வாசிக்க: ரோமர் 14:1-23

ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம். (வ.19 ).

பிரையன் ஜாக்சன் சாகசம் செய்யவே வாழ்ந்தார். பல ஆண்டுகளாக அவர் கிரகத்தின் சில தீவிர சூழல்களுக்கு பயணங்களை வழிநடத்தினார். பல கண்டங்களில் ஆயிரக்கணக்கான மைல்கள் நடைபயணம் செய்த அவர், இதுவரை அறியப்பட்ட மனிதர்கள் யாரும் இல்லாத இடத்தில் கால் வைப்பதைத் தவிர வேறு எதையும் விரும்புவில்லை. 2014 ஆம் ஆண்டில், அவரும் அவரது குழுவினரும் இமயமலையில் இதுவரை ஏறாத சிகரத்தின் மீது ஏறி, இதற்கு முன் எந்த மனிதனும் காலடி எடுத்து வைக்காத இடத்தில் காலடி வைத்தனர்.

தேவனைத் தவிர யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு அரிய அமைதியான பாதையை வேதம் விவரிக்கிறது (ரோமர் 3:12). பலர் அமைதிக்கான யோசனையை வெறித்தனமாகப் பின்பற்றினாலும், உண்மையான சமாதானப்பிரபுவாகிய இயேசுவே (ஏசாயா 9:6), உண்மையான மற்றும் முழுமையான சமாதானத்தை அனுபவிப்பதற்கான வழி (யோவான் 14:27). நாம் தேவனிலும், அவர் மூலமாகவும் நீதிமான்களாக்கப்படுத்தினால், மற்றவர்களுடன் நாம் சமாதானமாயிருக்க முடியும் (ரோமர் 5:1; எபிரெயர் 12:14).

கிறிஸ்துவுடனான உறவின் மூலம், விசுவாசிகளாகிய நாம் நம்மைப் படைத்தவரின் முன்னிலையில் தைரியமாக வர முடியும் (எபிரெயர் 4:14-16). சக விசுவாசிகளை நியாயந்தீர்ப்பதற்கு அல்லது கண்டனம் செய்வதற்குப் பதிலாக நாம் சமாதானத்தை ஊக்குவிக்க முடியும் (ரோமர் 14:1-9). பவுல் நமக்கு நினைவூட்டுவது போல், “நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே”.(வ.10).

மற்றவர்களைக் குறை கூறுவதற்கு பதிலாக, உண்மையான சமாதானத்தின் பாதை நம்மை “மற்றொரு விசுவாசி தடுமாறி விழாதபடி வாழ” (வ.13) உதவுகிறது. தேவனுடைய ராஜ்யம் ” நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது” (வ.17) என்பதால், சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம். (வ. 19 ).

மெய்யான அமைதியின் பாதை உண்மையில் குறைவாக பயணம் செய்யப்பட்ட பாதையாக இருக்கலாம். ஆனால் ராபர்ட் ஃப்ராஸ்டின் “தி ரோட் நாட் டேக்கன்” என்ற கவிதையின் வார்த்தைகளைப் போலவே , இவ்வழிதான் இப்பொழுதும் எப்பொழுதும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

ரூத் ஓ’ரெய்லி-ஸ்மித்

மேலும்

மத்தேயு 7.13-14ஐப் படித்து, தேவனுடைய ராஜ்யத்திற்கான வாசல் குறுகியது மற்றும் அதன் பாதை கடினமானது என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

அடுத்து

உண்மையான அமைதியின் பாதையை நீங்கள் எவ்வாறு பின்தொடருகிறீர்கள்? தேவன் தம்முடைய சமாதானத்தை எவ்வாறு உங்களுக்கு வெளிப்படுத்தினார்?