கிறிஸ்துவை தீவிரமான அர்ப்பணிப்புடன் பின்பற்றுபவா்கள் கூட நம்பிக்கையற்ற தருணங்களை தங்கள் வாழ்நாளின் ஏதாவது ஒரு காலத்தில் கடந்துசெல்லும் வாய்ப்புள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் தன் வாழ்வில் இப்படிப்பட்ட அனுபவத்தை கண்டுள்ளாா். நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிபாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று என்று 2 கொரிந்தியர் 1:8ல் குறிப்பிட்டுள்ளாா். அது அவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கு உதவி செய்வதாகவும், நன்மைக்கேதுவாகவே இருந்தது என்கிறாா், அதனால் அவர் தன்மீது நம்பிக்கையை வைக்காமல், கா்த்தராகிய ஆண்டவைரச் சார்ந்திருக்க கற்றுக்கொள்கிறேன் என்கிறாா் (வச. 9).
நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நம்பிக்கையைக் கண்டுபிடிப்பது என்ற எண்ணம் சுயமுரண்பாடாகத் இருக்கலாம். ஆனால் நம் அனுதின மன்னா வேத ஆசிரியர், பில் கிரவடர் பின்வரும் பக்கங்களில், வாழ்வில் நாம் சந்திக்கும் நம்பிக்கையற்ற தன்மையானது, ஒரு உன்மையான நம்பிக்கையாக மாறி வரும் புதிய நாட்களில், புதிய வழிகளில் நம்மை நடத்தி நிலையான, மகிழ்ச்சியான வாழ்விற்கு நேராக கொண்டு செல்லும் என சுட்டிக்காட்டுகிறாா்.
மார்ட் டிஹான்
உள்ளடக்கம்
இ ஸ்ரவேல் மக்களின் உள்ளம் பயத்தால் நிரம்பியிருந்தது. அவா்கள் கடக்க முடியாதபடி தடுத்தது செங்கடலின் திரளான தண்ணீா். பலத்து சத்தத்துடன் பாய்ந்து வந்த பாா்வோனின் இரதங்கள் அவா்களைத் துரத்தியது. மிகவும் பயந்த அவர்கள் மோசேயை குற்றம்சாட்டி, “எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்?” (யாத்திராகமம் 14:11) என்று முறையிட்டனா்.
இது அவா்களுடைய நம்பிக்கையற்ற நிலையை தெளிவாக வெளிகாட்டுகிறது. மகிமையான விடுதலையை அனுபவித்த சொற்ப காலத்தில் இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திற்குத் திரும்பவேண்டும் அல்லது செங்கடலில் மூழ்கி மடியவேண்டும் என்ற பயத்தை கொண்டிருந்தனா்.
நாமும் கூட பயம் நிறைந்த காலத்தில் வாழ்கிறோம். நினைத்துப் பார்க்க முடியாத வல்லமையுள்ள இராணுவத்தின் நடுவிலோ அல்லது தற்கொலை பேரழிவில் நாம் சிக்கவில்லை என்றாலும், வாழ்வில் கடினமான சவால்களை சந்திக்க வேண்டியதாயுள்ளது, அதில் நாம் சிக்கிக்கொண்டதைப் போல உணா்வைத் தருகிறது. பல ஆண்டுகளாக தங்கள் வேலைகளில் திறம்பட பணியாற்றிய ஆண்களும் பெண்களும் திடீரென தங்கள் வேலையிழந்து எவ்வித வழியும் இல்லாமல் இருக்கிறார்கள். இளைஞர்கள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டி அனுபவித்த வாய்ப்புகள் இல்லாத எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். அவர்களின் கல்வி ஒரு காபியை தருவித்து வாங்கி குடிக்கும் நேரத்திற்குள் பயனற்றதாகி விடுகிறது. உலகின் பல பகுதிகளில், ஒருபுறம் தீவிரவாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள், மறுபுறம் வறுமை என ஏராளமாக ஆபத்துக்கள் உள்ளது. இயற்கை பேரழிவுகள் சமுதாயத்தையும் முழு பிராந்தியத்தையும் பாதித்து விவரிக்க முடியாத இழப்பை ஏற்படுத்துகின்றன.
நம்பிக்கையற்ற இதுபோன்ற காலத்தில், நம்பிக்கை ஒன்றே தீர்வாக உள்ளது. இதுபோன்ற காலத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் எதையாவது சொல்ல விரும்பும் நாம், அடிக்கடி கூறுவது அற்பமான, வெற்று ஆசைகள் மற்றும் மகிழ்ச்சியான எண்ணங்கள் அல்ல. நமக்கு உண்மையான, அர்த்தமுள்ள, சக்திவாய்ந்த நம்பிக்கை தேவை. அது மெய்யான வாக்குறுதியையும் உண்மையான பொருளுடைய நம்பிக்கை.
இப்படிப்பட்ட போராட்டங்களில் இருந்து யாரும் தப்பவில்லை. நாம் அனைவரும் வாழ்வாதார இழப்பு, உயிருக்கு ஆபத்தான நோய்கள், இயற்கை பேரழிவுகள், உறவுகளில் ஏற்படும் தாக்கத்தை மேற்கொள்ள போராட்டங்கள் போன்ற ஒரே மாதிரியான அச்சுறுத்தல்களை சந்திக்கிறோம். நம்பிக்கையற்ற இது போன்ற காலத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதே இன்று வேண்டியதாயிருக்கிறது. இயேசுவைப் பின்பற்றுபவர்கள் இதை எப்படி எதிா்கொள்ள வேண்டும்? நம்மைக் கவனிப்பவர்களுக்கு நமது விசுவாசத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி இந்த எதிர்வினைகள் என்ன பதிலைச் சொல்லும்? அவர்கள் நம்புவதற்கு ஒரு காரணத்தைக் நம்மில் காண்கிறார்களா?
“நம்பிக்கையின் வெற்றிடம்”
சமீபத்திய பொருளாதார வீழ்ச்சியின் போது, வரவிருக்கும் உலகளாவிய நிதி நெருக்கடியின் மோசமான மதிப்பீடுகளால் உலகெங்கிலும் உள்ள மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை நான் கவனித்தேன். பொருளாதார வல்லுநா்கள் சிக்கலான காலங்களை கணித்த அறிக்கையை நான் கேட்டேன். யாராலும் தீர்க்க முடியாத இந்தப் பிரச்சினைகளால் ஏற்பட்ட தாக்கத்தால் வந்த பாதிப்பை நான் உணர்ந்தேன்.
ஆயினும் நான் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களிடையே இருந்தபோது, எங்கள் பயங்கள், நம்பிக்கையற்ற தன்மை மற்றும் அரசியல் நெருக்கடியின் தாக்கம் ஆகியவைகள் எங்களைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்விலும் பிரதிபலிப்பதை நான் பாா்த்தேன். எங்கள் உரையாடல்களும் மனநிலைகளும், ஒலிபரப்ப பட்ட மற்றும் வலைதள நிதி அறிக்கையில் கூறப்பட்டதைப் போலவே இருந்தது. எங்களுடைய விசுவாசத்தை அவா்கள் ஏற்றுக் கொள்ளாததால், எங்கள் கருத்துக்களும் மனபாங்கும் அதே அச்சத்தையும், கோபம் நிறைந்த தொனியையும் கொண்டிருந்தன. வெளிப்படையாக நம்பிக்கையின் எந்த அறிகுறியும் இல்லை.
வெளிப்படையான இந்த நம்பிக்கையின் வெற்றிடம், பொருளாதார ஸ்திரமின்மை என்ற பிரச்சினைக்குள் மட்டும் அடங்கவில்லை. தனிப்பட்ட இழப்புக்களாலும் கவலையாலும் நமது நம்பிக்கையும் கனவுகளும் ஆபத்தான முடிவுக்கு வரலாம். நமது விசுவாசம் எதிர்காலத்தைப் பற்றிய சந்தேகங்களால் மேற்கொள்ளப் பட்டுவிட்டது என்று நம்மை பார்க்கும் உலகம் நினைக்கலாம்.
அப்படிப்பட்ட தன்னம்பிக்கை இல்லாமை, நம் விசுவாசத்தையும் அது கொண்டுவரும் நம்பிக்கையையும் பற்றி என்ன சொல்கிறது? ஒரு வகையான “கிறிஸ்தவ நாத்திகத்தால்” தேவன் மீதான நமது அடிப்படை நம்பிக்கை நம்மைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?
நாம் கிறிஸ்துவில் நமது விசுவாசத்தை வைத்திருந்தால், ஏன் சில நேரங்களில் நமது பிரச்சினைகள் நம்மை நம்பிக்கையில்லாத நிலைக்கு தள்ளிவிட்டதாக உணர்கிறோம்? நம்பிக்கை தரும் தேவனுடன் உறவு கொண்டுள்ளோம் என்று கூறுகிறோம், ஆனாலும், வாழ்க்கையை நம்பிக்கையற்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்க முனைகிறோம்.
எதிா்மாறான கருத்துக்கள்
பிரெடெரிக் நீட்சே கூறினார், “நம்பிக்கை ஒரு மோசமான தீமை, ஏனெனில் அது மனிதனின் வேதனைகளை நீட்டிக்கிறது.”
பிரெடெரிக் நீட்சேவின் (1844-1900) தத்துவ கோட்பாடுகளுக்கு அவருடைய பங்களிப்பு அதிகம், அதில் அவர் வாழ்க்கை-உறுதிப்படுத்தல் என்ற யோசனையை முன்மொழிந்தார், இவ்வூலக வாழ்க்கையை மட்டும் நம்பி மறுமையின் வாழ்வை தவிா்ப்பதாயிருந்தது. ஆனால் வேதாகமம் இதற்கு நேர்மாறாக, போதிக்கிறது, “ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2 கொரி. 4:18). நீட்சே பான் பல்கலைக்கழகத்தில் இறையியல் படித்துக் கொண்டிருந்தபோது தனது இறை விசுவாசத்தைக் கைவிட்டார்.
எரிக் எரிக்சன், 20 ஆம் நூற்றாண்டின் டேனிஷ்-அமெரிக்க உளவியல் வல்லுனா் மிகவும் வித்தியாசமான பார்வையைக் கொண்டிருந்தார். அவர் கூறினார், “நம்பிக்கை என்பது மிகவும் முன்னோடியானது மற்றும் மிகவும் இன்றியமையாத பரம்பரையாக உயிருடன் இருக்கும் ஒரு நல்லொழுக்கம். நம்பிக்கை பாதிக்கப்பட்டு, நம்பகத்தன்மை பழுதைடைந்த போதும் வாழ்க்கை நீண்டநாள் தொடர வேண்டுமானால், நம்பிக்கை தொடா்ந்து இருக்க வேண்டும்.”
எனவே அது எது? நம்பிக்கை வேதனையை ஊக்குவிக்கும் ஒரு பெரிய தீமையானதா? அல்லது காற்றைப் போல நாம் உயிர் வாழ்வதற்கு அவசியமா?
1 964 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் காலையில், கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் ஒரே ஒரு பரிசை மட்டுமே காண நான் விரும்பினேன், அது ஒரு கித்தார் இசைக்கருவி. அந்த ஆண்டு பிரிட்டிஷ் நாட்டின் பீட்டில்ஸ் இசைக்குழு முன்னணி இசைக் குழுவாக அமெரிக்காவை தன் இசைமழையால் நனைத்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. மற்ற அமெரிக்க இளம் சிறுவர்களைப் போலவே, நானும் அடுத்த சிறந்த கித்தார் இசைக்கருவி கலைஞனாக மாற விரும்பினேன். அந்த கிறிஸ்துமஸ் காலையில், நான் வரவேற்பறைக்கு படிக்கட்டுகளில் ஓடினேன், என் கண்கள் கித்தார் வடிவத்தில் எதையோ தேடின. ஆனால் அப்படி எதுவும் இல்லை. அதற்கு பதிலாக, நான் ஒரு அகராதியைக் கண்டேன்.
நான் சந்தித்த ஏமாற்றத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். எதிர்கால இசை கலைஞராகுவதைக் குறித்த எனது நம்பிக்கைகள், நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட அந்த அகராதியின் சுமையால் நசுக்கப்பட்டன.
ஆனால் என் பெற்றோர் என்னை விட மிகவும் புத்திசாலிகள் என்பதை நிரூபித்தனர். அந்த கிறிஸ்துமஸ் அன்று நடந்த ஏமாற்றத்தை நான் நினைத்துப் பார்க்கையில், ஒரு கித்தார் எனக்கு சிறிதளவே பயனுள்ளதாக இருப்பதை நான் உணர்ந்தேன், ஆனால் நான் அனுதினமும் தொடர்ந்து சொற்களையும் அவற்றின் அர்த்தங்களையும் பயன்படுத்துகிறேன்.
இன்று, நம்பிக்கை என்ற வார்த்தையை விட பல சொற்களுக்கு தெளிவான பொருள் விளக்கம் அவசியமாகத் தேவைப்படுகிறது. உண்மையான நம்பிக்கை என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது மட்டுமல்ல, கிறிஸ்து நமக்கு கொடுக்காத நம்பிக்கை என்ன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எது நம்பிக்கை இல்லை
பெரும்பாலும், நம்பிக்கை விருப்பமான எண்ணங்கள், நேர்மறையான அணுகுமுறை அல்லது நல்லதை நம்புகிற நிலைக்குத் தள்ளப்படுகிறது. இது போன்ற வழிகளில் நம்பிக்கை பயன்படுத்தப்படுவதை நாம் கேட்கிறோம்: “கண்டிப்பாக பொருளாதாரம் விரைவில் திரும்பும் என்று நான் நம்புகிறேன்.” “பிரேசில் அணி உலகக் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது”. “என் டாக்டர் அவர்கள் எல்லா புற்றுநோய்களாலும் பாதிக்கப்படுவாா் என்று நம்புகிறார்.”
இந்த அறிக்கைகள் ஒருவரின் இதயத்தின் கவலைகளைக் காட்டுகின்றன. இந்த வகையான நம்பிக்கை தவறில்லை என்றாலும், அது வேதாகமம் தரும் நம்பிக்கை அல்ல.
ஆசைகள், கனவுகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட நம்பிக்கை சோப்புக் குமிழிகள் போல கண்ணுக்கு அழகாகத் தெரியும் ஆனால்சிறிய தொடுதலில் மறைந்துவிடும். சாலொமோன் ராஜா சொன்னது போல, “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; (நீதிமொழிகள் 13:12).
சாலமோனின் மீதமுள்ள நீதிமொழிகள் நம்பிக்கையை அளிக்கிறது: ” விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்.” என்கிறாா் (நீதிமொழிகள் 13:19).
அதனால்தான் நீட்சே நம்பிக்கை என்ற கருத்துக்கு எதிராக இவ்வளவு வலுவாக எதிா்ச்செயலாற்றுகிறார். கனவுகள் மாயதோற்றத்தை நமக்கு தருகிறது மற்றும் நம் இதயத்தின் விருப்பத்திற்கு முறையிடுகிறது. ஆனால் அவற்றைப் பற்றி உறுதியாக எதுவும் இல்லை, அவை நமக்கு ஏமாற்றத்தையும் இதய வேதனையையும் நிச்சயமாக தரும்.
நம்பிக்கை உண்மையான குணமாக இருக்க வேண்டும். அதற்கு உறுதியான அஸ்திபாரம் இருக்க வேண்டும்.
அப்படியானால் உண்மையான நம்பிக்கை எது?
நம்பிக்கை என்றால் என்ன?
நம்பிக்கை என்பது வெறும் ஆசை எண்ணங்களைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று அகராதி வரையறைகள் கூட காட்டுகின்றன. ஒரு அகராதி இதை “நிறைவேறும் எதிர்பார்ப்பு அல்லது நிறைவேறும் நம்பிக்கை ” என்று வரையறுக்கிறது.
நம்பிக்கை என்பது எதிர்பார்ப்பாகவும் மற்றும் நாம் எதை நம்புகிறோமோ அதற்கு காத்திருப்பதாகவும் இருக்கலாம். இதன் பொருள் என்னவென்றால், தேவனுடைய பிள்ளைக்கு, நாம் கற்றுக்கொண்டதைப் போல தேவன் நல்லவா் மற்றும் உண்மையுள்ளவா் என்ற குணங்கள் எத்தனை வலுவானதோ, எவ்வளவு முக்கியமோ, அவ்வளவாக நம்பிக்கையும் முக்கியமானது. அது நம் வாழ்வில் தேவனுடைய ஆவியானவரின் பிரசன்னத்தைக் வெளிக்காட்ட முடியும்.
பவுல் ரோமருக்கு எழுதிய கடிதத்தில் இந்த நம்பிக்கையைத்தான் பின்பற்றுகிறாா். நம்பிக்கையைப் பற்றி ரோமர் 15-ல் உள்ள விஷயத்தில் பவுலின் பிரதானமாக கருத்து, வேதத்தில் மிக விரிவான அறிக்கைகளில் ஒன்றாக உள்ளது: ” பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக” (வ 13).
பவுல் ரோமருக்கு எழுதிய கடிதத்தில் அதிகமாக இறையியல் கொள்கைகளைப் பற்றி அதிகம் எழுதியுள்ளாா். எனினும் அது போற்றத்தக்கதாகவும் நடைமுறைக்கு ஏற்றதாயுமுள்ளது. பவுல், அவசர ஊழியத்தினிமித்தமும் அவர்களைச் நேரில் சென்று சந்திக்க முடியாத காரணத்தினாலும் ரோமாபுரியிலிருக்கும் கிறிஸ்தவர்களு இந்த கடிதத்தை எழுதினார்.
இந்த உன்னதமான ஜெபம், நம்பிக்கைக்கு ஏன் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்பதற்கும் மற்றும் இது மிக முக்கியமாயிருப்பதற்கு 2 முக்கியமான காரணங்களையும் வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, தேவன் “நம்பிக்கையின் தேவன்.” நம் மகிழ்ச்சியான எதிர்பார்ப்புக்கு அஸ்திபாரம் இல்லாமல் இல்லை. நம்பிக்கையின் அடித்தளம் ஒரு கோட்பாடோ அல்லது தத்துவமோ அல்ல; அது ஒரு ஆள்தத்துவமுடைய தேவன். பவுல், நம் நம்பிக்கை உண்மையானது, தேவனுக்குள் வேரூன்றிய ஒரு சத்தியம், அதை தழுவ வேண்டும் என்று விரும்புகிறார், இது நம் சொந்த பலத்தில் சம்பாதிக்க வேண்டிய ஒன்றல்ல.
இரண்டாவதாக, நாம் ‘நம்பிக்கையில் பெருக வேண்டும்’ என்று பவுல் விரும்புகிறார். தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு, பரிசுத்த ஆவியையும், அவரிடமிருந்து வரும் வல்லமையான நம்பிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இயேசுவைப் பின்பற்றுபவரின் ஒரு முக்கிய ஆவிக்குரிய குணமாக நம்பிக்கை இருக்க வேண்டும், காரணம் தேவன் நம் நம்பிக்கையின் அஸ்திவாரமாக இருக்கிறார், ஏனென்றால் அவர் தம்முடைய பரிசுத்த ஆவியை நமக்குத் தந்திருக்கிறார். உண்மையான நம்பிக்கை என்பது விசுவாசிகளையும் கிறிஸ்துவை அறியாதவர்களையும் வேறுபடுத்தும் மிகப்பெரிய பண்புகளில் ஒன்றாகும். பவுல் எபேசிய கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பழைய மற்றும் புதிய வாழ்வை குறித்து, முன்னே தூரமாயும், அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள் என எழுதுகிறாா் (எபே.2 : 12).
கடைசி சொற்றொடர் முக்கியமானது. அவர்கள் “இவ்வுலகத்தில் தேவனற்றவர்களாய் இருந்ததால்” அவர்களுக்கு “எந்த நம்பிக்கையும்” இல்லை. எவர்கள் தேவன் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள் நல்நம்பிக்கை உடையவர்கள்; அது நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில் எல்லா வித்தியாசத்தையும் உண்டாக்குகிறது. அந்த நம்பிக்கையின் விழிப்புணர்வில் வாழ்வதே நமக்கு இருக்கும் சவால்.
ஒரு அறிஞர் கூறுகிறார், இயேசுவை அறியாதவர்களுக்கு நம்பிக்கை என்பது ஒரு வினைச்சொல் மட்டுமே. ஆனால் கிறிஸ்தவனுக்கு நம்பிக்கை என்பது ஒரு பெயர்ச்சொல் கூட. இது ஒரு முக்கியமான வேறுபாட்டை தருகிறது. நம்பிக்கை என்பது வெறுமனே பற்களைக் கடித்துக்கொண்டு, விரல்களைக் வைத்து நாம் செய்யும் காரியமல்ல. நம்பிக்கை – மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு – நம்மிடம் இருக்கும் பண்பு. நாம் தேவனாகிய கா்த்தரை அறிந்திருப்பதால் நம்பிக்கை உடையவா்களாயிருக்கிறோம், அவரே அதன் ஆதாரமும் காரணமாகவும் இருக்கிறாாா்.
உண்மையான நம்பிக்கை என்பது எல்லாம் நன்றாக நடக்கும் என்று “நம்பி” கல்லறை மத்தியில் விசில் அடித்து உலாவுவதற்குச் சமமானதல்ல. உண்மையான நம்பிக்கை ஆற்றல்மிக்கது மற்றும் வல்லைமயுள்ளது, ஏனென்றால் அது வாழ்க்கையின் உண்மையானச் சூழ்நிலைகளை யதார்த்தமாக கருதி, பின்னர் மிகுந்த விசுவாசத்துடன் தேவனின் வாக்குத்ததங்களையும் குணாதிசயங்கைளயும் சாா்ந்து வாழ்கிறது.
உண்மையான நம்பிக்கை எப்படி இருக்கும்?
உண்மையான நம்பிக்கையின் இயல்பைக் குறித்து ஏன் இவ்வளவு குழப்பம்? ஒரு காரணம், நம்பிக்கையானது, விசுவாசம் மற்றும் அன்பைப் போலவே, வெவ்வேறு சூழ்நிலைகளில் வித்தியாசமாகத் காணப்படுகிறது.
1 கொரிந்தியர் 13:13ல், அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார், ” இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.” மகிழ்ச்சியான வாழ்க்கையை தாங்கும் இந்த மூன்று பெரிய தூண்களும் இன்றியமையாதவைகள். ஆனால் இவை மூன்றும் மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்கின்றன.
செழிப்பான காலங்களில், விசுவாசம், தேவனை சாா்ந்து வாழ்வதை நன்றியுள்ள மனத்தாழ்மையுடன் மற்றும் புன்னகையுடன் வெளிப்படுத்த முடியும். இழப்பு நேரிட்ட காலங்களில், நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கிப்பதில்லை (1 தெசலோனிக்கேயர் 4:13). விசுவாசம் செயல்படும்போது, மிகுந்த முயற்சி மற்றும் அவசரத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்த முடியும். ஓய்வு நேரத்தில், “நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” (சங்கீதம் 46:10) என்று சொல்லுகிறவரின் பிரசனத்தில் அது ஓய்வெடுக்க முடியும்.
அன்பும் சூழ்நிலைக்கேற்றவாறு அனுசரித்துக் கொள்ளக் கூடியதுதான். மற்றவர்களில் இருக்கும் நற்குணங்களை காண, சில நேரங்களில் அது மென்மையாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். மற்ற நேரங்களில், அது உறுதியானதாக இருக்க வேண்டும் – கடினமாகவும் இருக்க வேண்டும்.
அதேபோல், பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நம்பிக்கையும் மாற முடியும். இது தேவனின் நல்லவா் மற்றும் உண்மையுள்ளவா் என்ற குணாதிசயத்தை நம்பியிருப்பதால், வாழ்க்கையின் வெவ்வேறு அனுபவங்களுக்கு ஏற்றபடி முழுமையாக பதிலளிக்க அதற்கு பல முகங்கள் உள்ளன.
நம்பிக்கை தைரியமானது என்று பவுல் குறிப்பிட்டுள்ளாா். “நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்” (2 கொரிந்தியர் 3:12). நம்பிக்கை பொறுமையானது என்றும் அவர் சொல்லியிருக்கிறாா். “உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,” . . . (1 தெசலோனிக்கேயர் 1:2-3).
நம்பிக்கை எதிர்பார்ப்பாயிருக்கிறது: “நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (தீத்து 2:13-14).
எபிரெயர் நிருபத்தை எழுதியவா் நம்பிக்கையை ஸ்திரத்தன்மையின் ஆதாரமாகக் கருதினார்: “அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது” (எபிரெயர் 6:19). சீஷனாகிய யோவான் கூறும்போது, மெய்யான நம்பிக்கை உண்மையிலேயே ஒரு சுத்திகரிப்பு விளைவைக் கொண்டிருக்கிறது என்கிறாா். “அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிற எவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” (1 யோவான் 3:3).
“முக்காடு” என்பது எருசலேமிலுள்ள ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலத்தையும் மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் திரைச்சீலையைக் குறிக்கிறது. பிரதான ஆசாரியர் மட்டுமே பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய முடியும். பாவ நிவர்த்தி நாளில் மட்டுமே பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பான். திரைக்குள் சுதந்திரமாக நுழையக்கூடிய இயேசுவே (பாவமில்லாத ஒரே பிரதான ஆசாரியர்) நமது “நம்பிக்கை”.
நம்பிக்கை விசேஷமாக ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளிதாக மாறக்கூடியது. கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் நம்பிக்கையுடன் இந்த உலகை சந்திக்க முடியும். மெய்யான நம்பிக்கை, நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சமாளிக்க நம்மை பலப்படுத்தும். ஏனென்றால், அந்த சவால்களை தேவனுடைய குணாதிசயத்தின் வழியாக கண்டு சந்திக்கிறோம்.
எனவே அத்தகைய திறன்கொண்ட சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் நம்பிக்கையை நாம் எவ்வாறு வளர்ப்பது? அது எங்கிருந்து வருகிறது?
நம்முடைய நம்பிக்கையின் ஆதாரம் தேவனாகிய கா்த்தரே என்பதை சங்கீதக்காரன் அறிந்திருந்தார். அவர் இவ்வாறு கூறுகிறாா், “இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை” (சங். 39:7).
அந்த நம்பிக்கையை கர்த்தர் எவ்வாறு நம் வாழ்வில் கொண்டுவருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள, பவுல் எழுதிய ரோமர் 15:4ம் வசனத்தை ஒருமுறை வாசிக்கலாம். “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.”
இங்கே பவுல் வேதவசனங்களின் மதிப்பை வலியுறுத்தினார் (“பூர்வ காலங்களில் எழுதப்பட்டவைகளே”), அது “நம்முடைய போதனைக்காகவே” எழுதப்பட்டது என்று கூறுகிறார். ஆனால் அது நமக்கு எப்படி நம்பிக்கையைத் தருகிறது?
“விடாமுயற்சி”
பவுல் விடாமுயற்சிக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான உறவைக் குறித்து எழுதும்போது, ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். என்கிறாா் (ரோமர் 15:1-3). பலவீனருடைய பலவீனங்களைத் தாங்குவது தேவனின் குணாதிசயம், அது நம்மில் இருப்பதை நிரூபிக்கும் ஒரு வழி என்பதை கிறிஸ்து தாமே மாதிரியாக காட்டியதை பவுல் நினைவூட்டுகிறாா் (ரோமர் 15:3, 5-7).
வரலாறு அத்தகைய விடாமுயற்சியின் தகுதியை காட்டுகிறது. 1700ம் ஆண்டுகளின் பிற்பகுதியில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்த அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான ஒரு சிறிய ஆனால் வளர்ந்து வரும் இயக்கத்திற்குகாக குரல் கொடுக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒரு ஆள் தேவைப்பட்டது. அடிமை ஒழிப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் என்ற இளம் நாடாளுமன்ற உறுப்பினரை முன்நிறுத்தி அவரை ஆதரித்தனா். அவருடைய கிறிஸ்தவ விசுவாசம் அநீதியைத் நீக்குவதற்கும் எல்லாருக்கும் சுயாதீனத்தைத் கொடுப்பதற்கும் காரணமாக இருந்து அதை நிரூபித்தது.
ஆனால் அடிமைத்தன ஒழிப்பு எளிதில் வரவில்லை. அடிமை ஒழிப்புவாதிகளின் சிறிய குழு வெல்ல முடியாத முரண்பாடுகளை எதிர்கொண்டதைப் பாா்க்கிறோம். மீண்டும் மீண்டும், வில்பர்ஃபோர்ஸ் அடிமை வர்த்தகத்தை ஒழிப்பதற்கான மசோதாக்களை அறிமுகப்படுத்தினார், ஆனால் அந்த மசோதாக்கள் படுதோல்வி அடைந்தன.
காலப்போக்கில், வில்பர்ஃபோர்ஸ் மற்றும் அவரது வளர்ந்து வரும் ஒழிப்புவாதிகளின் குழு தொடர்ந்து போராடி எதிர் அணியை சலிப்படையச் செய்தது. இதனால் அவரது செல்வத்தின் பெரும்பகுதியை இழந்தாா். மற்றும் அவரது உடல் ஆரோக்கியம் பலவீனமடைந்தது ஆனாலும் அவர் தளறாமல் விடாப்பிடியாக முயன்றார்.
இறுதியாக, 1807 மார்ச் 25ம் நாள், வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் மற்றும் அவரது உறுதியான கூட்டாளிகளின் 20 வருட விடாமுயற்சிக்குப் பிறகு, அடிமை வர்த்தக சட்டத்திற்கு அரசர் அரச ஒப்புதலை வழங்கினார்.
வில்பர்ஃபோர்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு தேவைமிக்க இந்த இலக்கை அடைய எவ்வாறு விடாமுயற்சி உதவியது என்பதைக் செய்து காட்டியிருக்கிறார்கள். விடாமுயற்சியின் அத்தகைய ஒரு குறிக்கோளை அப்போஸ்தலன் பவுல் நம்பிக்கை என்று கண்டார்.
(ரோமர் 15:1–4) பவுல் இவ்வாறு எழுதியுள்ளார்: “அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார். தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும் படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. ”
ஆனால் பவுல் நம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் இடையிலான மற்றொரு உறவையும் கண்டார். ரோமர்களுக்கு எழுதிய அதே கடிதத்தில் வேறொரு இடத்தில், அவர் எழுதினார்:
அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோமர் 5:3–5).
ரோமர் 15:4 உடன் சேர்ந்து பாா்க்கும்போது, இது ஒரு முக்கியமான சத்தியத்தை நிலைநாட்டுகிறது. ஒரு தகுதியான இலக்கை அடைய நம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் செயல்படுகிறோம். அதே நேரத்தில், நமது விடாமுயற்சி நம்பிக்கையை உருவாக்குகிறது. எனவே, நம்பிக்கை என்பது நமது விடாமுயற்சியை பெற்றுக்கொள்வதாயிருக்கிறது, நாம் தேவனைச் சாா்ந்து அமா்ந்திருக்கும்போது அது துணை உற்பத்திப் பொருளாகவும் இருக்கிறது.
பவுலின் வார்த்தைகளின் மூலம் நாம் கற்றுக்கொள்ளவது என்னவெனில், நம்பிக்கையை வளா்க்கவும், முழுமையாக புரிந்து கொள்ளவும் வாழ்வில் வரும் சோதனை அவசியமாயிருக்கிறது. ஏனென்றால் சோதனைகள் விடாமுயற்சியின் அவசியத்தை கொண்டுவருகின்றன.
அனைத்து காரியங்களும் நன்றாக நடைபெறும்போது, தேவனுடைய கிரியைகளை காண நமக்கு சில வாய்ப்புகளே உள்ளன. ஆனால் போராட்ட காலங்களில், விடாமுயற்சி தேவனுடைய அன்பை புதிய வழிகளில் அனுபவிக்க வழி நடத்துகிறது. அதன் விளைவாக கிடைக்கும் நம்பிக்கை, நாம் சாதாரன காலத்தில் இலகுவாக, அதிக பிரயாசமின்றி பெற்றிருக்கக் கூடிய எதையும் விட ஆழமானதாகவும் பெரியதாகவும் இருக்கும், விடாமுயற்சியின் மூலம் நாம் அனுபவிப்பது:
நம்பிக்கை மற்றும் தேவனின் கிருபை. விடாமுயற்சியின் மூலமாக நமக்கு கிடைக்கும் அனுபவம் தரும் மிகப்பெரிய பரிசு மிக அடிப்படையானது – நம்மால் செய்ய முடியாத காரியங்களை, செய்து முடிக்க தேவன் நமக்கு போதுமானவராக இருக்கிறாா். நம்முடைய இயலாமையில் தேவன் தம்முடைய அளவில்லா கிருபையை ஈந்து பதிலளிக்கிறார். நமக்கு வரும் போராட்டம் மற்றும் துன்பத்தைவிட அவருடைய கிருபை பெரியது என்று பவுல் கண்டு கொண்டார். தன் பலவீனம் தன்னைவிட்டு நீங்கும்படி அவர் மூன்று முறை தேவனிடம் விண்ணப்பம் செய்தாா். 2 கொரிந்தியர் 12:9-ல் தேவன் நமக்காக அளித்த பதிலை அவர் பதிவு செய்கிறார்: “அதற்குத் தேவன், என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்” அதற்கு பவுல்,” ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்” என்றாா்.
நம்பிக்கையும் தேவனின் பாதுகாப்பும். வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகள் நம் இதயத்தை பயங்கரத்தால் நிரப்பக்கூடும். ஆனால் நாம் விசுவாசத்தினால் பாதுகாக்கப்படும்போது, இருண்ட காலங்களில் கூட தேவனே நம் பாதுகாப்பு என்பதை அறிந்துகொள்வோம். கிறிஸ்துவில் நமக்கு இருக்கும் பாதுகாப்பு, நமக்கு நம்பிக்கையை அவருடைய வல்லமையின் மூலம் தருகிறது, ஏனென்றால் “கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது” (1 பேதுரு 1:5).
தேவனாகிய கர்த்தரின் வல்லமை உடனே கிடைக்கும் நம்பிக்கையின் ஆதாரமாக இருக்கிறது, அது தேவனை ஆராதிக்க சங்கீதக்காரனை நடத்துகிறது:
“நானோ உம்முடைய வல்லமையைப் பாடி,
காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்;
எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர்
எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்” (சங்கீதம் 59:16).
அந்த அறிவைக் கொண்டு, நாம் பயம் அல்லது நம்பிக்கையற்ற இருதயத்துடன் வாழ்க்கையை அணுக வேண்டியதில்லை. நம்பிக்கையோடுள்ள எதிர்பார்ப்புடன் அனுதின வாழ்வில் ஈடுபடுலாம்.
நம்பிக்கையும் தேவனின் ஈவும்.எபிரெயர் நிருபத்தின் ஆசிரியா் கூறகிறாா், இயேசு நமது பலவீனங்களையும் சோதனைகளையும் புரிந்துகொள்வதால், “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (4:16).
கிருபை. பாதுகாப்பு. ஈவு. இவைகளே நம்பிக்கையின் ஆதாரங்களாக இருப்பவை, நம்மை அழிக்க அச்சுறுத்தும் நிலைமைகளுக்கு மத்தியில் அவற்றை அனுபவிக்கும் வரை நாம் முழுமையாக புரிந்து கொள்ளாத அவை ஒன்றாக இருக்கின்றன. ஆயினும் திரும்பிப் பார்க்கும்போது, அப்போஸ்தலனாகிய பவுலுடன் நாம், “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடை கிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை” என்று சொல்லலாம் (2 கொரி 4:8-9).
உண்மை வாழ்வில் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் இருதய வேதனைகள், கொந்தளிப்புகள், சவால்கள் மற்றும் போராட்டங்களிலிருந்து தப்பவில்லை என்பதை பவுல் வெளிப்படுத்தியது நேர்மையான நினைவூட்டலாக இருக்கிறது. நாம் அநேக ஆபத்துகளையும், பாடுகளையும், கண்ணிகளையும் சந்திப்போம் அனுபவிப்போம் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், தேவன் இல்லாதவர்களைப் போல் அல்ல, நம்பிக்கை இல்லாதவர்களைப் போலவும் இருக்க மாட்டோம். நம்முடைய விசுவாசத்தின் காரணமாக, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் உண்மையான நம்பிக்கையுள்ள மக்கள்.
வேதத்தின் வரலாற்று கதைகளில் நம்பிக்கையைக் கண்டறிதல்
நமக்காக காரியங்களைச் செய்கிறவா் கா்த்தராகிய தேவன், காரணம் அது அவருடைய குணாதிசயம் மற்றும் வல்லமை, இந்த செயல்பாட்டை நம்மைப் போல தேவனின் பிள்ளைகள் வாழ்வில் முழுமையாகவும் மீண்டும் மீண்டும் நடைபெறுவது நிரூபிக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். கடினமான காலங்களில்கூட தேவனை நம்பலாம் என்பதை அவர்கள் கற்றுக் கொண்டார்கள். அவர்களின் அனுபவங்களில் இருந்து நாமும் கற்றுக்கொள்ளலாம். இதைத்தான் புதிய ஏற்பாட்டில் யாக்கோபு தனது நிருபத்தின் மூலம் நம்மை ஊக்குவிக்கிறார். “என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.” (யாக்கோபு 5:10).
ஒரு இளம் வயது மேய்ப்பனாக, தேவனாகிய கா்த்தரையும், இஸ்ரவேலின் படைகளுக்கும் சவால் விட்டபோது ராட்சத கோலியாத்தை எதிா்த்து போர்க்களத்தில் தோன்றினான் தாவீது. 1 சாமுவேல் 17ல் தாவீது எவ்வாறு பெலிஸ்திய வீரனை எதிர்கொள்ள முன்வந்தார் என்பதை சொல்கிறது, என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தா் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான் (வச. 34-37). கடந்த கால சண்டைகளில் தேவனாகிய கா்த்தா் உண்மையுள்ளவராக இருந்து பாதுகாத்த அனுபவத்தின் காரணமாக, தாவீதுக்கு ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருந்தது.
ஒரு இளம் வயது மேய்ப்பனாக, தேவனாகிய கா்த்தரையும், இஸ்ரவேலின் படைகளுக்கும் சவால் விட்டபோது ராட்சத கோலியாத்தை எதிா்த்து போர்க்களத்தில் தோன்றினான் தாவீது. 1 சாமுவேல் 17ல் தாவீது எவ்வாறு பெலிஸ்திய வீரனை எதிர்கொள்ள முன்வந்தார் என்பதை சொல்கிறது, என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தா் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான் (வச. 34-37). கடந்த கால சண்டைகளில் தேவனாகிய கா்த்தா் உண்மையுள்ளவராக இருந்து பாதுகாத்த அனுபவத்தின் காரணமாக, தாவீதுக்கு ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பு இருந்தது.
தானியேல் 3ம் அதிகாரத்தில், பாபிலோனில் மூன்று இளம் எபிரேய வாலிப அடிமைகளை ஒரு பெரிய விக்கிரகத்தின் முன் குனிந்து வணங்குவதினால் அவா்களுடைய தேவனை அவமதிக்க கட்டளை பிறந்தது. தானியேல் 1-ல் அவர்களுடைய நம்பிக்கைகளுக்கு சவால்விடப்பட்ட போது, தானியேல் 2-ல் அவர்களுடைய உயிர்கள் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, தேவனுடைய வல்லமை மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசத்தில் உறுதியாக நின்றார்கள். தேவனுடனான கடந்த கால அனுபவங்கள் இந்த சவாலிலும் அவரையே நம்புவதற்கு அவர்களை ஆயத்தப்படுத்தின.
இந்தக் கதைகளை நாம் அடிக்கடி கேட்கிறோம், படிக்கிறோம், ஆனால் அவற்றின் தாக்கம் நம்மைவிட்ட போய்விடுகிறது. ஆனால் இவா்கள் சிறப்பு திறன் கொண்ட ஆதிகால வல்ல கதாநாயகா்கள் அல்ல. அவர்கள் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் சாதாரண மக்கள், இதைப் போலவே நாமும் பல வழிகளில் தொடர்ந்து போராடுகிறோம்.
ஆனால் அவர்கள் அந்த சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொண்டனர், காரணம், அவர்களின் கடந்த காலத்தில் தேவனிடமிருந்து பெற்ற அனுபவங்கள், அவர் அவர்களின் தைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரா் என்று உறுதிப்படுத்தியிருந்தது. தேவன் தம்மை உண்மையுள்ளவர் என்று நிரூபித்ததால் அவர்களின் பயம் நம்பிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் மாறியது.
வேதவசனங்கள் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றன, ஏனென்றால் வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள தேவனாகிய கா்த்தா் அவர்களின் தேவன் மட்டுமல்ல, அவர் நம் தேவன் ! அவர் மாறவேவில்லை. அவர் இன்னும் நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர் (எபேசியர் 3:20).
வேதாகமத்தில் தன் மக்களுக்கு உதவ தேவனாகிய கா்த்தாின் வல்லமையை செயல்பட்டதை பற்றி கூறப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சவால்களில் நாமும் அவரை நம்பலாம் என்ற உறுதியான நம்பிக்கையை நமக்கு இது தருகிறது.
நாம் முன்பு குறிப்பிட்டது போல, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களை அவரை அறியாதவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டிய பண்புகளில் ஒன்று, நாம் நம்பிக்கையுள்ள மக்களாக இருக்க வேண்டும் என்பதாகும்.
இது உண்மையில், கிறிஸ்துவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான நமது வாழ்வின் மையப்பணியாக உள்ளது. நாங்கள் வெறுமனே ஒரு மாற்று மதத்தையோ, உலகக் கண்ணோட்டத்தையோ அல்லது தத்துவத்தையோ வழங்கவில்லை. நம்பிக்கையற்ற, அதற்காக ஏங்கும் உலகிற்கு நாம் நம்பிக்கையை அளிக்க முன்வருகிறோம்.
அடிக்கடி இது மறக்கப்படுகிறது. நமது குறிக்கோள் தேவன் தரும் மன்னிப்பின் செய்தியை மற்றும் அவருடன் ஒரு உறவை ஏற்படுதும் வழியை அறிவிப்பது மட்டுமல்ல, தேவனுடன் உள்ள உறவை உருவாக்கும் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்வதும் ஆகும்.
பேதுரு தனது நிருபத்தில், வேதத்தின் எந்தப் பகுதியும்விட சிறப்பாக வார்த்தைகளில் குறிப்பட்டுள்ளாா்: “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15).
இந்த வசனம் பல முறை கற்பிக்கப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். பேதுருவின் நிருபத்தை விளக்கும் பல இறையில் விளக்கவுரைகளை நான் படித்திருக்கிறேன். நானே இந்த வசனங்களின் அடிப்படையில் அருளுரை ஆற்றியிருக்கிறேன். 1 பேதுரு 3:15ன் வசனத்தின்படி பெரும்பான்மையானவா்கள், என்னையும் சோ்த்து அதனுடைய உண்மையான சத்தியத்தை கடைபிடிக்க தவறியிருக்கிறோம்.
இந்த வேத பகுதி இயேசுவின் நற்செய்தியால் மற்றவர்களை சந்திக்க ஒரு சவாலாக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகிறது. அது நிச்சயமாக வசனத்தின் ஒரு விளக்கம் என்றாலும், அதன் முதன்மை நோக்கம் அதுவல்ல.
இந்த வசனம் பொதுவாக இந்த வழியில் பிரசங்கிக்கப்படுகிறது: “விசுவாசிகளாக, நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள் நடத்த வேண்டும். சிலுவையின் செய்தியை தெளிவாக விளக்கக்கூடிய வேதத்தின் பிரதான பகுதிகளை கண்டு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நாம் செய்ய வேண்டும், ஏனென்றால் பேதுரு நம்மை எப்போதும் உத்தரவுசொல்ல ஆயத்தமாக இருக்கும்படி கட்டளையிடுகிறார்.
அது தவறல்ல. சுவிசேஷத்தின் நற்செய்தியை உலகின் தொலைதூர மூலைகளுக்கு எடுத்துச் செல்ல கிறிஸ்துவால் நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் அன்பையும் மன்னிப்பின் செய்தியையும் நாம் பகிர்ந்து கொள்ளவேண்டும். ஆனால் 1 பேதுரு 3:15 இன் நோக்கம் இந்த பார்வையுடன் முழுமையடையாது.
ஒரு சுவிசேஷ வாய்ப்பில் ஒரு கிரியா ஊக்கியாக ஒரு தூண்டுதல் இருக்கிறது என்று பேதுரு நமக்குப் போதிக்கிறார். இந்த எதிா்கொள்ளுதலை இயக்கும் ஒன்று உள்ளது. அது என்ன? நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை, நம் விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பைத் பயன்படுத்ததுவதைத் தூண்டுவதற்கு இதை தவிர சிறந்தது எதுவும் இல்லை.
அனைத்தையும் சோ்த்துப் பார்க்கும்போது, நல்ல விளைவைத் தரும்படி வழிநடத்தும் ஒரு முன்னேற்றத்தை நாம் காண்கிறோம், அதற்கு தேவ அறிவைப் பெறுவது மிக அவசியமாயிருக்கிறது. பேதுரு என்ன சொல்கிறாா் என்றால்:
• நாம் நம்பிக்கையுடைய மக்களாக வாழ வேண்டும்;
• நம்பிக்கை என்பது நம் வாழ்க்கையின் தனித்துவ அடையாளமாய் இருக்க வேண்டும்;
• நம்பிக்கையற்று வாழும் மக்கள், நம்பிக்கையற்ற உலகத்தை சகித்துக் கொண்டிருப்பவர்கள், நம்பிக்கை நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றத்தைக் காண்பார்கள்;
• அவர்கள், நமது நம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்று நம்மிடம் கேட்பார்கள்;
• பின்னர், நாம் தகுந்த உத்தரவு கொடுக்க தயாராக இருக்க முடியும்.
அவர்கள் நம் நம்பிக்கையைக் காண்பார்கள், அதையே விரும்புவார்கள். நம் நம்பிக்கைக்கு பின் உள்ள காரணத்தைப் பற்றி கேட்பார்கள். அவர்களுக்கு பதில் அளிக்க நாம் தயாராக இருப்போம். நம் வாழ்வில் இந்த உண்மையான, உயிருள்ள, உறுதியான நம்பிக்கையால் வரும் தனித்துவ வேறுபாடு வெளிப்படுத்தப்படாவிடில், யாரும் ஒருவரும் ஒருபோதும் கேட்கமாட்டாா்கள்.
நாம் அனைத்து வசனங்களையும், யுக்திகளையும் கற்றுக் கொள்ள முடியும். சுவிசேஷ ஊழியம் செய்யும் வழிமுறைகளிலும், விளக்க உரைகளைப் பற்றி செய்திகளிலும் பயிற்சி பெறலாம். சத்தியத்தை தேடும் மக்களின் வாழ்க்கை மீது நாம் கரிசனை மற்றும் தாகம் கொண்டிருக்கலாம். ஆனால் நம்பிக்கை யற்ற உலகில் நம்பிக்கைக்கான சான்றுகள் நம்மிடம் இல்லாமல், நம்பிக்கையற்ற மக்களுக்கு, அவர்கள் அறிந்திராத வித்தியாசமான ஒன்று நம்மிடம் இருப்பதாக காட்ட முடியாது.
கிறிஸ்துவில், நமக்கு உண்மையான நம்பிக்கை இருக்கிறது, உண்மையான வாழ்வில் காணத் தவறும் கபடற்ற மனப்பான்மை அல்ல. இந்த விவரிக்க முடியாத நம்பிக்கை நம் வாழ்வில் உண்டுபண்ணும் வித்தியாசத்தை குறித்து, முதலில், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நூதனமானதாக நினைக்கலாம். ஆனால் நம்பிக்கையின்றி தவித்து வாடும் உலகில் வாழும் ஆண்களும் பெண்களும், உயிர்த்தெழுதலினால் கிடைக்கும் நம்பிக்கையினால் கிறிஸ்துவிடமும் ஈர்க்கப்படுவது சாத்தியமாகிறது. நம்பிக்கையும் உயிர்த்தெழுதலும் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளன.
பேதுரு எழுதிய முதலாம் நிருபத்தில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் முக்கியத்துவத்தை குறிப்பிடபட்டுள்ளதைக் காணலாம்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்” (1 பேதுரு 1:3).
இயேசு கிறிஸ்து நம் சார்பாக மரணத்தை வென்றார் என்ற இன்றியமையாத சத்தியத்தியத்திலிருந்து நம் நம்பிக்கை பெருக்கெடுத்து வருகிறது என்பதை இங்கே நாம் கற்றுக்கொள்கிறோம்.
பரிசுத்த வேதாகமம் நமது இறுதி எதிரியைப் பற்றி இவ்வாறு கூறுகிறது:
• நாம் செய்த தவறுகளின் இன்றியமையாத விளைவே மரணம். “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23).
• வாழ்க்கையின் மன வேதனைகள் “மரண இருளின் பள்ளத்தாக்கு” போன்றுள்ளது (சங்கீதம் 23:4).
• மரண வேதனைகள் நமது பயங்களுக்கு ஒரு முக்கிய காரணம். “என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது” (சங். 55:4).
• மரணம் என்பது தவிர்க்க முடியாத நியமனம். ” அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே …” (எபிரெயர் 9:27).
மரணம் நமது உண்மையான, பரம எதிரி – அதை நாம் சொந்தமாக வெல்ல முடியாது. ஆகையால், கிறிஸ்து நம்மை மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்கவும், நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கவும் வந்தார்.
கிறிஸ்து சம்பாதித்த, மரணத்தின் மீதான இந்த வெற்றியினால் கிடைத்த நம்பிக்கை மிகவும் ஆழமாக இருந்ததால், மத்தேயு தனது முதல் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு ஏசாயாவின் பூர்வ தீர்க்கதரிசனத்தை நினைவுகூர உற்சாகப்படுத்துகிறார்:
“இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்;
மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது” (மத்தேயு 4:16).
இருளிலிருந்து வெளிச்சத்திற்கு. மரணத்திலிருந்து ஜீவனுக்கு. கிறிஸ்து, தனது மரணத்தை வெல்லும் பணியில், மரணத்தின் பயத்தையும் அதன் கொடூரத்தையும் எடுத்து அவற்றை நம்பிக்கையாக மாற்றினார்.
கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் நிறைவேறியதின் தாக்கத்தை கவனியுங்கள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வெற்றியின் ஆழத்தையும் விரிவையும் விளக்குவதன் மூலம் பவுல் இதை 1 கொரிந்தியர் 15-ல் விரிவாக எழுதியுள்ளாா்.
“பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1 கொரி 15:26, 54-57).
இந்த மகிழ்ச்சியான, நம்பிக்கையான எதிர்பார்ப்பு கிறிஸ்துவின் வெற்றியில் வேரூன்றியுள்ளது. கிறிஸ்தவ விசுவாசிகள் நம்பிக்கையுடன் வாழவும் மரிக்கவும் முடியும், ஏனென்றால் நமது பரம எதிரியை ஆண்டவர் ஜெயித்து விட்டார். கிறிஸ்து, மரணத்தின் கூரை முறித்துவிட்டா் எனவே நாம் மரித்த பிறகு என்ன நடக்குமோ என்ற பயப்பட வேண்டியதில்லை. இப்போது, நாம் மரணத்தை உண்மையான நம்பிக்கையுடன் சந்திக்கலாம்- விருப்பமான, அலங்கரிப்பான “நம்பிக்கையாக” அல்ல.
தனிநபா் உயிர்த்தெழுதலின் கண்ணோட்டம்.
உயிர்த்தெழுதல் தரும் நம்பிக்கை இரண்டு முக்கியமான வழிகளில் நம் கண்ணோட்டத்தை, வியக்கத்தக்க வகையில் மாற்றுகிறது.
முதலாவதாக, உயிர்த்தெழுதல் நம்பிக்கை வாழ்வையும் மரணத்தையும் நாம் எப்படிக் பாா்க்கிறோம் என்பதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இதன் உண்மைத் தன்மை நமக்கு மிகவும் பிரியமான ஒருவரை இழந்த துக்கத்தில் தவிக்கும்போது வெளிப்படும். தேவனுடைய பிள்ளை துக்கப்படத் தேவையில்லை என்று கருதுவதற்கு அப்போஸ்தலன் அவ்வளவு எளிதாக அதை எடுத்துக்கொள்ளவோ அல்லது புத்தியற்றவராகவோ இல்லை. இழப்பு இழப்புதான்! எப்போதும் இருக்கும் மரணம் என்ற எதிரி, அதனால் நம் உறவுகள் நம்மிடமிருந்து பிடுங்கப்படும்போது நாம் வேதனைப்படுகிறோம். ஆனால் உள்ளத்தின் வலி மற்றும் இழப்பின் மத்தியில், கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நமக்கு ஒரு நன்மை இருக்கிறது என்பதை பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். அவர் எழுதுகிறார், “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை” (1 தெசலோனிக்கியா் 4:13).
முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவ விசுவாச கொள்கைகள் உருவானபோது, தெசலோனிக்கேயாவிலுள்ள விசுவாசிகளுக்கு மனதில் பல கேள்விகள் இருந்தன. அதில் ஒரு முக்கியமான சந்தேகம் என்னவெனில்: மாித்தப்பின் நம் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடக்கும்?
1 தெசலோனிக்கியா் 4:14-18 வசனங்களில் பவுல் கூறும் பதில் என்னவென்றால், வரப்போகும் நித்தியத்தில் மரித்தவா்களை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையினால், நாம் ஆறுதலடைய முடியும். இந்த பூமியில் மரணம் நமது உறவுகளில் பிரிவை ஏற்படுத்தும், ஆனால் இது இறுதி அத்தியாயம் அல்ல. இழப்பின் வலியை நாம் இன்னும் உணர்கிறோம், ஆனால் அது நம்மை விழுங்க வேண்டிய அவசியமில்லை. நாம் துக்கப்படுகிறோம், ஆனால் “நம்பிக்கையில்லாத மற்றவர்களைப் போல” அல்ல.
மரணத்தின் மீதான கிறிஸ்துவின் வெற்றி, மரணத்தை எதிர்கொள்ளும்போது உறுதியான நம்பிக்கையைத் தருவது மட்டுமல்லாமல், அன்புக்குரியவர்களின் இழப்புடன் போராடும் நமக்கு கிறிஸ்துவில் மீண்டும் அவா்களை சந்திக்கும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பையும் தருகிறது. “மரண இருளின் பள்ளத்தாக்கின்” துக்கத்தையும் துயரத்தையும் அனுபவிக்கும்போது அவருடைய உயிர்த்தெழுதல் நமக்கு நித்திய நம்பிக்கையைத் தருகிறது.
இரண்டாவதாக, உயிர்த்தெழுதலின் நம்பிக்கை ஆவிக்குரிய கிறிஸ்தவ அனுபவத்திற்கு வீரியத்தைக் கொடுக்கிறது. பூமியில் நமது வாழ்க்கை என்பது நாம் இங்கே இருக்கும்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றியது மட்டுமல்ல. வரப்போகிய நித்தியத்திற்காக நம்மை ஆயத்தப்படுத்துவதாகும். பவுல் எழுதினார், “இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்” (1 கொரிந்தியர் 15:19).
பரலோகம் என்பது இல்லாவிட்டாலும் கிறிஸ்துவைப் பின்பற்றுவதே சிறந்த உன்னதமான வாழ்க்கை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் வெளிப்படையாக, பவுல் இதற்கு உடன்படவில்லை! அவரைப் பொறுத்தவரை, அது உண்மையானால், கிறிஸ்தவர்கள் பரிதாபத்திற்குரியவா்களாக இருப்பாா்கள். ஏன்? ஏனென்றால் எதிர்பார்ப்பதற்கு எதுவும் இல்லை. நாம் ஏமாற்றப்பட்டவா்களாயிருப்போம்.
ஆனால் அங்கிருக்கும் எல்லாம் இதுவல்ல. அதிலிருந்து வெகு தூரம்! இந்த வாழ்க்கையில் நாம் கிறிஸ்துவுக்காக சிறந்த சாட்சியாக வாழ வேண்டுமானால், அது நித்திய வாழ்க்கையை குறித்து நம்பிக்கை நமக்கு வாக்குதத்தமாக கொடுத்திருக்கிறபடியால்தான். ஆகையால், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் வேரூன்றிய இந்த அடிப்படை நம்பிக்கை, பூமியில் நம் வாழ்க்கையை அணுகும் முறையையே வடிவமைக்கும், ஏனெனில் இது நம் எதிர்கால வாழ்க்கைகான கண்ணோட்டத்தை நமக்குத் தருகிறது.
நடைமுறை வாழக்கையில், இதன் பொருள் என்னவெனில், உயிர்த்தெழுதல் நமக்கு அற்புதமான நம்பிக்கையைத் தருகிறது என்பதாகும். நமது மிகப்பெரிய சத்துருவை கிறிஸ்து வென்றதால் நம் வாழ்க்கையின் அனைத்து போராட்டங்களையும் சவால்களையும் எதிர்கொள்ள அவா் நமக்கு உதவ முடியும்.
பே ர்ல் பக் இவ்வாறு எழுதியுள்ளாா்: “நம்பிக்கை இல்லாமல் உணவை உண்பது, மெதுவாக பட்டினி கிடந்து மரிப்பதற்குச் சமம்.”
ஆனால் யாரும் பட்டினி கிடக்கத் தேவையில்லை. மக்கள் கிறிஸ்துவிடம் வரும்போது, அவர்கள் மன்னிப்பையும், ஜீவனையும் தேவனுடன் ஒரு உறவையும் பெற்றுகொள்கின்றனர்.
பவுல் அதை இவ்வாறு கூறுகிறார்: “புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” (கொலோசெயர் 1:27).
பேர்ல் எஸ். பக் (1892-1973) ஒரு அமெரிக்க பெண் நாவலாசிரியர் மற்றும் மனிதாபிமானி ஆவார், அவர் தி குட் எர்த் மற்றும் எ ஹவுஸ் டிவைடட் என்ற புத்தகங்களை எழுதியவர். அவர் புலிட்சர் பரிசு மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இரண்டையும் பெற்றார். சீனாவில் பிரஸ்பிடேரியன் மிஷனரிகளால் வளர்க்கப்பட்ட அவர், சமூகத்தில் இனத்தால் உண்டான தடைகளை உடைக்க அதிகம் பிரயாசப்பட்டவா்.
இது மகிமையின் நம்பிக்கை, ஏனென்றால் நாம் கிறிஸ்துவினுடையவர்கள், அவர் நம்முடையவர். அந்த உறவின் பாதுகாப்பில், நம்மீது அவா் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார், அந்த நம்பிக்கை உண்மையான நித்திய வாழ்வில் வேரூன்றியது, இதனால் அவரை கனப்படுத்துகிற வாழ்வை நாம் சந்திக்க முடியும். அவா் நமக்கு உதவி செய்வாா். இயேசு ஏன் வந்தார் என்று சிந்தியுங்கள்:
“நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர் மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய் பொழிந்தருளினார்” (தீத்து 3:4–7).
தேவனுடைய தயையும் மனுஷர் மேலுள்ள அன்பும் கிறிஸ்துவை இந்த உலகிற்கு நாம் பாவத்திலிருந்து விடுதலை பெறவும் நம்மிடமிருந்தும் நம்மை மீட்கும்படியும் அனுப்பினாா். இதனால் நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும் நம்பிக்கையைப் பெறுகிறோம் (வ. 7).
நம் பாவங்களையும் தவறுகளையும் அறிக்கையிட்டு, கிறிஸ்துவிடம் திரும்புவதன் மூலமும், அவர் சம்பாதித்த மன்னிப்பையும், அதனுடன் கிடைக்கும் நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்வதன் மூலமும் அந்த வாக்குத்தத்தம் நம்முடையதாக மாறிவிடும். யாருக்கு இந்த வாக்குத்தத்தம் “…இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.” (1 பேதுரு 1:21).
நீங்கள் கிறிஸ்துவை ஏற்கனவே அறிந்திருந்தால், அவா் தரும் நம்பிக்கை உங்களுக்கு எவ்வளவு உண்மையானதாக இருக்கிறது? நம்பிக்கை என்பது எத்தனை அருமையானது, கிருபை நிறைந்தது, இது வாழ்க்கையை உண்மையாகவே மாற்றி வேறு ஒரு முறையில் பார்க்க உதவுகிறது.நம்பிக்கை நம் கண்ணோட்டத்தை மிகவும் ஆச்சரியமான முறையில் மாற்றி, வாழ்க்கைக்கான நமது முழு அணுகுமுறையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதைப் பற்றி, பவுல் கூறுகிறார், ” அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்ப வேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்” (ரோமர் 8:24-25).
சில நேரங்களில் நம்பிக்கை திடமாக தோன்றாமல் இருக்கும், ஆனால் நாம் எப்போதும் நம்பிக்கையின் பாத்திரராகிய தேவனை நம்பலாம். அவர் அங்கே இருக்கிறார், நம்மீது அவருடைய இரக்கம் என்றென்றும் உள்ளது.
நம்பிக்கை உண்மையானது, பயம் மறைந்தது
இஸ்ரவேல் மக்கள் செங்கடலை கடக்கமுடியாமல் பயந்து நடுங்கியபோது, “…மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்” என்றான் (யாத்திராகமம் 14:13). மீதமுள்ளவை, நிச்சயமாக, அது வரலாறாக இருக்கிறது. தேவனாகிய கா்த்தா் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; இஸ்ரவேலர் தப்பினர். அவர்களைத் துரத்திச் சென்ற எகிப்திய இராணுவம் மூழ்கியது. யாத்திராகமம் 15ம் அதிகாரம் மலைபோன்ற தீர்க்க முடியாத பிரச்சினையை எதிர்கொண்டு தம்முடைய ஜனங்களை அற்புதமாக விடுவித்ததற்காக தேவனைத் துதிக்கும் வெற்றிப் பாடலைப் பகிர்ந்து கொள்கிறது.
யாத்திராகமம் 15:18-ல் தேவனாகிய கா்த்தரின் விடுதலையை மோசேயின் துதிப்பாடல் விவரிப்பது மட்டுமல்லாமல், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தை வெற்றி கொள்ளும் நம்பிக்கையின் எதிர்பாா்ப்பை பறை சாற்றுகிறது (வச. 14-17). நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் உண்மையாக உணரப்பட்ட நம்பிக்கை, இன்னும் ஆழமான அர்த்தத்தைக் எதிர்கால நம்பிக்கைக்குக் கொடுத்தது.
வாழ்க்கையின் மிகவும் கடினமான சூழ்நிலைகள் மற்றும் மிகப்பெரிய துயரங்களின் காலத்தில், நாம் கர்த்தரை நம்பலாம். நாம் தனியாக இல்லை அல்லது மறக்கப்படவில்லை என்ற நம்பிக்கையான எதிர்பார்ப்பில் நாம் விடாமுயற்சியுடன் இருக்க முடியும். அவர் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார்.
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்! நமது நம்பிக்கையின் தேவனாகிய கா்த்தரையே நாம் பரலோக பிதா என்று அழைக்கிறோம்!