சுசன்னா சோங் தனது இரண்டாவது கர்ப்பத்தின்போது இடைவிடாத உதிரப்போக்கினால், அவதிப்பட்டார். மருத்துவர்கள், நடக்கவோ பேசவோ முடியாத நிலையிலிருந்த அவரது முதல் குழந்தையைப் போலவே இந்த இரண்டாவது குழந்தையும் இருக்கும் என்று அவர்கள் கருதி, அவரை மரபணுசோதனைக்கு உட்படுத்தும்படி வற்புறுத்தினார்கள்.
இருப்பினும், சூசன்னா உறுதியாக மறுத்து, இந்த மருத்துவ பரிசோதனைகள் எதுவும் இல்லாமல் கர்ப்பகாலத்தைத் தொடர முடிவு செய்தார்.
“எனது முதல் குழந்தைக்குசெய்ததைப் போல் நான் மீண்டும் அத்தகையச் சூழலைக்கடக்க வேண்டும் என்பது தேவ சித்தமானால், என்னால் அதனைச் செய்ய முடியும்”.
அவரது இளைய மகன் குவான்யி இப்போது சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான 11 வயது குழந்தையாக வளர்ந்துள்ளார்.
கோலாலம்பூரில் இருந்த YMI-யிடம் பேசிய சூசன்னா இந்த அனுபவத்தை நினைவு கூர்ந்தபோது சிரித்தபடியே, “எனக்கு எப்படி அவ்வளவு தைரியம் இருந்தது என்று தெரியவில்லை, ஆனால் எப்படியோ தேவன் எனக்கு இத்தகைய மனதைரியத்தை அளித்துள்ளார்” என்றார். உண்மையில், அவர் தனது முதல் மகன் குவான்யூ பிறந்ததிலிருந்து வெகுதூரம் கடந்து வந்துவிட்டார், அவனுக்கு இப்போது 19 வயது.
முன்பாக, சூசன்னாவும் அவரது கணவரும் திருமணமாகி ஆறு வருடங்களாக குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருந்தனர். ஓர் குழந்தைக்காக இறைவனிடம் மன்றாட வேண்டும் என்று நெருங்கிய நண்பர்கள் பரிந்துரைத்தனர், ஆனால் தனக்குக் குழந்தையை தருவது தேவ சித்தமானால் நிச்சயமாக தருவார் என்று நம்பி, சூசன்னாஅந்தக் கருத்தை நிராகரித்தார்.
ஆனால் ஓர் நாள், ரயிலில் வேலைக்குச்செல்லும் போது, தன் குழந்தையை இறைவனுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறாயா என்று பரிசுத்த ஆவியானவர் கேட்பதை அவர் உணர்ந்தார். அந்த அனுபவத்தை அவரது கணவருடன் பகிர்ந்து கொண்ட பிறகு, தம்பதியினர் ஜெபத்துடன் அவ்வாறு செய்ய ஒப்புக்கொண்டனர்.
ஐந்து நாட்களுக்குப் பிறகு, சூசன்னா கருவுற்றிருப்பதைக் கண்டுபிடித்தார்.
ஒருவேளை தங்கள் மகன் ஓர் ஊழியக்காரனாக அழைக்கப்படலாம் என்று நினைத்து, தங்கள் மகனுக்காக தேவன் என்ன வைத்திருக்கிறார் என்பதைக் கண்டறிவதில் தம்பதியினர் உற்சாகமாக இருந்தனர். இதனைக்கருத்தில் கொண்டு, தேவனுக்குத் தன்னால் இயன்றதை மிக சிறப்பாகச் செய்ய விரும்பினார் சூசன்னா. அந்த நேரத்தில், அவர் கினோகுனியா புத்தகக்கடையில் பணிபுரிந்தார். மேலும் குழந்தைப் பராமரிப்பைப் பற்றி தன்னால் முடிந்தவரை தெரிந்து கொள்வதற்காக மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு மற்றும் கர்ப்பம் பற்றிய அநேகப்புத்தகங்களை வாங்கி கற்று கொண்டார்.
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, குவான்யூவை நல்ல முறையில் பெற்றெடுத்தார். இருப்பினும், சுமார் இரண்டு மாத காலப்பகுதியில், அவர் 24 மணி நேரத்தில் 88 முறை அமிலப்பின்னோட்ட நோயினால் (ஆசிட் ரிஃப்ளக்ஸ்) பாதிக்கப்பட்டு பெலவீனப்பட தொடங்கினார். அடுத்தடுத்த மாதங்களில், தங்களின் அழைப்புகளுக்குப் பதிலளிப்பது மற்றும் எடையை அதிகரிப்பது போன்ற வழக்கமான மைல் கற்களை தனது மகன் அடையவில்லை என்பதை சூசன்னா கவனித்தார். ஐந்தாவது மாதத்திற்குள், ஓர் நிபுணர் குவான்யூ மூளையில் பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தார். அப்போது சூசன்னா மற்றும் அவரது கணவரிடம் அவர்களது குழந்தை சாதாரண குழந்தைகளைப்போல் பேசவும் நடக்கவும் முடியாது என்று கூறப்பட்டது.
“இந்தச்செய்தியைக் கேட்டதும் என் உலகம் நொறுங்கியது. நான் அனைத்தையும் இழந்த நிலையில் இருந்தேன்.”
என்றாள் சூசன்னா, வலிமிகுந்த நினைவை சொன்னபோது கண்ணீர்விட்டு அழுதார். குவான்யூவை கவனித்துக்கொள்வதற்காக அவர் தான் பணிபுரிந்த வேலையை விட்டுவிட்டார், ஆனால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்ள ஆரம்பித்தார். உணவு வேளையின் போது அவர் தொடர்ந்து அழுவார், தன் கணவனிடமிருந்து கண்ணீரை மறைத்துக்கொண்டார், அவரும் சமமான கடினமான நேரத்தைச்சந்திப்பதை அவர் அறிந்திருந்தார் .
அவருடைய மூத்த சகோதரனிடமிருந்து அழைப்பு வரும்வரை இவை இரண்டு மாதங்கள் தொடர்ந்தது,
உலகத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறாள் என்று கவலைப்பட்ட அவரது சகோதரர், குவான்யூ தன்னை கவனித்துக்கொள்ள முடியாததால் அவர் அனக்குத் தேவை என்று சுட்டிக்காட்டினார். இப்போது 10 மாதமாகும் குவான்யூ-வின் எடை 4 கிலோ மட்டுமே, மற்றும் உரத்த ஒலி சத்தங்களுக்கு மோசமாக எதிர்வினையாற்றினான். அவனது உடல்நிலையின் காரணமாக இரவில் 45 நிமிடங்கள் மட்டுமே தூங்கினான்.
தன் மகனைப் பார்த்து சோர்ந்து போகாமல், சூசன்னா அந்த நேரத்தில் ஆலோசனைக்குச் சென்று நிலைமையை தைரியமாக நேருக்கு நேர் எதிர்கொள்ள முடிவெடுத்து, குவான்யூ-க்கு ஆதரவாக அனைத்து காரியங்களையும் செய்தார். ஒவ்வொரு நாள் காலை, குவான்யூவை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது, அவர் தனது போராட்டங்களை தேவனிடம் கூறுவார், அவர் அவளுக்கு ஆறுதல் அளித்து தனது வல்லமையை விளங்கப்பண்ணி, படிப்படியாக இருளில் இருந்து அவரை மீட்டெடுத்தார்.
“உண்மையில் தேவனுடைய கிருபையால் நான் மனச்சோர்வுக்குள்ளாகவில்லை” என்று சூசன்னா கூறினார். “நான் ஆழமான பள்ளத்தாக்கில் இருந்தேன், ஆனால் அவர் என்னை படிப்படியாக வெளியேற்றினார்.”
மார்ச் 2012-இல், சூசன்னா சிறப்புத்தேவைகள் அமைச்சகத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்காக தைவான் சென்ற போது அந்த திருப்புமுனை ஏற்பட்டது. தைவானில் சிறப்புத்தேவையுடைய குழந்தைகள் எவ்வளவு நன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதாலும், சமூகத்தில் உள்ள சிறப்புத்தேவைகள் குறித்த உயர்ந்த விழிப்புணர்வாலும் அவர் அதிர்ச்சியடைந்தார். மலேசியாவுக்கு திரும்பிய ஐந்து மாதங்களுக்குப் பிறகு, சூசன்னா தனது உள்ளூர் தேவாலய போதகரின் அழைப்பின் பேரில் சிறப்புத்தேவைகள் குழுவை தொடங்கினார். இது ஓர் சிறிய கூட்டமாகத் தொடங்கியது, ஆனால் தேவாலய வளாகத்தை பயன்படுத்துவதன் மூலமும் தன்னார்வலர்களைச் சேர்ப்பதன் மூலமும் தேவாலயம் அவருக்கு ஆதரவளித்தது. அவர்கள் குழுவில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் உட்பட அனைவரையும் சேர்த்துக்கொண்டனர்.
தைவானில் உள்ள சிறப்புத்தேவையுடைய குழந்தைகள் முகாமைப் பின்பற்றி, சூசன்னா பிற சிறப்புத் தேவை நிபுணர்கள் மற்றும் பெற்றோருடன் கைகோர்த்து, வெவ்வேறு குறைபாடுகள் உள்ள குழந்தைகளைக் கொண்ட கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாத குடும்பங்களுக்கு ஆண்டு முகாம்களை ஏற்பாடு செய்யத்தொடங்கினார். ஒவ்வொரு முறையும் 40 குடும்பங்கள் பங்குபெறலாம், நிபுணர்கள் மற்றும் பிற குடும்பங்களிடமிருந்து தங்கள் குழந்தைகளை எவ்வாறு சிறப்பாகப்பராமரிப்பது என்பதைக் கற்றுக்கொள்ளலாம்.
அவரது ஈடுபாட்டின் மூலம், இந்த முகாம்கள் குடும்பங்களுக்கு எப்படி ஓர் திருப்புமுனையாக மாறிவிடுகின்றன என்பதை சூசன்னா கண்டார், அவர்களில் பலர் சொல்லப்படாத காயங்களையும் வலிகளையும் தாங்களாகவே சுமந்தனர், ஏனெனில் யாரும் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் சகித்துக்கொண்டிருப்பதில் அநேக அவமானங்களும் இருக்கிறது, இவை அவர்களை வெளி உலகத்திலிருந்து மேலும் பின்வாங்கச் செய்தது.
“இந்த பெற்றோர்கள் தாங்கள் தனியாக இல்லை என்பதை உணர ஆரம்பித்தனர். அவர்கள் தங்கள் குழந்தையை சபிக்கப்பட்டவர்களாக அல்ல, ஆனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக பார்த்ததையும் அத்தகைய முகாம் மாற்றியது, மேலும் தேவ அன்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தங்கள் குழந்தைக்குக் கற்பிக்க அவர்களுக்கு உதவியது.”
முகாம் இன் 10வது ஆண்டில் நுழையும் வேளையில், சிறப்புத்தேவைகள் குறித்த கூடுதல் விழிப்புணர்வை மலேசியா முழுவதிலும் கொண்டு வருவதைப் பார்த்து, 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் முகாம்களுக்கு ஆட்சேர்ப்பு செய்து, சிறப்புத்தேவைகள் உள்ள சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி அதிகம் அறிந்திருப்பதைக் கண்டு சூசன்னா மகிழ்ச்சியடைந்தார்.
சிறப்புத்தேவையுள்ள சமூகத்தினருக்கான ஊழியத்தின் மூலம் சுசன்னாவின் வாழ்க்கையில் தேவன் மாற்றத்தைச் செய்துள்ளார். தைரியமாக பிரசங்கபீடத்தில் அடியெடுத்து வைத்து, குவான்யூ பற்றியும், தேவன் அவரது நிபந்தனையற்ற அன்பை தன்னிடம் வெளிப்படுத்தியதை போன்று தானும் குவான்யூவை நிபந்தனையின்றி நேசிக்க கற்றுக்கொண்டதாக பகிரத்தொடங்கினார்.
“10 வருடங்கள் பேரங்காடியில் (மால்) என் மகனை வினோதமாகப் பார்க்கும் ஜனங்களை நான் விரும்புவதில்லை, ஆனால் அவை இனிமேல் என்னைத் தொந்தரவு செய்யப்போவதில்லை. அவனது தாயாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், அவனை வெளியே கொண்டு வருவதில் எந்தத் தயக்கமும் இல்லை” என்று சூசன்னா கூறினார். “இது குவான்யூக்கும் எனக்கும் என் குடும்பத்திற்குமான தேவனுடைய சிறப்புத் திட்டம் என்பதை நான் அறிந்து கொண்டேன்”
சிறப்புத்தேவையுடைய குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் மனம் தளராமல், தங்கள் குழந்தைகளுக்கான ஆதரவைத்தேடுவதில் தைரியமான முதல் படியை எடுக்குமாறு சூசன்னா கேட்டுக்கொள்கிறார். அவர்கள் வெவ்வேறு திறன்களையும் பலங்களையும் கொண்டிருந்தாலும், தேவனுடைய பார்வையில் அவர்கள் மற்ற எல்லா குழந்தைகளிலிருந்தும் வேறுபட்டவர்கள் அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்த அவர் விரும்புகிறார். விசேஷ தேவையுடைய குழந்தைகள் தேவனைக்கண்டடைய முடியாவிட்டாலும் அவருடனான உறவைப் பேண வேண்டும் என்ற எண்ணத்துடன் பெற்றோரை ஊக்குவிக்கவும் அவர் விரும்புகிறார்.
“தேவனுடைய பரிசுத்த ஆவி அவர்களோடு இடைபடும் போது, நாம் அறியாத அல்லது பார்க்க முடியாத ஆச்சரியமான ஒன்று நடக்கிறது”
என்று சூசன்னா கூறினார், மேலும் குவான்யூக்கு தேவன் இதயப்பூர்வமான புன்னகையைக் கொடுத்தார், அவை அறையை ஒளிரச் செய்து எத்தகைய இருண்ட சூழலையும் மாற்றியமைத்து உற்சாகப்படுத்தும்.
இறுதியில், சூசன்னா உறுதிப்படுத்துவது போல், பிள்ளைகள் தேவன் கொடுக்கும் பரிசு மற்றும் அவர்கள் அவருக்கு சொந்தமானவர்கள். கடந்த ஆண்டு, குவான்யூ இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கால்-கை வலிப்பு காரணமாக ஆபத்தான நிலையில் இருந்தார். குவான்யூ தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஓர் சிறப்பு பரிசு என்பதை இந்த அத்தியாயம் அவருக்கு நினைவூட்டியது. அவர் தனது மகனை அவரது கைகளில் முழுமையாக விட்டுவிட வேண்டும் என்பதே இதன் பொருள்.
குவான்யூ 19 வயது வரை வாழ்வதன் மூலம் எல்லா எதிர்பார்ப்புகளையும் முறியடித்து விட்டதால், குவான்யூவின் நேரம் எப்போது முடிவடையும் என்று தனக்குத் தெரியாது என்று சூசன்னா கூறினார். ஆயினும்கூட, குவான்யூ-வின் வாழ்க்கையின் 19 ஆண்டுகள் சிறப்பாகக்கழிந்தன என்று அவர் உறுதியாக நம்புகிறார், அவன் ஒவ்வொரு நாளும் தேவனுடைய செயல்களின் சாட்சியாக வாழ்ந்தான். குவான்யூ-வின் எதிர்காலத்தைப் பற்றி அவர் கவலைப்பட்டாலும், அவர் அவனைவிட முன்னதாகவே இந்த உலகத்தை விட்டுப்பிரிந்தால் அவனுக்கு என்ன நடக்கும் என்று அவர் கவலைப்படுகிறார், அவர் இந்தக்கவலையை தேவனிடம் அறிக்கையிட முடிவு செய்தார்.
மறுமொழியாக, தேவன் அவரிடம் கேட்டார்: “என்னை நோக்கும் போது நீ என்ன காண்கிறாய்?”சற்று நேரம் யோசித்த பின்பு, கண்டு கொண்டேன் என்று பதிலளித்தார் சூசன்னா.
“நம்பிக்கை, அன்பு மற்றும் நம்பிக்கை”
“குவான்யூவின் எதிர்காலம், அன்பு மற்றும் நம்பிக்கை நிறைந்தது என்று தேவன் என்னிடம் கூறினார்… இதுவே அவர் எனக்குக் கொடுத்த நிலையான வாக்குறுதி, ஆகையால் அவனுடைய எதிர்காலத்தைக் குறித்து நான் கவலைப்படத் தேவையில்லை.”
கிட்லெட் (KIDLET) – சிறுவர்கள், வேடிக்கையாகவும், ஈடுபாட்டுடனும் கடவுளைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவருடைய வார்த்தையில் வளரவும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் இதழ்.
இங்கே பதிவு செய்யவும்