வாசிக்க: லூக்கா 10:1-23
இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. (வ. 21)
ஒவ்வொரு ஞாயிறு காலையும் அந்த தாழ்வாரத்தில் நாங்கள் சந்தித்துக்கொள்வோம். அவள் கண்கள் மகிழ்ச்சியால் நிரம்பி, மிளிரும். உடனே அவள் என் பெயரை, “மார்லினா!” என்று ராகத்தோடு அழைப்பாள். அவள் என்னை மயக்குகிறாள், அவளை கட்டிப்பிடித்து, “உன்னை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றால், அவள் எப்பொழுதும், “நீ என்னை பார்ப்பது எனக்கும் பிடிக்கும்” என்பாள். “எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்குமென்று உனக்குத் தெரியுமா” என்று அவளுக்கு நினைப்பூட்டினால், “நிச்சயமாக எனக்குத் தெரியும்” என்று உறுதியுடன் பதிலளிப்பாள். எழுபத்தைந்து வயதில், முதுமை மறதி நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் எனது இந்த அன்புத்தோழி, தேவனின் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளாள். இயேசுவின் மீதும் அவரை நேசிப்பவர்கள் மீதும் அவள் குழந்தை போல் நம்பிக்கை வைத்துள்ளாள்.
நான் என் தோழியைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன், அவளுடைய சூழ்நிலைகள் மத்தியிலும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அவளுடைய உண்மையான மகிழ்ச்சி இயேசுவின் மகிழ்ச்சியை விவரிக்கும் வேதவசனங்களை எனக்கு நினைவூட்டுகிறது. உதாரணமாக, லூக்கா 10ல், இயேசு தாம் பார்வையிடத் திட்டமிட்டிருந்த நகரங்களுக்கு ஊழியம் செய்வதற்காக தம்முடைய சீஷர்களில் எழுபத்திரண்டு பேரை அவருக்கு முன்னால் அனுப்பியிருந்தார் (வ. 1). அவர்கள் மகிழ்ச்சியுடனும், தேவவல்லமை உண்டாக்கிய ஆச்சரியத்துடனும் திரும்பினர். “ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்” (வ. 17). இயேசு அவர்களின் அறிக்கைகளை கேட்டபின், அவர் பரிசுத்த ஆவியின் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டதாக வேதம் நமக்குச் சொல்கிறது, “பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.” (வ. 21) என்று களிகூர்ந்தார்.
தாழ்மையுள்ளவர்களுக்கு, இயேசு தன்னை யாரென்று கூறுகிறாரோ அதனை எளிய நம்பிக்கையுடன் நம்புபவர்களுக்கு, தேவனின் வழிமுறைகள் வெளிப்படுத்தப்படுகின்றன: “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 18:3). நாம் கிறிஸ்துவை நம்பி, நம் வழிமுறைகளையும் உலகத்தின் வழிமுறைகளையும் அவருடைய வழிமுறைகளுக்கு மாற்றினால், மகிழ்ச்சி வரும். என் தோழியை பார்க்கும் ஒவ்வொரு முறையும் இந்த உண்மையின் அருமை எனக்கு நினைவிற்கு வருகிறது.
—மார்லினா கிரேவ்ஸ்
மேலும் வாசிக்க
மத்தேயு 19:14 ஐப் படித்து, இயேசுவின் வார்த்தைகள் குழந்தைப் போன்ற நம்பிக்கையைப் பற்றி என்ன வெளிப்படுத்துகின்றன என்பதைக் கவனியுங்கள்.
சிந்திக்க
நீங்கள் இயேசுவில் தாழ்மையுடன் நம்பிக்கை வைப்பதன் அர்த்தம் என்ன? உண்மையான மகிழ்ச்சி ஏன் அவரிடம் மட்டுமே காணப்படுகிறது?
,,,,,