய் குடும்பத்திலும், அவரை என் குடும்பத்திலும் இணைத்தார்.
தேவன் நம் அனைவரையும் டிஎன்ஏவைத் தாண்டிய தேவ குடும்பத்தில் தத்தெடுத்துள்ளார். நாம் உடன்படிக்கையில் தலையசைக்கலாம். ஆம் அது உண்மைதான். ஆனால் நாம் உண்மையில் அதை நம்புகிறோமா? தேவனின் அன்பைப் பொழிந்த பிள்ளைகள் என்பதே நமது அடையாளம் என்பதில் நாம் உண்மையிலேயே நம்பிக்கை வைத்து வாழ்கிறோமா? 1 யோவான் 3:1ல், “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” என யோவான் உற்சாகப்படுத்துகிறார். “நாம் தேவனின் பிள்ளைகள் என அழைக்கப்பட வேண்டும்!”
ஆனால் இந்த விரிசல் நம்மைக்குறித்து குறைவாக உணர செய்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு நான் டிஎன்ஏ பரிசோதனை செய்தபோது, “டெட் கில்மோர் உங்கள் தந்தை” என்ற தகவலைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அறிவியலின் ஆதரவுடன் இருந்த அத்தகவல் உண்மையாகத்தான் இருக்கும் என்று 95% உறுதியாக அறிந்திருந்தேன். ஆனால் என் எலும்புகளில் மூதாதையர் குறியீடு ஆழமாகத் தொகுக்கப்பட்ட அந்த மனிதனுக்கு என் தந்தையாக இருப்பதில் விருப்பமில்லை. அவர் 1967 கோடை காலத்தில் என்னைப் பெற்ற தாயிடமிருந்து ஓடினார்.அன்றிலிருந்து அவர் ஓடிக்கொண்டேயிருக்கிறார்.
ஆனால் அத்தந்தையின் அக்கறையின்மையிலிருந்து, பரிபூரண, அன்பான தந்தையிடம் சுட்டிக்காட்டப்பட்டேன். (ஆனால் உடனடியாக இல்லை. எனது “உண்மையான” தந்தை என்று பெரும்பாலான மக்கள் ஒப்புக் கொள்ளும் மனிதனால் நான் நிராகரிக்கப்பட்டேன். அந்த நிராகரிப்பு முன்பு எனக்கு கடினமாயிருந்தது. அந்த பழைய காயத்தில என்னை உதைத்தது.)
இந்த நேரத்தில் டெட் என்னை விரும்புவார் என்ற கனவிலிருந்து புதிய வளர்ச்சி ஏற்பட்டது. அன்றும், இன்றும், எப்பொழுதும் என்னை தேர்ந்தெடுத்த என் பரம பிதாவின் கரங்களை சார்ந்திருக்கிறேன்.
அவர் உங்கள் பிதாவும் கூட. நீங்கள் தத்தெடுக்கப்பட்டவராக மற்றும் நிராகரிக்கப்பட்டவராக உணர்ந்தாலும், நாம் அவருடைய கைகளில் இருக்கிறோம். “அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.” (2 கொரிந்தியர் 6:18).
அவர் உங்கள் வாழ்க்கையின் துணுக்குகளை எடுத்து, உங்களை முழுமையான, பொன்னான ஷாலோம் ஆக்குகிறார். அதனால் நாம் எதையும் இழக்கல்லை, நாம் முறிக்கப்படவும் இல்லை, நாம் இனிமேல் அனாதைகளும் இல்லை.