“நா ம் ஜெபிக்கையில் தேவன் எப்போதும் பதில் அளிக்கிறார்” என்பதுபோன்ற சில பிரபலமான வரிகள் உண்டு. சிலநேரங்களில் அவர் “இல்லை” என்றும், சிலசமயம் “பொறு” என்றும், சிலசமயம் “இல்லை” என்றும் பதிலளிக்கிறார். அவருடைய பதில்கள் எப்படிப்பட்டதாயினும், அவையே நமக்கு ஏற்றதாய் உள்ளன. இருப்பினும் சிலசமயங்களில் தேவனின் “ஆம்” அல்லது “இல்லை” என்கிற பதிலையும் தாண்டி நமக்கு அதிகம் தேவைப்படலாம்; நமக்கு விளக்கம் தேவை, அவரது இடைப்படுதல் தேவை.
உண்மையில் நிலைமாறும் இவ்வுலகில், நித்தியத்தை குறித்த நமது கண்ணோட்டத்தை இழக்கிறோம். வாழ்க்கையில் போராட்டங்களும் கொந்தளிப்புகளும் மேலோங்குகையில், நித்தம் பொங்கும் அலைகளில் அடிபட்டு நமது விசுவாசத்தின் அடிப்படைகளை விட்டு எளிதாக நாம் விலகுவது சாத்தியம். அநீதியையும், வலியையும் நாம் அனுபவிக்கையில் அல்லது கொந்தளிப்பான தடைகளை சந்திக்கையில் நம் அனைவருக்கும் உடனடியாக எழும் கேள்வி, “தேவனே ஏன்?” என்பதுதான். விசுவாசத்தில் அனுபவமுள்ள யாத்ரீகர்கள் கூட தங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களால் தங்கள் வழியை இழந்துள்ளனர்.
உங்கள் சூழ்நிலையின் காரணமாக உங்கள் விசுவாசம் சோதிக்கப்படுகிற கவலை, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற ஒரு காலசூழலை நீங்கள் கடந்து கொண்டிருப்பீர்களாகில்; தேவனருளும் நம்பிக்கையின் செய்தியை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வர, மிகவும் விரும்பப்படும் ஆவிக்குரிய தொடரான “நமது அனுதின பயணத்தின்” கட்டுரைகளின் தொகுப்பு இங்கே உள்ளது. வாழ்க்கையின் பொங்கி எழும் புயல்களுக்கு மத்தியில் தேவனின் வார்த்தையே உங்கள் திசைகாட்டி. சங்கீதக்காரனும் இந்த சத்தியத்தை இறுக பற்றியிருப்பதை, “கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறு உத்தரவு அருளினீர்” (சங்கீதம் 38:15) என்று கூறுகிறார். மெய்யாகவே நமது நம்பிக்கை அவரில் மட்டுமே, அவர் நிச்சயம் பதிலளிப்பார்.
உங்களை அதிகமாக வாட்டும் கேள்விகளுக்கு தேவனின் பதில்களைப் புரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.
நமது அனுதின மன்னா ஊழியங்கள், இந்தியா
நான் ஒரு தேநீர்விடுதியில் தேநீர் குடித்துக் கொண்டிருக்கையில், இரு பெண்கள் வெவ்வேறு இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஒருத்தி வாலிப பருவத்தின் அழகோடு, கிரீம்களால் அலங்கரிக்கப்பட்ட பானத்தை பருகிக்கொண்டிருந்தாள். அவளுடைய ஷாப்பிங் பைகள் அவள் காலடியில் செல்லப்பிராணிகளைப் போல அமர்ந்திருந்தன. மற்றொருத்தி, அதே வாலிப பருவம், ஆனால் கைத்தடி ஊன்றி தன் இருக்கைக்கு நகர்ந்து சென்றாள். தடிமனான பிளாஸ்டிக் வளையங்கள் அவள் கணுக்கால்களைப் பாதுகாத்தன. ஒரு பணியாளர் அவளது இருக்கையில் அவள் நகர்வதற்கு உதவ வேண்டியிருந்தது.
ஒரு கிறிஸ்தவம் சாராத அமைப்பு ஆன்மீக சந்தேகங்களுடன் போராடும் மக்களுக்காக சிறப்பு அவசரகால தொலைபேசி இணைப்பை நிறுவியுள்ளது. இந்த உதவி மையத்தின் சரியான குறிக்கோள் சற்று தெளிவற்றதாகத் தோன்றினாலும், அதன் நிறுவனர் ஒரு காரியத்தை அவதானித்து,” “கேள்விகளைக் கேட்கத் தொடங்கும் போது பலர் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ உணர்கிறார்கள் …. சபைகள் சந்தேகிக்கும் நபர்களை [உதவிகள் மற்றும் ஐக்கியத்திற்காக] வரவேற்கத் தொடங்கினால், இந்த திட்டம் தேவைப்படாது” என்று சுவாரஸ்யமாக கூறினார்.
விரக்தியில் இருந்த ஒருவர், ஒரு வேதாகம ஆசிரியரிடம், “என் வாழ்க்கை உண்மையில் மோசமான நிலையில் உள்ளது” என்று ஒப்புக்கொண்டார். “எவ்வளவு மோசம்?” என்று கேட்டார் ஆசிரியர். கைகளில் தலையைப் புதைத்துக்கொண்டு, அந்த நபர் “எவ்வளவு மோசமானது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு தேவனை தவிர வேறு எதுவும் இல்லை.” என்று புலம்பினார். வாழ்க்கை தனக்கு ஒரு மோசமான நிலைமையை கொடுத்ததாக அந்த நபர் நினைத்தார்.
ஞானி ஒருவர் ஒருமுறை, “மனப்போராட்டம் என்பது மேலோட்டமானது அல்ல, அடிவேரில் தான் அது அதிகமிருக்கும்” என்றார். யோபுவும் கூட இதனை ஆமோதிப்பதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. மனமடிவுண்டாக்கும் அழிவின் செய்திகளை பகுதிப்பகுதியாக கேட்டு அனுபவிக்கும் சூழலுக்கு அவர் தீடிரென்றும் கட்டாயமாகவும் தள்ளப்பட்டார். அவருடைய மிருகஜீவன்கள், வயல்வெளிகள், வேலையாட்கள் மற்றும் குழந்தைகள் என்று அனைத்தும் ஒரே நாளில் அழிந்தது.
ஆச்சரியமூட்டும் கிருபை என்ற பாடலில் வரும் இந்த வரிகளை என்றாவது சிந்தித்து பார்த்தீர்களா? “இக்கிருபை என் பயம் நீக்கிற்று, பயப்படவும் கற்று கொடுத்தது. நான் விசுவாசித்த முதல் தருணமுதல் எவ்விலையேறப்பெற்ற கிருபையிது”. உள்ளம் பயப்பட கிருபை கற்றுக்கொடுத்ததாம். பயப்படும் அளவிற்கு கிருபை பயங்கரமானதா? தேவனின் உடன்படிக்கை பெட்டியை தாவீது மீண்டும் எருசலேமிற்கு கொண்டுவருகையில், இக்கேள்விகளுக்கான விடைகளை கண்டுகொண்டார்.
இழப்பு, கடினமான சூழல், அலைச்சல் மற்றும் சுகவீனம் என்று ஒரு நீண்ட பருவத்தை தொடர்ந்து உள்ளமும் இதயமும் நொறுங்கியிருந்தது. இயேசு கிறிஸ்து தான் “மகா தேவனும் நமது இரட்சகரு(ம்)” (தீத்து 2:13) என்ற உறுதிப்பாடு என்னில் சிதயவில்லை என்றாலும், நமது அனுதின வாழ்வின் காரியங்களில் அவரை முழுவதும் நம்புவதை குறித்து எனக்கு அநேக கேள்விகள் எழும்பின. இந்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், சபை மூப்பர்கள் எனக்காக ஜெபித்தபோது குறிப்பிடத்தக்க பலத்தையும் ஊக்கத்தையும் பெற்றேன்.
“பயம் என்பது கிறிஸ்தவ மனப்பான்மை அல்ல” என்று நாவலாசிரியர் மார்லின் ராபின்சன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் பயம் என்பது மனித நடத்தையில் மிகவும் ஆற்றல்வாய்ந்த மற்றும் நிலையான தாக்கங்களில் ஒன்றாகும். வெளிப்புறமான கீழ்ப்படிதல் கூட அன்பை காட்டிலும் பயத்தால்தான் செயல்படுகிறது. பயத்தால் தூண்டப்படாமல் வாழ்வது என்றால் என்ன? என்று கூட நாம் ஆச்சரியப்படலாம். இதற்கு நமக்கு வழிகாட்ட யாக்கோபின் கதை உதவலாம். நான் இந்த கதையை வாசிக்கையில், பயத்தால் இயக்கப்பட ஒரு நபரையே பார்க்கிறேன்.