“நல்ல துக்கம்!” இதை நீங்கள் யோசித்தால், இது வழக்கமான சொல் அல்ல. நேர்மையாக கேட்டால், நல்ல துக்கம் என்றொன்று உண்டா? ஆம்; துக்கம் மாறும்போது, அது நன்மையே. நம்முடைய இழப்புகளுக்கு நாம் துக்கப்படும் போது நமது ஆத்துமாவிற்கான ஆறுதலை எப்படி கண்டடைய கூடும் என்பதை இழப்புடன் வாழ்வது வெளிப்படுத்துகிறது. பின்வரும் பக்கங்களில், ஆலோசகரும், துக்கப்படுபவருமான டிம் ஜாக்சன், எப்படி வாழ்க்கையின் மனவேதனைகளில் உட்சாய்வது, நம்முடைய சிருஷ்டிகர் மேலும், மற்றவர்கள் மேலும் நாம் சார்ந்திருக்க வழிவகைச் செய்கிறது என்பதை ஆராய நம்மை அழைக்கிறார்.

என் இழப்பின் கோடை

ஒரு அழகான பிற்பகலில், நான் உள்ளூர் மாலில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்தபோது, என்னுடைய கைபேசி அதிர்வுற்றது. அது என் மூத்த சகோதரன் ஸ்டீவ். “அம்மா இறந்துவிட்டார்” என்ற இரண்டு வார்த்தைகளை மட்டுமே கூறினார். 700 மைல்கள் அப்பால் தொலைபேசியில் விம்மிய என் சகோதரனின் சத்தத்தைக் கேட்டபோது என்னுடைய அடிவயிரே கலங்கிவிட்டது, நான் தனிமையாகவும், உதவியற்றவனாகவும் உணர்ந்தேன்.

வினோதமாக இருந்தது. நான் ஒரு மாலில் நின்றுகொண்டிருக்கிறேன், அம்மா இறந்துவிட்டார் என்பதை தீடீரென கேள்விப்படுகிறேன். எவ்வளவு விசித்திரமாக உள்ளது! நான் எனக்குள்ளே செத்தவனாக உணர்ந்தேன். அழைப்பை துண்டித்துவிட்டு, காருக்கு எப்படியோ வந்துசேர்ந்தேன். காரின் கதவை மூடினேனோ இல்லையோ, என்னுடைய கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. உண்மையாகவே தேம்பியழுதேன். நான் எவ்வளவு நேரம் அங்கு அழுதுகொண்டிருந்தேன் என்று எனக்கு தெரியவில்லை.

சில நாட்களுக்கு பின்னர் நாங்கள் அம்மா, பாட்டி, அரிய தோழி என்று நாங்கள் அழைத்த அந்த அற்புதமான பெண்மணியை நினைவுகூர, எங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் ஒன்றாக கூடினோம். பிறகு நாங்கள் எங்கள் அம்மா இல்லாத வாழ்க்கை பயனத்தை துவங்கினோம்.

துக்கம் என்பது முன்கூட்டியோ, பிற்பாடோ நாம் அனைவரும் பயனிக்க வேண்டிய ஒரு பயணம். வித்தியாசம் என்னவெனில், நாம் எவ்வாறு அதை பயணிக்கிறோம் என்பதே..

எட்டு வாரங்கள் கழித்து, இரண்டாவது தொலைப்பேசி அழைப்பு; இந்தமுறை என்னுடைய இளைய சகோதரர் என்னை அழைத்தார். அவர் என்னிடம், இறுதியாக அப்பா அல்சைமர் (ஞாபகமறதி வியாதி) உடனான 6 ஆண்டுகால போராட்டத்தில் தோற்றுவிட்டதாக கூறினார். என் வாகனத்தில் நான் வீட்டிற்கு செல்லும்போது என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. நான் துக்கமாக இருந்தாலும், நன்றியுள்ளவனாகவும் இருந்தேன். காரனம், என்னுடைய தந்தை இனி நோயால் பாதிக்கபடாமல் அவர் தன்னுடைய இரட்சகருடன் இருப்பார். நான் என் மகனை அழைத்து நடந்த செய்தியை பகிர்ந்தேன். அன்றைய தினம் “தாத்தா” எங்களுடன் வெளியே இருந்திருந்தால் எப்படி அனுபவித்திருப்பார் என்பதைப் பற்றி நாங்கள் பேசி அழுதோம்.

நான் வீட்டிற்கு சென்றபோது, என்னுடைய குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடனும் இந்த செய்தியை பகிர்ந்தேன். நாங்கள் பேசினோம், அழுதோம், ஜெபித்தோம், துக்கித்தோம். அதுவே என்னுடைய 2011 ஆம் ஆண்டின் “கோடைகால இழப்பாக” இருந்தது.

ஒரு ஆலோசகராக, பலவித இழப்புகளால் துக்கமடைந்து, போராடின பலருக்கு நான் உதவியுள்ளேன். நான் இன்றும் பயனித்துகொண்டிருக்கிற என்னுடைய துக்கத்தின் பயனத்தில் விசுவாசம் இன்றியமையாதது என்பதையே நான் கற்றுகொண்டிருக்கிறேன். தேவனுடனான நம் உறவு,, மீளமுடியாதவைகளாய் தோன்றும் வேதனைகளின் ஊடாக நாம் செல்வதற்கான திறனை அளிக்கிறது

banner image

துக்கம் என்பது நம் வாழ்நாள் முழுவதும் நாம் சந்திக்கும் இழப்புகளைச் சமாளிக்கும் சிக்கலான, வேதனையான செயல்முறையாகும். மற்றவர்களுடன் வாழவும், அவர்களுடனான உறவை அனுபவிப்பதற்கான தேவ அழைப்பு, ஒரு நாள் நாமும் அவர்களுடைய இழப்பிற்காக துக்கிப்போம் என்பதை உணர்த்துகிறது; வாழ்கையின் சில பகுதிகள் பாதிக்கப்படாததாக உள்ளன. மாறுப்பட்ட சூழ்நிலைகளிலேயோ அல்லது நமது மரணத்திலேயோ, இறுதியாக எல்லவற்றையும் இழந்துவிடுகிறோம்.

துக்கத்தின் அடிப்படை உண்மைகளில் ஒன்று நமது குடும்பம், நண்பர், நெருங்கியவர், பிரிந்துசென்றவர், அன்புக்குரியவர் என்று யாராக இருந்தாலும், அவர்களுடனான நம் உறவு தான்நாம் ஆழ்ந்து அனுபவிக்கும் நமது இழப்பின் துக்கத்தின் அளவை அளக்கும்.

இழப்பு என்பது அன்புக்குரியவர்களின் மரணத்திற்கு மட்டும் உரியதல்ல. நாம் எப்போதெல்லாம் ஒரு தொடர்பை இழக்கின்றோமோ, அப்போதேல்லாம் நாம் துக்கிப்போம். சிறிய இழப்புகள் சாதாரணமாக இருந்தாலும், அவைகளை சமாளிக்க கற்றுக்கொண்டால், பிற்காலத்தில் நம் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் கடினமான இழப்புகளுக்குத் நம்மை தயாராக்கும்.

எல்லாருடைய துக்கமும் வித்தியாசமானது

துக்கம் என்னும் பயனம் எல்லாருக்கும் பொதுவானது என்றாலும், நீங்கள் எவ்வாறு துக்கப்படவேண்டும் என்று யாராலும் சரியாக சொல்லமுடியாது ஏனென்றால், அதில் நடந்து செல்லும் அனைவருக்கும் அது தனித்துவமான பாதையாக உள்ளது. துக்கப்படுவதற்கு ஒரு சரியான வழிமுறை இல்லை. இருப்பினும், துக்கம் எவ்வாறு செயல்படுகிறது, எது அதை கட்டுபடுத்துகிறது என்பதை புரிந்துகொள்வது, ஒரு இழப்பிற்கு பின் நீங்கள் சந்திக்கும் காரியங்களுக்கு உங்களை தயார்படுத்தும்.

துக்கம் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது

வாழ்க்கையின் ஒரு பெரிய முரண்பாடு என்னவென்றால், நீங்கள் உங்களை பக்தியுள்ளவர்களாக கருதினாலும், கருதாவிட்டாலும் அனைவருக்குள்ளும் இருக்கின்ற விசுவாசத்தின் பகுதிகளை துக்கம் வெளிப்படுத்துகிறது. அது நீங்கள் இழப்பின் யதார்த்தத்தை சந்திக்கும்போது உங்கள் நம்பிக்கையை எங்கு வைக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது – அதுதான் விசுவாசம்.

ஒருவரும் துக்க நிலைகளில் ஒரே வரிசையிலோ, ஒரே வேகத்திலோ முன்னேறுகிறதில்லை.

இழப்புகாலங்களில், மேன்மையான நிலைக்கு செல்வதற்கான பாதையை வேதம் வெளிப்படுத்துகிறது. இந்த அனுபவம், மரணம் போலவும், சங்கீதம் 23:4 இல் தாவீது கூறின “மரண இருளின் பள்ளதாக்கு” என்ற ஆபத்தான பாதை போலவும் உள்ளது. இந்த பிடித்தமான சங்கீதம் “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” என்பதையே நமக்கு நினைவூட்டுகிறது. நல்ல மேய்ப்பர் நம்பத்தகுந்த வகையில் கண்ணீரின் பள்ளத்தாக்கின் வழியாக நம்மை வழிநடத்துகிறார். அவர் நமது பயத்தை அகற்றி, நமது இருதயங்களை தேற்றி, சில நேரங்களில் அதை மேற்கொள்ளுவோமோ என்று நாம் உறுதியாக இல்லாதிருந்தாலும், அதை மேற்கொள்வோம் என நமக்கு உறுதியளிக்கிறார்.

வாழ்கையில் உள்ள பலவித உறவுகள், சூழ்நிலைகளால் துக்கம் தவிர்க்க முடியாததாகவும், சிக்கலாகவும் இருக்கிறபடியால், துக்கப்படும் ஒவ்வொருவரும், “வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? வேதனை நீங்குமா? இதை நாம் மேற்கொள்ள முடியுமா? என்று சிந்திக்கின்றனர்.

banner image

நாம் இணைக்கப்பட்டிருக்கும்படி படைக்கப்பட்டுள்ளோம். ஆதிமுதல் தனிமையாக இருப்பதென்பது ஒருபோதும் சாத்தியாமான விருப்பமாக இருந்ததில்லை (ஆதி.2:18). நாம் நெருக்கமாக இருப்பதற்கும், கூட்டாக வாழ்வதற்கும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றோம். அர்த்தமுள்ள பிணைப்புகள் மூலம், நமது தனிப்பட்ட வரலாறுகள் ஆழமான அர்த்தத்தையும், அதிக முக்கியத்துவத்தையும் பெறுகின்றன. இவை நம் வாழ்வை குறிக்கின்ற புள்ளிகளாகின்றன. இந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டாலோ, உடைக்கப்பட்டாலோ அல்லது இழக்கப்பட்டாலோ அது தாங்கமுடியாத வேதனையை உருவாக்குகிறது, மேலும் அந்த வேதனையே துக்கத்தை உருவாக்குகிறது. “நமக்கு நெருங்கியவரின் மரணம் என்பது நாம் அனுபவிக்கும் அன்பின் பொதுவானதும், முழுமையான பகுதியாகவும் உள்ளது… அது செயல்பாட்டை துண்டிக்காமல் மாறாக அதின் ஒரு கட்டமாக உள்ளது; நிகழ்ச்சியின் இடையூறாக இல்லாமல் அடுத்த பகுதியாக உள்ளது.”

குழப்பத்தை எதிர்பாருங்கள். சி. எஸ். லூயிஸ் தனது துக்கத்துடனானப் போராட்டத்தை இவ்வறாக விவரித்துள்ளார். “துக்கத்தில் எதுவும் ‘ஓரிடத்தில் நிலைத்திருக்காது.’ ஒருவர் ஒரு கட்டத்திலிருந்து வெளிவருகிறார், ஆனாலும் அது அவருக்கு மீண்டும் நிகழ்கிறது. சுற்றி சுற்றி. எல்லாமே மீண்டும் மீண்டும் நிகழும். நான் வட்ட பாதையில் சென்றுகொண்டிருக்கிறேனா அல்லது நான் ஒரு சுழல் பாதையில் இருப்பதாக நம்புகிறேனா? ஆனால், சுழல் என்றால், நான் மேல் நோக்கிச் செல்கிறேனா அல்லது கீழ் நோக்கிச் செல்கிறேனா?”

ஒருவரும் துக்க நிலைகளில் ஒரே வரிசையிலோ, ஒரே வேகத்திலோ முன்னேறுகிறதில்லை.

இது எனக்கு உண்மையாகதான் இருந்தது, நான் ஆலோசனைக் கொடுத்தவர்களின் வாழ்க்கையிலும் இதைக் கண்டுள்ளேன். இந்த பயனம் சில சமயங்களில் வரையறுக்கப்படாததாகவும், திசை திருப்பக்கூடியதாகவுமிருந்து, துக்கப்படுபவர்களின் பாதையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஒருவரும் துக்க நிலைகளில் ஒரே வரிசையிலோ, ஒரே வேகத்திலோ முன்னேறுகிறதில்லை. காரியங்கள் புரியாதபோதோ, மீண்டும் மீண்டும் நிகழும்போதோ நாம் பயப்படத்தேவையில்லை. குழப்பங்கள் வருகிறது என்று நமக்குத் தெரிந்தால், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருப்பது நல்லது. துக்கப்படுவதற்கான நடைமுறை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அது குளறுபடியாகவும், சில நேரங்களில் பைத்தியம் பிடிப்பதுப் போலவும் கூட உணரலாம். ஆனால் நீங்கள் அப்படியாக மாடீர்கள். துக்கிப்பதற்குப் பொதுவான முறை என்பது இல்லை.

அதிர்ச்சி இயல்பானது. ஒரு இழப்பின் செய்திக்கு பிறகு அதிர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இது நம்பமுடியாத சூழ்நிலைகளில் நாம் தொடர்ந்து செல்வதற்கான நமது ஆரம்ப தற்காப்பு பதில். தேவன் நமக்கு இதமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் அதிர்ச்சியை வடிவமைத்துள்ளார். நாம் பிழைக்க இப்படிப்பட்ட உதவி இல்லையெனில் துக்கம் உண்டாக்கும் மனஅழுத்ததால் நம்மால் செயல்பட முடியாது. அதிர்ச்சி அதின் வேலையை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

நல்லெண்ணம்படைத்த நண்பர்கள் அதிர்ச்சியைக் குறைக்கவோ, துக்கிப்பவர் முடக்கபட்டுள்ளார் என்பதற்கானத் தெளிவான அறிகுறி இல்லாமல் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தவோக் கூடாது.

மறுக்கப்பட்ட துக்கம் குணப்படுத்தப்படாத துக்கமாக உள்ளது.

பாசாங்குச் செய்யாதீர்கள். மறுப்பை எதிர்க்கவும். உண்மையாக இருங்கள். “வலிமையாக” இருப்பதன் மூலம் துக்கத்தின் வலியை விஞ்ச முயற்சிப்பது பயனற்றது. இது உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாகதான் இருக்கும். ஃபிரடெரிக் தனது தந்தையின் தற்கொலையைச் சமாளிக்கத் தோற்ற முயற்சிகளில், மறுப்பை ஒரு பிரச்சனையாக அடையாளம் கண்டுகொண்டார். வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களுக்கு எதிராக உங்கள் மனதை கடினப்படுத்திகொள்வது சில வேதனைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் எனினும், அதே மனகடினம் “வாழ்வளிக்கும் பரிசுத்த வல்லமை” உங்களை மாற்றுவதை தடுக்கும் சுவறாகவும் மாறக்கூடும் என்று கூறினார். மேலும் அந்த வல்லமை உங்களில் கிரியை செய்வதற்கு அதை நீங்கள் அனுமதிப்பதின் அவசியத்தை வலியுறுத்துகிறார்: “நீங்கள் உங்கள் சொந்தபலத்தால் உயிர்வாழமுடியும். நீங்கள் தானாகவே வளர்ச்சியடைய முடியும். நீங்கள் தானாகவே வெற்றியடையலாம். ஆனால் நீங்கள், நீங்களாகவே ஒரு மனிதனாக மாற முடியாது.”

ஒரு துக்கமுள்ள நபர், இழப்பினால் சந்தித்த யதார்த்தத்தை அதின் முகத்திற்கு நேரே எதிர்கொள்வது மிக முக்கியம். இருப்பதை இருப்பதாகவே ஏற்றுகொள்ள வேண்டும். இது மறுக்கபடுவதை நிறுத்துவதற்கு உதவுகிறதுமல்லாமல், துக்கத்தின் பயனத்தில் எடுத்துவைக்கும் ஒரு பெரிய படியாகவும் உள்ளது

உங்கள் உணர்வுகளைப் பற்றி நேர்மையாக இருங்கள்

தேவனும் துக்கப்படுகிறார். மலை ஏறும் விபத்தில் தனது மகனை இழந்த நிக்கோலஸ் வால்டர்ஸ்டோர்ஃப் என்பவர் “நமது கண்ணீரின் வாயிலாகதான் தேவனின் கண்ணீரை காண்கிறோம்” என்று கூறினார். நாம் துக்கப்படும்போது, தேவனோடு இனைந்து உருக்குலைந்தவைகளுக்காக புலம்புகிறோம், அனைத்தும் சீரமைக்கப்படும் நாளை எதிர்நோக்கி துக்கிக்கிறோம்.

எவ்வளவு கடினமாக இருந்தாலும், அன்புக்குரியவரின் இறந்த உடலைப் பார்ப்பது துக்கப்படுபவர்களுக்கு இழப்பின் முடிவை ஏற்றுகொள்ள உதவுகிறது. , அன்புக்குரியவரின் இறந்த உடலைப் பார்க்காத பலர், பெரும்பாலும் உண்மைநிலையை ஏற்றுகொள்வதில் போராடுவதாக புகாரளிக்கிறார்கள். இது ஒரு நீண்ட கெட்ட கனவாக இருக்கக்கூடும் என்று உணருவதாக கூறுகிறார்கள்.

எல்லாம் புதியதாக மாற்றப்பட வேண்டும் என்ற மீட்பிற்கான ஏக்கமும் (வெளி. 21:4-5), அந்த புதுப்பித்தல் எதிர்காலத்தில் உள்ளது என்ற விழிப்புணர்வும் தான் நமது சகல துக்கத்தின் மையமாக உள்ளது. இந்த உலகம் அழகானது, ஆனால் அதுவும் உடைக்கப்பட?